இன்றைக்கு டெக்கான் க்ரோனிக்கிள் நாளிதழில் வெளியான செய்தி இது:
செய்தியைப் பார்த்துவிட்டு தெலுகு தேசம் கட்சியின் முக்கியத்தலைவர்கள் கொதித்துப்போய் நாளிதழின் ஆசிரியரை நீக்கவேண்டும், பத்திரிக்கை ஓனர் வெங்கட்ராமி ரெட்டி மன்னிப்புக் கேட்டே ஆகவேண்டும் என்றெல்லாம் கூக்குரலிட்டுக் கொண்டிருக்கிறார்கள். செய்தி உண்மையா? DC நாளிதழ் சில ஆண்டுகளாகவே ஏப்ரல் முதல் தேதியன்று இதுமாதிரிச் செய்தியை முழு உண்மைபோலவே வெளியிடுவது, முட்டாள்கள் தினக் கொண்டாட்டத்தின் ஒரு அங்கமாகவே பார்க்கப் படுவதால், தெலுகு தேசம் கட்சித் தலைவர்களுடைய கூக்குரல் பெரிதாகக் கண்டுகொள்ளப்படவில்லை!ஆந்திர அரசியலில் சந்திரபாபு நாயுடுவுக்கு நேரம், கட்டம் எதுவுமே சரியில்லை போல இருக்கிறது! சில நாட்களுக்கு முன்புதான் NTR கதாநாயகுடு என்ற திரைப்படம் வந்து, NT ராமராவ் தெலுகு ஆத்ம கௌரவத்துக்காக இந்திராவை எதிர்த்து தெலுகு தேசம் கட்சியை ஆரம்பித்ததை ஜனங்களுக்கு மீண்டும் ஞாபகப்படுத்தி விட்டுப் போயிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக, ஹைடெக் சந்திரபாபு நாயுடுவை கிராமங்களுக்கு யாத்திரை நடத்தித் தோற்கடித்த YSR என்கிற ராஜசேகர ரெட்டியின் கதை மம்மூட்டி நடித்து வெளியாகி இருப்பதும் கூடவே வந்து உருத்தூட்டுகிறதாம்! இப்படி 2019 இல் இதே பக்கங்களில் யாத்ரா திரைப்பட அறிமுகமாக எழுதியிருந்தது இன்றும் கூடப் பொருத்தமாகத்தான் இறுக்கிறது போல. யாத்ரா ஒரு திரைப்பட விமரிசனமாக இங்கே சந்திரபாபு நாயுடு கதை அவ்வளவுதானா என்கிற அலசல் கூட இங்கே நடந்தது
NT ராமாராவ் தொடங்கிய தெலுகு தேசம் கட்சியும் மாமனாரிடமிருந்து TDPயைப் பறித்துக்கொண்ட சந்திரபாபு நாயுடுவும் 2019 தேர்தல் தோல்விக்குப்பிறகு இன்னமும் மீண்டெழ முடியாமல் தவிப்பது ஆந்திர அரசியலின் ஒருமுகம்.
40 ஆண்டுகளைக்கடந்த தெலுகு தேசம் கட்சியின் வரலாற்றில், இப்போதிருக்கிற மாதிரி ஒரு சோதனையான காலகட்டம் இருந்ததே இல்லை என்று சொல்கிறார்கள். N.T. ராமாராவுடைய குடும்ப சப்போர்ட் TDPக்கு இருந்தாலும், N.T. ராமாராவ் கதையை இரண்டு பாகங்களாகப் படம் எடுத்துக் கையைச் சுட்டுக் கொண்டதுதான் மிச்சம், ஜனங்களுடைய ஆதரவு, அனுதாபம் எதுவுமே படத்துக்கும் சரி, கட்சிக்கும் சரி கிடைக்கவில்லை. இந்த லட்சணத்தில் ஜுனியர் NTR (ராமாராவின் பேரன்) நேரடியாக அரசியலில் இறங்கினால் தான் தெலுகு தேசம் கட்சியைக் காப்பாற்ற முடியும் என்று ஜாதி உணர்வில் (கம்மா) கொடி பிடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். Except Chandrababu Naidu, everybody in the TDP are believing that the party can be rescued only with the entry of Jr NTR into the politics.Though there are many indications surrounding this opinion, recently the TDP leader Gorantla Butchiah Chowdary voic, மார்கெட் ed out this opinion publicly in Rajahmundry. As per the inside sources it is said that many biggies from the community close to the TDP are forcing Jr NTR by emotionally blackmailing him என்கிறது ஒரு ஆந்திரச்செய்தி.தெலுங்கு சினிமாவில் எல்லாத் தரப்பு ஜனங்களுடையஆதரவையும் பெற்ற, மார்க்கெட் உள்ள ஹீரோவாக இருக்கும் Jr NTR எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார் அரசியலை நம்பி சினிமாவைக் கைவிட அவர் தயாராக இல்லை என்று அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள்.
சரி, இந்தக்கதையெல்லாம் இப்போது எதற்கு?
வருகிற ஏப்ரல் 17 அன்று திருப்பதி (தனி) மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறவிருப்பதில். ஆளும் YSRCP கட்சிக்கும் ஆட்சியைப்பறிகொடுத்த தெலுகு தேசம் கட்சிக்கும், கௌரவப்பிரச்சினை ஆகி இருக்கிறது.
Naidu’s commitment notwithstanding, party insiders doubt whether he, already in his 70s (he turns 71 on April 20), can have a battle trim TDP ready for the 2024 assembly and Lok Sabha polls. They say that the best days for the party are perhaps over, recalling that the TDP was the first regional party to become the main opposition in the eighth Lok Sabha from 1984 to 1989 and that Naidu was the longest serving chief minister of erstwhile Andhra Pradesh (14 years).They believe it will be a Herculean task for the party in the face of the aggressive strategy of the ruling Yuvajana Sramika Ruythu Congress (YSRC) to retain popular appeal with sops and welfare measures. And there are other constraints. Naidu has never encouraged middle level leadership in the TDP though he launched several initiatives to broaden the party’s base by adopting social engineering techniques to woo different communities. Moreover, analysts point out, he has failed to shed the pro-Kamma bias tag that the TDP has worn since the days of NTR என இன்றைக்கு இந்தியா டுடே தளத்தில் அமர்நாத் K மேனன் எழுதிய ஒரு செய்திக்கட்டுரை சொல்கிறது. சுருங்கச் சொல்வதானால் A string of electoral defeats since 2019 means the party is staring at an existential crisis. It will have to work hard to stop Jagan Reddy from getting a second term in 2024 அவ்வளவுதான்!
படிப்பினை : மோடி எதிர்ப்பு கேடு தரும்!
மீண்டும் சந்திப்போம்.
இது மாதிரி, அதிமுக வெற்றி பெறும்னு ஏகப்பட்ட கருத்துக் கணிப்பு (Fake ones) வாட்சப்ல உலாவ விட்டிருக்காங்க.
ReplyDelete//இது மாதிரி// எதுமாதிரி நெல்லைத்தமிழன் சார் ?
Deleteஇந்தப்பதிவில் தெலுகு தேசம் கட்சியின் existential crisis பற்றி அல்லவா பேசியிருக்கிறேன்? இங்கே அதிமுக, சர்வே, வாட்சப் இவையெல்லாம் எங்கே வந்தது?
ஏப்ரல் மாதத்தில் தேர்தல் வைத்திருப்பதும் பொருத்தம்தான்!
ReplyDeleteவேறெந்த மாதத்தில் தேர்தல் நடத்தப்பட்டிருந்தாலுமே அரசியல்வாதிகள் ஓட்டுப்போட்ட ஜனங்களை முட்டாள்களாக ஆக்கியிருப்பார்களே ஸ்ரீராம்! இதில் ஏப்ரலை மட்டும் சொல்லுவானேன்?
Delete