Sunday, April 4, 2021

யாருக்கு வாக்களிப்பது? அதற்கு முன் யார் யாரை நிராகரிப்பதென்பதை முடிவு செய்யுங்கள்!

எந்தத்தேர்தலிலும் பார்த்திராத அளவுக்கு இந்த சட்ட மன்றத் தேர்தலில் இரண்டு கழகங்களும் கூட்டணி  முடிவாகும் முன்னரே தங்களுடைய தேர்தல் பிரசாரத்தை கடந்த மூன்று மாதங்களில் தனித்து நடத்தி முடித்து விட்டன. பத்துவருடங்களாக ஆட்சியைப் பிடிக்க முடியாத பெரும்பசி, வெறியோடு திமுக பெரும்பணச் செலவில் பிரசாந்த் கிஷோர் வகுத்துக் கொடுக்கும் உத்திகளோடு களம் இறங்கியிருக்கிறது. அநேகமாக தமிழகத்தில் இருக்கும் மொத்த ஊடகங்களையும் திமுக தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவந்து, திமுகதான் ஆட்சியைப் பிடிக்கப் போகிறது என்ற செய்தியை பல்வேறு விதமான வழிகளில்  ஜனங்களுடைய மனதில் பதிய வைக்கும் உளவியல் யுத்தத்தில் வென்றதுபோல ஒரு மாயையை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.


வணிக ஊடகங்களை திமுகவால் விலைக்கு வாங்க முடிந்தாலும், தனிமனிதர்களாக சமூக ஊடகங்களில் செய்துவரும் திமுக எதிர்ப்பை ஒன்றும் செய்ய முடியாமலும், அவைகளின் தாக்கம் எந்த அளவுக்கு சேதாரத்தை ஏற்படுத்தும் என்பதை சரியாக கணிக்க முடியாமலும் தவித்துவருகிறார்கள் என்பது தான் கள யதார்த்தம்


உதயநிதி அடுத்த முதல்வரா? கேட்கவே படுதமாஷாக இருக்கிறதே! ஆனால் சங்கர மடம் போல இல்லாத திமுகவில் என்ன நடக்கும் என்பது தான் ஊரறிந்த ரகசியமாயிற்றே!

தேர்தல் நேரக்காமெடிகளை சற்றே ஒதுக்கி வைத்து விட்டு வாக்காளர்களாகிய நமக்கு முன்னால் இருக்கிற கடமை, வாய்ப்புக்கள் என்னவென்பதைக் கொஞ்சம் பார்க்கலாமா?

அன்புள்ள வாக்காளரே!
வணக்கம். இன்னும் 2 நாட்களில் விரலைக் கறை படுத்திக் கொள்ளப் போகிறீர்கள். ஆனால் கறை நல்லது, நீங்கள் சரியான அரசைத் தேர்ந்தெடுப்பீர்களேயானால்.
பொதுவாகத் தேர்தலின் போது எதிர்காலத்தை எண்ணிப் பார்த்து வாக்களியுங்கள் என்று அறிவுரை சொல்வார்கள். ஆனால் நான் கடந்த காலத்தை நினைத்துப் பார்த்து முடிவு செய்யுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இன்று நம் முன் ஐந்து வாய்ப்புக்கள் நிற்கின்றன. அவற்றில் எதைத் தேர்ந்தெடுப்பது என்பதை விட எவற்றையெல்லாம் நிராகரிப்பது என்று சிந்தித்தால் நாம் தேர்ந்தெடுக்கக் கூடியது எது என்பது தானே தெளிவாகிவிடும்.
நாம் தமிழர் என்றொரு கட்சி களத்தில் நிற்கிறது. அந்தக் கட்சி விடுதலைப் புலிகளின் சித்தாந்தால் மன ஊக்கம் பெற்று (inspiration) உருவானது. அதன் ஆதர்ச தலைவர் பிரபாகரன். அவரது அணுகுமுறை இந்தக் கட்சித் தலைவரிடமும் பிரதிபலிக்கிறது. மாற்றுக் கருத்துக் கொண்டவர்களை மரத்தில் கட்டி வைத்து தோலை உரித்து பனைமட்டையால் விளாச வேண்டும், தன் முடிவை ஏற்காதவர்களை கிரீஸ் டப்பாவை நசுக்குவது போல் நசுக்கிவிடுவேன் என்றெல்லாம் அவர் பகிரங்கமாகப் பேசுகிறார். சுருக்கமாகச் சொன்னால் அது அரசியல் கட்சியல்ல, ஒரு வழிபாட்டுக் கும்பல் (Cult) அதை நிராகரித்து விடலாம்
அமமுக, மக்கள் நீதி மய்யம் இரண்டும் தனிநபர்களின் சுயநலத்தால் உருவானவை. சசிகலா அரசியலிலிருந்து ஒதுங்கிக் கொண்டு விட்டார். அந்த நிலையில் அவரைத் தலைவராக ஏற்றுக் கொண்டுள்ள கட்சியும் தேர்தலிலிருந்து ஒதுங்கியிருக்கத்தானே வேண்டும்? சசிகலா, திமுகவை வீழ்த்துவதுதான் நமது நோக்கம் என்று அறிவித்து இருக்கிறார். அவரைத் தலைவராக ஏற்றுக் கொண்ட கட்சி, திமுகவை வீழ்த்தும் நோக்கம் கொண்ட அதிமுகவைத்தானே வலுப்படுத்த வேண்டும்? அதற்கு மாறாக திமுகவிற்கு எதிரான வாக்குகளைப் பிரிக்க முற்படுவது ஏன்?
ஏனென்றால் தேர்தல் வெற்றியை அல்ல, தேர்தலுக்குப் பின் பேரம் நடத்தி, ஜெயலலிதாவால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டத் தன்னை மீண்டும் கட்சிப் பொறுப்பில் பிணைத்துக் கொள்வதை எதிர்பார்த்து, தினகரன் களம் இறங்குகிறார். அவரது சொந்த நலனைக் காப்பாற்ற நாம் வாக்களிக்க வேண்டியதில்லை
கமல்ஹாசனின் கட்சி தோன்றக் காரணம் விஸ்வரூபம் படத்திற்கு ஏற்பட்ட இடைஞ்சல். அப்படி இடைஞ்சல் ஏற்பட்டிருக்காவிட்டால் என் சொத்து மதிப்பு ரூ 200 கோடி இருந்திருக்கும் (இப்போது 177 கோடி) என்கிறார். தனக்கு ஏற்பட்ட பண இழப்புக் காரணமாக பழி வாங்க அரசியலில் நுழைந்திருக்கிறார். அதற்கு முன்பு அவர் அரசியல் பிரசினைகள் குறித்து சினிமாவிலோ, வெளியிலோ ஏதும் கருத்துச் சொன்னதில்லை என்பதை இதோடு பொருத்திப் பார்த்தால் உண்மை புரியும்.
தன்னை காந்தியின் பி டீம் என்கிறார் கமல்..காந்தி தனது எல்லாக் கூட்டத்தையும் பிரார்த்தனையோடு தொடங்கினார். ரகுபதி ராகவ ராஜாராம் பிரபலமானது அவரது கூட்டங்களின் மூலம்தான். கமல்ஹாசனுக்கு இறை நம்பிக்கை இருப்பதாகத் தெரியவில்லை. கடவுள் இல்லை என்று சொல்லவில்லை, இருந்தால் நன்றாக இருக்கும் என்ற அவரது திருவாசகத்தின் பொருள் புரியாமல் விழிக்கிறான் பாமரன். கடவுளை நம்பாதவர் காந்தியின் பீ டீம் ஆக இருக்க முடியுமா?
ஒரு பக்கம் தன்னை காந்தியின் பி டீம் என்று சொல்லிக் கொள்பவர், தன்னை பெரியாரின் சீடர் என்றும் சொல்லிக் கொள்கிறார். காந்தியை பிரிட்டீஷ் அரசின் ஒற்றர், கவர்மெண்டின் ரகசிய அனுகூலி, உழைக்கும் மக்களின் துரோகி என்றெல்லாம் எழுதியவர் பெரியார் (19.2.1933, குடி அரசு தலையங்கம்) பெரியாரின் சீடர் எப்படி காந்தியின் பி.டீமாக இருக்க முடியும்?
திமுக ஆட்சிக்கு வந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்தால் அதன் 2006-11 ஆட்சிக்காலம் நினைவுக்கு வருகிறது. மின்வெட்டு, நிலப்பறிப்பு, அதிகாரிகளை மிரட்டுவது, அரைப் பிளேட் பிரியாணிக்கும் பராட்டோவிற்கும் அடிதடி, அராஜகம், ரெளடியிசம் இவையெல்லாம் நினைவிலாடுகின்றன.
ஆரம்ப நாட்களிலிருந்து இன்று வரை திமுகவில் நீடிக்கும் ஒரே விஷயம், இந்து மத வெறுப்பு, இந்துக் கடவுள்களை இழிவுபடுத்திப் பேசுவது.
நான் எல்லாவற்றையும் விட முக்கியமாகக் கருதுவது அது குடும்ப ஆட்சியை நிறுவ முயல்வதை. குடும்ப உறுப்பினர்கள் அரசியல் கட்சியில் இருப்பதற்கும் ஓர் அரசியல் கட்சி குடும்பத்தின் கையில் இருப்பதற்கும் பெருத்த வித்தியாசங்கள் உண்டு. அப்போதும் கூட அது அந்தந்த கட்சிக் காரர்களின் தலையெழுத்து என்று நாம் பொருட்படுத்தாமல் இருந்து விடலாம். நாம் கட்சியின் உறுப்பினர்களாக இல்லாதவரை அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருந்து விடலாம். ஆனால் அவர்களுக்கு ஆட்சி அதிகாரம் பெற்றுத்தர முற்படும் போது நாம் அதை நிராகரிக்கும் வகையில் செயல்பட்டாக வேண்டியிருக்கிறது. நம் தனிவாழ்வு, தொழில், சமுக வாழ்வு இவற்றின் மீது நேரிடையாகவும், மறைமுகமாகவும் அதிகாரம் செலுத்தி வரும் அமைப்புஅரசு . அந்த அதிகாரத்தை ஒரு குடும்பத்தின் கையில் ஒப்படைத்தால் என்னவாகும்?
அதிமுக அரசு இருண்டகாலத்திலிருந்து தமிழகத்தை விடுவித்தது. அதன் ஆட்சிக்காலத்தில் எதிர்மறையாக ஏதும் பெரிதாக செய்துவிடவில்லை. நீட் ஜிஎஸ்டி எல்லாம் தமிழ்நாட்டிற்கு எனப் பிரத்யேகமாக கொண்டு வரப்பட்டவை அல்ல. நாடு முழுமைக்குமானவை. நீட் தேர்வு காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலும் நடத்தப்படுகிறது (உதாரணம் பஞ்சாப், ராஜஸ்தான்) திமுக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் கேரளத்திலும் நடக்கிற்து. GST விகிதங்களைத் தீர்மானிப்பது ஒரு தனிநபரல்ல. ஓர் அரசுத் துறை அல்ல. ஒரு குழு -கவுன்சில் - தீர்மானிக்கிறது. அந்தக் கவுன்சிலில் எல்லா மாநில பிரதிநிதிகளும் இருக்கிறார்கள். உதாரணமாக தில்லியின் சார்பில் மனீஷ் சிசோடியா (பாஜக) புதுச்சேரியின் சார்பில் நாராயணசாமி (காங்கிரஸ்( வங்கத்தின் சார்பில் அமித் மித்ரா (திருணாமூல்) கேரளத்தின் சார்பில் தாமஸ் ஐசக (மார்க்சிஸ்ட்)
எப்போதும் அதிமுகவின் அணுகுமுறை என்பது சட்டரீதியாக சாதிக்க முடிந்தவற்றிற்கு நீதிமன்றங்களை நாடுவது (உதாரணம்: காவிரி,) சட்டப்போரட்டத்தின் மூலம் சாத்தியமாகதவற்றிற்கு மாற்று வழிகளைக் காண்பது (உதாரணம் : 69% இட ஒதுக்கீட்டிற்கு ஒன்பதாம் அட்டவ்ணை மூலம் சட்டப் பாதுகாப்பு, மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% ஒதுக்கீடு)
எடப்பாடி அரசு மத்திய அரசோடு இணக்கமாக இருந்து திட்டங்களைப் பெற்று வருகிறது (உதாரணம் 11 மருத்துவக் கல்லூரிகள், மெட் ரோ ரயில் விரிவாக்கம்) தமிழக அரசின் வருவாய் முதன்மையாக மூன்று வழிகளில் வருகின்றன. 1.ஜி எஸ் டி (அதில் ஒரு பங்கு மத்திய அரசுக்குரியது) 2. பதிவுக் கட்டணங்கள் (நிலம், வீடு, வாகனங்கள்) 3. டாஸ்மாக். இந்த வருமானத்திலிருந்து அது அரசு ஊழியர் சம்பளம், விலையில்லா அறிவிப்புகள், போன்றவற்றையும் பிற செலவுகளையும் எதிர் கொண்டு பின் வளர்ச்சித் திட்டங்களுக்கும் செலவிடுவது என்பது மிக சிரமம். அனேகமாக சாத்தியமில்லை. வளர்ச்சித் திட்டங்களுக்கு மத்திய அரசின் ஒப்புதலும் (கடன் வாங்கக் கூட) நிதியும் தேவை . இதற்கு இரு அரசுகளுக்குமிடையே நல்லுறவு தேவை.
மத்திய அரசோடு மோதல் போக்கை கடைப் பிடிப்பது அரசியல் கட்சிகளுக்கு வேண்டுமானால் தங்கள் பிம்பங்களைக் கட்டமைத்துக் கொள்ள உதவலாம். மாநில வளர்ச்சிக்கு உதவாது. அதற்கு யதார்த்தங்களைப் புரிந்து கொண்டு நடைமுறை சாத்தியமாக முடிவெடுக்கும் pragmatic அரசுதான் தேவை.
தேர்தல் என்பது இருப்பதில் எது சிறந்ததோ அதைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புதான். வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
அன்றாட வாழ்வில் பெரும் பிரசினைகளை ஏற்படுத்தாத அதிமுக ஆட்சி தொடர வாக்களியுங்கள்
எண்ணித் துணிக கருமம். அன்புடன் மாலன் .

எழுத்தாளர் மாலன் சொல்கிற விஷயங்களோடு முழுமையாக உடன்படுகிறேன் அதனால் இங்கேயும் பகிர்கிறேன் அதிமுக மீது எனக்கு வேறுவிதமான கருத்து இருக்கிறது. அதற்காக திமுக மாதிரியான ஒரு நாசகார கட்சியை ஒருபோதும் அனுமதிக்க முடியாது இல்லையா?

நீங்களும் இதை ஏற்பதோடு குடும்பத்தினர், உறவுகள், நண்பர்களுக்கும் எடுத்துச் சொல்லுங்கள்! செய்தியைப் பொதுவெளியில் பகிர்ந்துகொள்ளுங்கள் .
தமிழகம் பிழைத்திருக்க திமுகவை அதன் கூட்டணிக் கட்சிகளோடு முழுமையாக நிராகரிப்பதுதான் ஒரே நல்லவழி! நம்மால் செய்ய முடிவதும் கூட!

மீண்டும் சந்திப்போம்.
        

2 comments:

  1. தீமூக்காவை ஓரங்கட்டுவோம்!...

    ReplyDelete
    Replies
    1. இன்றைக்கு நடக்கும் கூத்துக்களைப்பார்த்தால் திமுக மறுபடியும் கூப்பில் தான் உட்கார வேண்டிவரும்போல துரை செல்வராஜூ சார்!

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)