முதலில் தற்போதைய காமெடி ஒன்றைப் பார்த்து விடுவோம்! அரவக்குறிச்சியிலிருந்து கரூருக்கு ஓடிப் போன செந்தில் பாலாஜி, அரவக்குறிச்சி பிஜேபி வேட்பாளர் அண்ணாமலை IPS, தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகப் பயந்துபோய் புகார் அளித்ததில் அண்ணாமலை IPS மீது மூன்று பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டுள்ளதாம்!
சமீப காலங்களில் இதுமாதிரி திமுக ஆசாமிகள் பயந்து புகார் கொடுத்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இது தான் முதல்முறையாகக் கூட இருக்கும்! அண்ணாமலை அப்படி என்ன மிரட்டிவிட்டாராம்? கீழே 13 நிமிட வீடியோ
அடாவடித்தனம்,அராஜகம். அபாண்டமாக அவதூறு அரசியல் பேச்சு எல்லாவற்றிற்கும் மொத்தக்குத்தகை எடுத்திருப்பது திமுகதான்! அவர்களுடைய அடாவடி, அராஜகத்துக்கு ஒரு வலிமையான சவாலாக இந்த இளைஞர் வேகமாக வளர்ந்து வருவது திமுகவினருக்கு ஆரம்பமுதலே மிகவும் உறுத்தலாக இருந்திருப்பது முதல் அரவக்குறித்ச்சி என்றாலே பண அரசியல்தான் என்று இருந்ததை உடைத்தது. திமுகவின் சிறுபான்மைக் காவலர் வேஷத்தை வெற்றிகரமாக அம்பலப்படுத்தியது என்று அண்ணாமலை IPS அவர்களின் செயல்பாடுகள் வெகுவாகவே திமுகவினரை பயமுறுத்தியிருப்பதை அவருடைய வார்த்தைகளிலேயே கேளுங்கள்! இதுவரை திமுகவின் அரவக்குறிச்சி formula, திருமங்கலம் formula,எதையும் எவரும் challenge செய்ததில்லை! இன்று ஒரு இளைஞர் அந்தமாதிரி formula,வை உடைப்பேன் என்று உறுதியாக இருக்கிறார் என்றால், அவரே நமது நம்பிக்கைக்குரிய வேட்பாளர்! நம்பிக்கை நட்சத்திரம்!
டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் இன்று,ஒளிபரப்பான நிகழ்ச்சி இது.தீபக் போபண்ணா அரவக்குறித்ச்சியின் நம்பிக்கை நட்சத்திரமான அண்ணாமலை IPS உடன் உரையாடுகிறார். ஒரு தெளிவான பார்வையுடன் அரசியல் பேசுகிற வெகுசிலரில் அண்ணாமலை IPS உம் ஒருவர் என்பதில் சந்தேகமிருக்கிறதா என்ன?
ஒப்பீட்டளவில் இன்னும் இரு இளைஞர்களின் அரசியல் எப்படி என்று பார்த்தால் மட்டுமே அண்ணாமலை IPS அரசியல் வரவேற்கப்படவேண்டிய ஒன்று என்பது தெள்ளத்தெளிவாக விளங்கும்! வீடியோக்கள் 1 நிமிடம் மட்டுமே எங்கள்Blog ஸ்ரீராமுக்கு ஸ்பெஷலாகச் சொல்லி ஆகவேண்டும்!
கரூரில் கெஞ்சுகிறார் தேமுதிகவின் விஜயபிரபாகரன். கேள்வியைக் கேட்டிருக்க வேண்டிய இடம் பிரேமலதா (அம்மா) LK சுதீஷ் (தாய்மாமன்) தான்!அது கூடத் தெரியாதவரிடம் ஜனங்கள் ம்ட்டும் பதில் சொல்லி விடுவார்களா?
இந்தத்திமிருக்காகவே உதயநிதி மட்டுமல்ல, ஒட்டு மொத்த திமுக கூட்டணி வேட்பாளர்களுமே தோற்றாக வேண்டும்!
தமிழகத்தின் விடிவுகாலம் திமுக கூட்டணியை முழுதாக நிராகரிப்பதில் இருந்து தொடங்குகிறது!
மீண்டும் சந்திப்போம்.
// தமிழகத்தின் விடிவு காலம்.. //
ReplyDeleteஉண்மையான வார்த்தைகள்...
பதிவுகள் எழுத ஆரம்பித்த நாட்களிலிருந்தே திமுக காங்கிரஸ் இரண்டுமே நாட்டுக்கு கேடு என்று சொல்லிவருகிறேன் துரை செல்வராஜூ சார்!
Delete//வீடியோக்கள் 1 நிமிடம் மட்டுமே எங்கள்Blog ஸ்ரீராமுக்கு ஸ்பெஷலாகச் சொல்லி ஆகவேண்டும்! //
ReplyDelete:)))
எல்லா வீடியோக்களும் பார்த்தேன். உதயநிதி பேச்சு சிரிப்புதான் வருகிறது! சினிமாவில் ஹீரோவாக நடித்தவர் அல்லவா...
வீடியோக்களை பார்த்ததில் மிகவும் சந்தோஷம் ஸ்ரீராம்! கருணாநிதி குடும்பத்திலிருந்து இதுவரை எவருமே ஹீரோவாக இருந்ததோ, நடித்ததோ கிடையாது! உதயநிதி கூட சந்தானத்தோடு ஒட்டிக் கொண்டு துணை காமெடியனாகத்தான் அறிமுகமானார்.
Deleteஎங்க பாட்டன் சேத்து வச்சது என்று அனுபவிக்கிற திமுக வாரிசு! அவளவுதான்!
உதயநிதி வீட்டில் 2013ல் காங்கிரஸ் அரசு ரெய்டு செய்தது. எப்போதும் அரசியலில் உதார் விட்டால் பிறகு அனுபவிக்க வேண்டியிருக்கும்.
ReplyDeleteவிஜய பிரபாகரன் - தேதிமுக கெட்டது வாயால்தான். இந்தத் தேர்தலில் அவர்களுடைய உண்மையான பலம் தெரியும். (அப்புறம் அதிமுக தோற்றது எங்களால்தான் என்று புலம்பிக்கொண்டு சுற்றுவார்கள்)
அண்ணாமலை, பாஜகவின் நம்பிக்கை நட்சத்திரம். தமிழக சூர்யா (பெங்களூருவைப் போல). இவர்களால், திமுக மற்றும் சிறுபான்மையினர், இந்துக் கோவில் சொத்துக்களைக் கொள்ளையடிப்பது தவிர்க்கப்படும் என்று நம்பலாம்.
உதயநிதியை சந்தானத்துக்குப் பக்கவாத்தியமாக வந்த துணை காமெடியனாக மட்டுமே பார்க்கிறேன் நெல்லைத்தமிழன் சார்! அரசியலிலும் அப்படியே!
Deleteதேமுதிக கெட்டது பிரேமலதா சுதீஷ் இருவரது பேராசை மற்றும் சரியான அரசியல் புரிதல் இல்லாமையினால் பாவம் விஜயபிரபாகரன் சிறுபிள்ளை! முழுப்பழியையும் அவர்மீது சுமத்த வேண்டாமே!
அண்ணாமலை IPS அவர்களை பிஜேபியின் நம்பிக்கை நட்சத்திரமாக மட்டுமே நான் பார்க்கவில்லை! அரவக்குறிச்சியில் முன்பு திமுகவின் கே சி பழனிச்சாமிக்கும் அதிமுகவின் செந்தில் பாலாஜிக்கும் நடந்த பணப்பட்டுவாடா யுத்தம் கழகங்களுடைய அரசியல் எப்படிப்பட்டது என்பதைக்காட்டியது. அதையும் சிறுபான்மையினர் வாக்கு எங்க பாட்டன் சொத்து என்கிற மாதிரியான திமுகவின் டெக்னிக்கையும் ஒரு இளைஞர் துணிச்சலாக எதிர்த்து நிற்கிறார் என்பதில் நாளைய மாற்றங்களுக்கான விதை ஊன்றப்பட்ட்டதாகவே நான் பார்க்கிறேன்.