பார்த்தது, கேட்டது, படித்தது! எல்லாமே மனித மனங்களின் ஆளுமையாக, பகிர்ந்து கொள்வதற்காக!
Saturday, April 3, 2021
ஏன் திமுகவை, அதன் கூட்டணிக் கட்சிகளோடு முழுதாக நிராகரிக்க வேண்டும்?
தேவியர் இல்லம் பக்கங்களில் நண்பர் ஜோதிஜி திமுகவை ஏன் நிராகரிக்க வேண்டும் என்பதற்கான காரணங்களைத் தொடர் பதிவுகளாக எழுதி வருகிறார். நண்பர்கள் வட்டம் அதிகமுள்ள அவருக்கே, வாசகர்கள் interaction / பின்னூட்டங்கள் மிகவும் குறைவாக இருப்பதில் எதற்காக கருத்துச் சொல்லி வீண் வம்பை விலைக்கு வாங்கவேண்டும் என்பதான அச்சம் நீடிப்பதாகவே கருத வேண்டியிருக்கிறது தமிழில் வலைப்பதிவுகள் அதிகமாக வர ஆரம்பித்த நாட்களில் திராவிட வலைப்பதிவர்கள் என்ற போர்வையில் பலர் அராஜகமாக,பின்னூட்டம் எழுதுகிறவர்களைக் குறி வைத்து, ஆபாசத்தாக்குதல்கள் நடத்திய காலம் மலையேறிவிட்டது என்றாலும், பதிவு எழுதுகிறவர்கள் நமக்கு ஏன் வம்பு என்று ஒதுங்கிப்போவது மட்டும் இன்னமும் குறையவில்லையோ? இத்தனைக்கும் ஒரு தனிமனிதனாக மறைந்த பதிவர் டோண்டு ராகவன் இந்த ஆபாச திராவிடங்களை போடா ஜாட்டான் என்று துணிந்து அம்பலப்படுத்தியபோது, தாக்குப்பிடிக்க முடியாமல் சிதறி ஓடியவர்கள் இப்போது முகநூலில் ஆதிக்கம் செலுத்திவருவது வேறு விஷயம். அங்கேயும் அவர்களுக்குப் புரிகிற மொழியிலேயே பதிலடிகள் கிடைத்துக்கொண்டுதான் இருக்கின்றன.
இந்த மிரட்டலுக்கெல்லாம் பயப்படமாட்டேன் நான் கலைஞரின் மகன் என்று சவடாலாகப் பேசியவர்கள் சரித்திரம் என்ன? எந்த இந்திரா மீது கல்லெறிந்து , அவதூறு பேசினார்களோ அவரது காலிலேயே விழுந்து கூட்டணி வைத்துக் கொண்டார்கள் (எம்ஜியாரும் சூடு பட்டபிறகு மத்தியில் ஆளுகிறவர்களைப் பகைத்துக் கொள்ளக் கூடாது என்ற பாடம் கற்றுக்கொண்டார்) பின்னர் வந்த ராஜிவ் திமுகவைப் பெரிதாகக் கண்டு கொள்ளவிஅறிவாலயத்தில் ல்லை! சோனியாவுக்கு ஓடோடிச் சென்று கருணாநிதி ஆதரவுக்கரம் நீட்டியது, ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் கனிமொழி, ஆபாச ராசரா இருவரும் திகார் சிறையில் மாதக் கணக்கில் அடைபட்டிருந்த நிலையிலும் தொடர்ந்ததே! அறிவாலயத்தில் ஒரு தளத்தில் கருணாநிதியின் மனைவி தயாளுவிடம் சிபிஐ விசாரணை நடத்திக் கொண்டு இன்னொருதளத்தில் கலீஞரின் கையை முறுக்கி கூட்டணி பேரமும் நடத்தி 63 சட்டசபைத் தொகுதிகளையும் கொடுத்த கருணாநிதியின் அதே தைரியம் தான் தனக்கும் என்று இம்சை அரசன் பட வடிவேலு மாதிரிச் சவடாலாகச் சொல்வதாக மட்டுமே இசுடாலின் சவடாலை எடுத்துக் கொள்ள முடிகிறது!
ஒரே ஒரு தேர்தல்தான்! உச்சத்தில் இருந்த வடிவேலு திமுகவுக்குப் பிரசாரம் செய்யப்போனா ர். மொத்த வாழ்க்கையையும் தொலைத்துவிட்டு நிற்கிறார் என்பது அவருக்கு மட்டுமே அல்ல, இன்னும் நிறைய அரசியல் கோமாளிகளுக்கும் காத்திருக்கிற விதி!
இசுடாலின் காமெடி அரசியலுக்கு நாம்தமிழர் கட்சியின் அபிமானி சாட்டை துரைமுருகன் போன்றவர்கள் பதில் கொஞ்சம் ரசிக்கிற மாதிரி இருக்கிறது.
இன்றைய அரசியல் காமெடிகளை நீளம் கருதி இத்துடன் முடித்துக் கொண்டு விடலாமா?
ஜெய்சங்கர், பிரசாந்த் என்று வடிவேலுவுக்கு முன்னோடிகள் இருக்கிறார்கள்!
ReplyDeleteவடிவேலு கதை மிகவும் தனித்துவமானது ஸ்ரீராம்! ஜெய்சங்கர், பிரசாந்த் இருவரும் தேய்பிறைகளானதற்கு வேறுகாரணங்கள் இருந்தன, அது திமுக ஆதரவு அரசியலால் அல்ல!
Delete