தமிழகத்தில் பிஜேபியின் கால்நகம் கூடப் பதிய விட மாட்டோமென்று பானாசீனா காரைக்குடியில் பேசி ஐந்துநாட்கள் கூட ஆகவில்லை. வெட்டிப்பேச்சுக்குப் பெயர்போன சீனாதானா செட்டியார் அடுத்த உளறலை வாந்தியெடுக்க ஆரம்பித்திருக்கிறார்."எந்தவிதமான முன்பதிவும் இன்றி அனைத்து வயதினருக்கும் இலவசமாகத் தடுப்பூசி செலுத்த வேண்டிய அவசியமான நேரம இது. அறிவியல்பூர்வமற்ற மற்றும் பிடிவாதமான நிலைப்பாடு காரணமாக, ஒவ்வொரு நாளும் பல்வேறு நோய்த் தொற்று உருவாக மத்திய அரசு அனுமதித்து வருகிறது. மிகப்பெரிய பேரழிவு நாட்டை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது" என்று இந்த எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் நேற்றைக்கு உளறிவைத்திருப்பது இங்கே செய்தியல்ல.உலகத்தின் பலநாடுகளில் 2வது, 3வது அலையாக கொரோனா நோய்த்தொற்று அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து கொண்டிருக்கையில் இந்தியாவில் கடந்த ஆறேழு மாதங்களாகக் கட்டுக்குள் இருந்த கொரோனா நோய்த்தொற்று கடந்த இரண்டு மூன்று தினங்களாக ஒவ்வொருநாளும் புதிதாக ஒருலட்சம் பேருக்கு மேல் என்று கவலையளிக்கும் விதத்தில் அதிகரித்து வருகிறது.
சீனாதானா செட்டியார் போன்ற ஊழல் அரசியல் வாதிக்கு வேண்டுமானால் இதுமாதிரி நோய்த்தொற்றும் உயிரிழப்பும், அரசியல் செய்யக் கிடைத்த இன்னுமொரு கல்லெறிதல் தான்! ஆனால் ஜனங்களாகிய நமக்கு? இந்த 4 நிமிடப் பாடலைக் கொஞ்சம் காதுகொடுத்துக் கேளுங்கள்! மாஸ்க் அணிவது, கைகளை அடிக்கடி சுத்தம் செய்துகொள்வது, அனாவசியமாகக் கூட்டம் எதிலும் கலந்துகொள்ளாமல் தவிர்ப்பது, மருத்துவர்கள் ஆலோசனைகளைப்பின்பற்றுவது என ஜனங்கள் செய்யக் கற்றுக்கொள்ளவேண்டியது நிறையவே இருக்கிறது.
உலர்ந்த மீனும் நாறும்...
ReplyDeleteஉலர்ந்த மீன் வைக்கப்பட்டிருந்த டப்பாவும் நாறும்!..
இது உலக நியதி...
சரியாகச் சொன்னீர்கள் துரை செல்வராஜூ சார்!
Deleteஆனால் சீனாதானாவை வெறும் முடைநாற்றமாக மட்டும் பார்க்க முடியாதே! கொரோனாவை வீடாக கொடிய ரோகம், கடும் விஷம்!
ப.சிதம்பரம் வயதாகிவிட்டதால் உளறுகிறார். இப்படித்தான் தமிழக எதிர்கட்சி அரசியல்வாதிகள் இந்திய தடுப்பு மருந்தைக் குறைகூறி பரப்புரை செய்துவிட்டு அவசர அவசரமாக ஓடிப்போய் தங்களுக்கு மட்டும் போட்டுக்கொண்டார்கள். ப.சிக்கு அவர் காலத்திலேயே அவர் மகன் பாஜகவில் சேர்ந்து பாடம் நடத்துவாரோ?
ReplyDeleteப.சிதம்பரம்லாம் நாட்டுக்குக் கேடு விளைவிக்க அஞ்சாதவர். ஆரம்பகட்டத்தில் தமிழகத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வருபவர்கள் மிகக் குறைவாக இருந்ததற்கு இவரைப் போன்ற ஊழல் அரசியல்வாதிகள்தான் காரணம். மற்றபடி முடிந்த அளவு எல்லோரும் போட்டுக்கொள்கிறார்கள்.
சீனாதானாவுக்கு வயதாகிவிட்டது, அதனால் உளறுகிறார் என்றா சொல்கிறீர்கள் நெல்லைத்தமிழன் சார்? !!!
Deleteவயசுக்காலத்திலும் அப்படித்தான் இருந்ததாக அவரை அறிந்த ஊர்க்காரர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன் கமல் காசர் கூட அதே ரகம்தான்! அப்பனுக்கேற்ற சுப்பன் கார்த்தி அதை ஏன் பிஜேபி தலையில் கட்டப்பார்க்கிறீர்கள் என்பது எனக்குப் புரியவில்லை!.
!
ஊழல் பணத்தை வெளிநாடுகளுக்கு எப்படிக் கடத்துவது என்பதில் எக்ஸ்பெர்ட் அவர் எப்படி நாட்டுக்கு நல்லது செய்கிறவராக இருக்க முடியும்?
எதெதில் அரசியல் செய்வது என்கிற விவஸ்தை எல்லாம் இருக்காது போல...
ReplyDeleteஇழவு வீட்டிலும் அரசியல் செய்வது திராவிட பாரம்பரியம்! செட்டிநாட்டுக் கோமானுக்கு தேசியத்தைவிட திராவிட இழவு அரசியல் தான் பிடித்திருக்கிறது, அது காங்கிரஸ் தவமாய்த் தவமிருந்து ஏற்படுத்திக் கொண்ட கூட்டணி ஆயிற்றே ஸ்ரீராம்! இவர்களிடம் போய் விவஸ்தை, காமன் சென்ஸ் இவைகளை எதிர்பார்க்கலாமா?
Delete