கர்ணன் திரைப்படத்தைக் குறித்து உதயநி!தி தெரிவித்த கருத்தை ஏற்று திரைப்படக்குழுவினர் திருத்தம் செய்து இருக்கிறார்களாம்! ஏனடா திருத்தச் சொன்னோம் என்று உதயநிதியே தலையிலடித்துக் கொண்டு ஜகா வாங்கிய மாதிரி ஆகியிருக்கிறது என்று சொல்லாமல் சொல்கிறது பிபிசி தமிழ்.
1997 என்று முதலில் சொன்னதை இப்போது இப்படி மாற்றி சொன்னதால் என்ன ஆகிவிட்டது? எதனால் உதயநிதி இதை இனிமேலும் பெரிதுபடுத்தவேண்டாம் என்கிறரீதியில் அறிக்கை விட்டாராம்?
Murali Seetharaman மதிப்பீட்டாளர்
39 நி
"கர்ணன்" படத்தில் மாரி.செல்வராஜ் - 1990 களின் பிற்பகுதியில் என்று ஒரு கார்டு போட்டாராம்! அதாவது அந்தக் கலவரம் எல்லாம் நடந்தது கலைஞர் ஆட்சியில் என்று அர்த்தம் வருதாம்!
நான் படம் பார்க்கவில்லை -
ஆனால் 1996 ல் கலைஞர் ஒரு மாபெரும் Sweep ல் - தமாகா கூட்டணி, ரஜனிகாந்த் ஆதரவு எல்லாம் பெற்று - ஆட்சிக்கு வந்த அந்த Tenure ல் பல கலவரங்கள் நடந்தன. (1996 - 2001) தென்மாவட்டங்கள் ரத்தக் காடாகக் காட்சியளித்தன.
கலைஞர் ஒவ்வொரு ஜாதியையும், மதத்தாரையும் திருப்தி செய்ய மாவட்டத்துக்கு எல்லாம் தலைவர் பெயரை வைப்பார். ராஜாஜி பார்ப்பனர் என்பதால் அவர் பிறந்த அன்றைய தருமபுரி மாவட்டத்துக்கு மட்டும், எத்தனையோ கோரிக்கை வைத்தும் மறுத்துவிட்டார் என்பது வேறு விஷயம்!
1989 ல் ஆட்சிக்கு வந்தவுடன் திண்டுக்கல் காயிதே மில்லத் மாவட்டம் என்றார். அதற்கு முன்பு MGR திண்டுக்கல்லை அண்ணா மாவட்டம் என்றார் - அதிமுக தோன்றியவுடன் போட்டியிட்டு ஜெயித்த முதல் தேர்தல் திண்டுக்கல் பார்லிமெண்ட் தொகுதி இடைத்தேர்தல் என்பதால்!
கருணாநிதி ஆட்சிக்கு வந்ததும் அண்ணாதுரையை திண்டுக்கல்லில் இருந்து பிருஷ்டத்தில் ஒரு உதை விட்டு விரட்டி அவரை - அப்போது காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டிருந்த - செங்கல்பட்டுக்கு அனுப்பி - "செங்கை அண்ணா மாவட்டம்"- என்றார்! திருவண்ணாமலை சம்புவராயர் மாவட்டம் - புதுக்கோட்டை பெரும்பிடுகு முத்தரையர் மாவட்டம் ... இப்படி எல்லாம் ஆனது!
இதன் க்ளைமேக்சாக வீரன் அழகுமுத்துக் கோன் மாவட்டம் என்று தென்காசியைத் தலைநகராகக் கொண்டு கருணாநிதி உருவாக்க முயன்ற போது பெரும் கலவரங்கள் உருவாயின.
பிறகு இனி எந்த மாவட்டத்துக்கும்...
எந்தப் போக்குவரத்துக் கழகத்துக்கும்...
தனிநபர்களின் பெயரைச் சூட்டுவதில்லை என்று அரசாங்கமே ஒரு கொள்கை முடிவு எடுத்து...
அதுவரை வைத்த அத்தனை பெயர்களையும் அழிக்கும் அளவுக்கு... தென்மாவட்டக் கலவரங்கள் பெரும் வீச்சை ஏற்படுத்தின. இது கலைஞர் ஆட்சியில் - அதாவது மாரி செல்வராஜ் 'பாஷை'யில் சொல்வதானால்...
1990 களின் பிற்பகுதியில் என்பதை மறுப்பதற்கில்லை!
எனக்கு இந்த மாரி செல்வராஜ், வெற்றிமாறன், பா.ரஞ்சித், அமீர் வகையறா ஆசாமிகளின் மீதெல்லாம் -அவர்களுடைய கலைப்படைப்புகளை வைத்து - பெரிய மரியாதை கிடையாது!
ஆனால் திமுகவினர் இப்போது அவர்கள் மீது பாய ஆரம்பித்து இருப்பது தமாஷாக இருக்கிறது! அதாவது மாரி செல்வராஜ் "நீல" சங்கியாம்!
திமுக ஆட்சியில் கலவரங்கள் நடந்ததாக காட்டிவிட்டாராம்! தலித் இயக்கத்தவரின் அடையாளம் நீலசட்டை - எனவே "நீல" சங்கி! ஆனால் திமுகவினரின் வரையறைப்படி இன்னும் பல நிறங்களில் "சங்கி" கள் உள்ளனர்!
CPM கட்சி - அதன் ராஜ்ய சபா உறுப்பினர் - "சிகப்பு" சங்கி! ஏனென்றால் பாஜக அரசு கொண்டு வந்த
"ஏழைகளுக்கான 10% ஒதுக்கீடு" (EWS) மசோதாவை CPM ஆதரித்தது அல்லவா? அதை ஆதரித்து 'பார்ப்பனர்' T.K.ரங்கராஜன் பேசியபோது - கனிமொழி குறுக்கே வந்து - "என்னங்க இது அநியாயம்?" - என்று கத்திவிட்டும் போனார் அல்லவா? எனவே திமுக வரையறைப்படி CPM - "சிவப்பு" சங்கி!
வேலூர் இப்ராஹீம் போன்ற முஸ்லீம்கள், இந்துக்களின் நியாயத்தை உணர்ந்து பேசுவதால் அவர் "பச்சை" சங்கி!
கேரளாவில் P.C.ஜார்ஜ் என்ற காங்கிரஸ்காரர்-
"லவ் ஜிகாத் என்பது நிச்சயம் பெருமளவில் நடக்கிறது; இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வேண்டும்"- என்று பேசியதால் அவர் கிறிஸ்தவ 'வெள்ளை' சங்கி!
"அம்பேத்கர் சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக்க முன்மொழிந்தார்"- என்று முன்னாள் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி போப்டே பேசியுள்ளார்! எனவே அவர் நீதிபதி கவுன் நிறத்தால் "கறுப்பு" சங்கி!
இன்னும் சீமான் -"தமிழ் தேசிய" சங்கி!
கமல் - "மய்ய"- சங்கி!
ஆக... ஆக... ஆக...
நீல சங்கி, சிகப்பு சங்கி, கதர் சங்கி, கறுப்பு சங்கி, பச்சை சங்கி, தமிழ் தேசிய சங்கி, மய்ய சங்கி...
இப்படிப் பலரும் உண்டு!
உண்மையான RSS சங்கியைத் தவிர இப்படிப்பட்ட கலர் கலரான "சங்கி" கள்தான் அதிகம் போல!
ஆனால் திமுகவினர் வசதியாக ஒன்றை மறந்து விடுகின்றனர்! 1999 - 2004 வாஜ்பாய் மந்திரிசபையிலேயே பங்கேற்று காபினெட் மந்திரியாகவே இருந்தாரே - முரசொலி மாறன் - அவர் எந்தவகை "சங்கி"?
ஒருவேளை "திராவிட" சிங்கியோ?
கர்ணன் திரைப்படத்தைவைத்து அதிமுகவை மட்டம் தட்ட நினைத்த திமுகவினரின் சாயம் வெளுத்துப் போனது மட்டும்தான் மிச்சம்! மான்சோலை தேயிலைத் தொட்டது தொழிலாளர்கள் 17 பேர் கொல்லப்பட்டது , திமுக ஆட்சியில்தான் என்பதை மட்டுமல்ல, ஒவ்வொரு சாதியையும் திருப்திப்படுத்த கருணாநிதி என்னென்ன செய்தார், பிரச்சினை பெரிதானதும் எப்படியெல்லாம் ஜகா வாங்கினார் என்பதையும் இந்த முகநூல் பகிர்வு கொஞ்சம் சுருக்கமாகச் சொல்கிறது.
பாரதத்துக் கர்ணன் கொடையாளி! அர்ஜுனனுடன் கொண்ட பகைமை, துரியோதனனுடன் கூட்டாளி ஆக்கி வைத்தது. அவ்வளவுதான்.ஆனால் பா ரஞ்சித், மாரி செல்வராஜ் வகையறா கர்ணன் பெயரைவைத்துத் தங்களுடைய வன்ம அரசியலை மட்டுமே முன்னெடுத்து வருகின்றனர் என்ற முந்தைய கருத்தில் மாற்றமில்லை.
பதிவின் தலைப்புக்கும் படத்துக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா? C S கர்ணன் என்று கூகிளிட்டு தேடிப்பாருங்கள்!
மீண்டும் சந்திப்போம்.
சுவாரஸ்யமான சண்டைகள்... வேறென்ன சொல்ல!
ReplyDeleteஇது சுவாரசியமா? குறுகிய அரசியல் உள்நோக்கங்களில் தமிழகமே ஜாதிக்கலவரங்களில் பற்றியெரிந்த காலத்தின் சுவடுகள் அவை. இதில் இருபத்தைந்து வருடங்களுக்குப்பின்னால் ஆறியவடுவைக் கீறிப்பார்க்கிற வேலைக்குப்பின்னால் இருப்பதென்ன என்றல்லவா கேட்டிருக்க வேண்டும் ஸ்ரீராம்?
Deleteஇதில் ஒரு வேடிக்கை..
ReplyDeleteஅப்போது தஞ்சை மாவட்டம் கீழத்தஞ்சை மேலத் தஞ்சை என்று இயங்கிக் கொண்டிருக்க அதை உடைத்து நாகை காயிதே மில்லத் மாவட்டம் என்றார்களே!...
காங்கிரசைப் பிளக்கும் முயற்சின் போது மட்டும் ராசாசி (ராஜாஜி) மூதறிஞர்.. அதுக்கு அப்புறம் குல்லுகப் பட்டர்...
நல்லவேளை அப்போதைய நாம கரண - ஞான ஸ்நான சாம்பிராணிச் சடங்குகளில் இருந்து கன்னியா குமரி மாவட்டம் மட்டும் தப்பிப் பிழைத்தது...
கன்யா குமரிக்கு - அன்னை மேரி என்று புது நாமகரணம் ஆகாமல் போயிற்றே.. என்கிற ஏக்கம் இன்னமும் உண்டு...
அவள் பண்டாசுரனை வீழ்த்தியவள் என்பது அந்தக் கூட்டத்துக்குத் தெரியாமல் போனது தான் விசித்திரம்...
வாருங்கள் துரை செல்வராஜூ சார்!
Deleteஇந்தத்திரைப்படம் பழைய விவகாரங்களாய்க் கிளறியதில்,அதிமுக மீது சேறுபூச திமுக ரொம்பவே மெனெக்கெட்டதில் கருணாநிதியின் சாதனைகளே பெரும் சோதனைகளாக மாறி ஜகா வாங்கியது மீண்டும் ஜனங்களுடைய ஞாபகத்துக்கு கொண்டுவரப் பட்டிருக்கிறது. பாவம் உதயநிதி! திருத்தம் சொல்லப்போய் தாத்தாவின் சாதனைகளை ஜனங்கள் தெரிந்துகொள்ள உதவியிருக்கிறார்.
முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம், திமுகவை யார் கேள்விகேட்டாலும் அவர்களை சங்கியாக்கிவிடுகிற பெருநோய்த்தொற்றுக்கு உபிக்கள் ஆளாகியிருப்பதுதான்.