Sunday, April 11, 2021

#கர்ணன் திரைப்படம் சொல்லவருவது என்ன?

இந்தப்பக்கங்களில் திரைப்பட விமரிசனம் என்றெழுதி நீண்டநாட்களாகி விட்டது என்கிற நினைப்பே, இன்று முகநூலில் ஸ்டேன்லி ராஜன் எழுதிய ஒரு பகிர்வைப் படித்ததும் தான்,வந்தது. அதுவும் ஒரு திரைப்படம் மீதான விமரிசனம் என்று மட்டுமே இல்லாமல், தமிழ்த்திரை உலகம் போய்க்கொண்டிருக்கிற விதத்தைப் பற்றிய ஆதங்கமாகவும் வெளிப்பட்டிருந்ததை யோசித்ததில் ஒரு பெருமூச்சுடன் தான் கடக்கவேண்டி இருந்தது.


 

2ம.நே 
இந்த சினிமா தயாரிப்பு என்பது சாமான்யம் அல்ல, பெரும் செட்டிகளும் மார்வாடிகளுமே திணறி தாக்குபிடிக்க முடியாமல் ஓடிவிட்ட களம் அது
ஏவிஎம் போன்றோரே ஒதுங்கி கொள்ள, குஞ்சுமோன் போன்ற பிரமாண்டங்களே இருந்த இடம் தெரியாமல் போன அளவு அதன் தாக்கம் கடுமையானது
திரைதுரையிலே ஊறிய நடிகர்களும் கவிஞர்களும் கூட, ஏன் டைரக்டர்கள் கூட சொந்தபடம் எனும் சவால் எடுக்க துணியவில்லை. அப்படிபட்ட திரையுலகில் பா.ரஞ்சித்தனார் 6 படம் தொடர்ந்து தயாரிப்பாராம், இதற்கான பணம் எங்கிருந்து யார் கொடுகின்றார்கள் என்பது தெரியாது
சரி, யாரும் கொடுக்கட்டும் ஆனால் இந்த தலித் கும்பல் எடுக்கும் படங்களின் கதை என்ன?
மேல் சாதி கீழ்சாதியினை அடிகின்றது, ஒடுக்குகின்றது எனும் ஜாதிய மோதலை தூண்டும் விதமாகவே இருக்கின்றதே அன்றி உருப்படியாக ஏதுமில்லை
நல்ல தலித்படம் என்றால் படித்தோ உழைத்தோ ஒரு சமூகம் உயர்வதை காட்டலாம் , மாறாக அடி, வெட்டு, குத்து, சிறைக்கு போ என்பதெல்லாம் மிக பெரிய சாதிய வன்ம தூண்டல்
இந்த இடத்தில் பாரதிராஜா, கமல், முத்தையா என அவர்களை இழுத்துவரலாம் ஆனால் பாரதிரஜாவோ கமலஹாசனோ சாதிய சண்டை வராதவரையில் சுய சாதி அல்லது ஒரு சாதியின் கொடும் மனநிலையான இன்னொரு பக்கத்தை காட்டியிருப்பார்கள்
அதற்கு முக்குலத்தோர் சமுதாயம் பொங்கியிருக்க வேண்டும் ஆனால் அவர்களோ நாங்கள் அப்படித்தான் திருந்த வேண்டிய தூரம் நிறைய உண்டு என்பதுபோல் அமைதி காத்தார்கள்
ஆனால் ரஞ்சித்தர், மாரி செல்வராஜ் படங்களெல்லாம் அப்படி பக்குவமான நிலையில் எடுக்கபட்டவை அல்ல, அவர்களிடம் முதிர்ச்சி இல்லை மாறாக ஒருவித வன்மம் மட்டும் மேலோங்கி நிற்கின்றது
வரலாற்றை புரட்டுங்கள்
1300களில் ஆப்கானிய கொள்ளை கும்பல் மதுரையினை ஆளவந்ததில் தமிழ்குடிகளின் அடக்குமுறை ஆரம்பிக்கின்றது, பின் நாயக்கர்கள் வந்தார்கள்
வெள்ளையன் ஆட்சியில் எல்லோரும் அடிமை ஆம் பார்ப்பனன் முதல் தலித் வரை அடிமைகளே
பார்ப்பனருக்கும் சொத்து பத்து மாட மாளிகை என எதுவுமில்லை, ஒரு சில ஜமீன்களும் மிராசுகளும் மட்டும் சொத்து வைத்திருந்தன அதுவும் ஆங்கிலேயனுக்கு கப்பம் கட்ட.இந்நிலையில்தான் சுதந்திரம் வந்து நாடு விடுதலையாயிற்று
இதன் பின் காட்சிகள் மாறின, பார்ப்பன சமூகம் முடிந்தால் இந்தியா இல்லையா வெளிநாடு என கல்வியில் அதன்போக்கில் முன்னேறிற்று
இதில் அன்று "குற்றபரம்பரை" என ஆங்கிலேயனால் அடிமையாக்கபட்ட முக்குலத்து சமூகம் கூட விளையாட்டு, கல்வி, தொழில் என மெல்ல மேலெழுந்தது
இன்று காவல்துறை நீதிதுறை உள்ளிட்ட பல துறைகளில் மறவர்கள் ஆதிக்கம் இருப்பதை மறுக்க முடியாது, இவ்வளவுக்கும் குற்றபரம்பரை என ஒடுக்கபட்ட சமூகம் அது
துருக்க படையெடுப்பில் பல இன்னல்களை சந்தித்து ஒடுக்கபட்ட இனமான நாடார் இனம் இன்று உழைப்பால் வியார சமூகமாக உயர்ந்து நிற்கின்றது, தமிழக பொருளாதாரம் அவர்களிடம் இருக்கின்றது
ஆக ஆழ்ந்து கவனியுங்கள்
இதில் தலித்மக்களின் சாதனை என்ன?
இந்த 2000 வருடம் அடக்கினான், ஒடுக்கபட்டோம், தாழ்த்தபட்டோம் என்பதல்ல விஷயம், 1930களில் இருந்து அவர்களுக்கு வாய்ப்பு குவிய தொடங்கியது
சுதந்திர இந்தியா அவர்களுக்கான விடியலை இட ஒதுக்கீடு, சட்ட ரீதியான பாதுகாப்பு என வழிவிட்டது
ஆனால் எவ்வளவு தலித் தொழிலதிபர்கள் உருவானார்கள், எவ்வளவு பேர் பெரும் பதவிக்கு வந்தார்கள், எவ்வளவு பேர் தொழில் சாம்ராஜ்யம் இல்லை வேறு வகையில் உருவானார்கள்?
ஒருவருமில்லை
படிப்பு இல்லை என்பது விஷயமல்ல, சென்னையில் உழைத்து கொடிகட்டிய நாடார்களில் பலர் 5ம் வகுப்பு தாண்டாதவர்களே
ஆக கல்வியும் இன்னும் கடுமையான உழைப்புமே ஒரு சமூகத்தை உணர்த்தும் மாறாக அடங்கமறு, வெட்டு, குத்து, கொல் என்பதெல்லாம் ஒரு காலமும் நல்ல முடிவினை தராது
இது ஒரு சில லோக்கல் தாதாக்களை உருவாக்குமே அன்றி சமூகத்துக்கான ஒரு மாற்றத்தையும் கொடுக்க்காது
ரஞ்சித் கோஷ்டி ஒரு மாதிரியான விஷ விதைகளை தமிழகத்தில் விதைக்கின்றது
சுதந்திர இந்தியா எல்லோருக்கும் சமவாய்ப்பு என்று அல்ல, அவர்களுக்கு மிகபெரிய வாய்ப்பினை கொடுக்கும் அளவில்தான் வடிவமைக்கப் பட்டிருக்க்கின்றது
அதில் படித்தோ உழைத்தோ முன்னேறாமல் கற்பனை கதைபேசியே சம்பாதிப்போம் அதற்கு ஒரு சமூகத்தினை வெறியேற்றி புரட்சி செய்வோம் என்பதெல்லாம் சரியல்ல.இதெல்லாம் சமூகம் பற்றி அதன் அமைதி வளர்ச்சி பற்றி கவலைபடாத ஒரு சில பக்குவற்ற தற்குறிகளின் சுயநலம் அன்றி வேறல்ல
கமலஹாசனும் தேவர்மகன் என்றொரு படம் எடுத்தார், அதன் முடிவில் வன்முறை தீர்வாகாது கல்வியும் உழைப்புமே ஒரு சமூகத்தை மேம்படுத்தும் என சொல்லியிருந்தார்
எங்கே "பொடியன்குளம்" என பெயர் வைத்த கோஷ்டி "கீழதூவியூர்" என ஒரு ஊருக்கு பெயர் வைத்து படம் எடுத்துவிட முடியுமா?
எடுத்துவிட்டு கமுதி ராமநாதபுரம் பக்கம் அமைதி நிறுத்திவிட முடியுமா?
இந்த சென்சார் போர்டும் அது சார்ந்த அமைப்புகளும் சாதிய வன்முறையினை தூண்டும் ரஞ்சித்தர் கோஷ்டிகளுக்கு சில கட்டுபாடுகளை விதிக்காவிட்டால்
அதாவது படிக்காதே உழைக்காதே மாறாக அருவாள் தூக்கி அந்த சாதியினை வெட்டி "புரட்சி செய்" என்றெல்லாம் வன்மங்களை விதைப்பதை தடுக்கா விட்டால் பிறிதொரு நாளில் இவர்களால் தமிழக அமைதி மிகபெரிதாக பாதிக்கபடும் என்பது மட்டும் நிஜம்..
அரைகுறை சுயநல‌ போராளி மிக மிக ஆபத்தானவன், அவனால் மிகபெரிய சமூக அமைதி கெடும், அதற்கு முன் அரச அமைப்புகள் விழிப்பது நல்லது. ஆம், உழைப்பும் படிப்பும் நல்ல சிந்தனையுமே ஒரு சமூகத்தை உயர்த்தும் அதைத்தான் பல்வேறு சமூகங்களின் வளர்ச்சியினை கொடுக்கும்,

அது அன்றி எதுவும் வாரா
ஸ்டேன்லி ராஜன் சேர்த்தே சொல்லி இருக்கலாம்.

தலித் இலக்கியம், தலித் சினிமா, தலித் அரசியல் என்று தலித் மக்களை மற்றவர்களிடமிருந்து பிரித்து, தனித் தீவாக்கும் முயற்சிகள் நீண்டநாட்களாகவே நடந்து கொண்டுதான் இருக்கின்றன. சரக்கு மிடுக்கு என்று பேசும் திருமாவளவன், ரஜினிகாந்தை வைத்துப் படம் பண்ணியதாலேயே பிரபலமான பா. ரஞ்சித், அவரை அடியொற்றி வந்த மாரி செல்வராஜ் என்று விபரீதமான சிந்தனைகளை விதைக்கும் நபர்கள் இப்போதுதான் முன்னணிக்கு வந்து கொண்டிருப்பதைக் கவலையோடு கவனிக்க வேண்டி இருப்பதை ஸ்டேன்லி ராஜன் பகிர்வு சுட்டிக் காட்டுகிறது.

மாற்றுக்கருத்தையும் கவனத்தில் கொள்வதற்காக சிங்கப்பூர் பதிவர் நண்பர் கோவி கண்ணன்  . 
இது பட விமரிசனம் அல்ல என்று சொல்லியே ஆரம்பித்திருக்கும் கர்ணன் படத்தின் மீதான பார்வை இங்கே  

மீண்டும் சந்திப்போம்.

8 comments:

  1. நியாயமான கருத்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. இங்கே நியாயங்களும் தீர்ர்ப்புக்களும் ஆளுக்காள் நேரத்துக்கு நேரம் மாறிக்கொண்டே இருப்பவை என்பது தெரிந்ததுதானே துரை செல்வராஜூ சார்!!

      Delete
    2. ஆமாம்...
      இங்கே தமிழகத்தில் நியாயம் என்பது ஆளுக்கு ஆள் வேறுபடும்...
      வேறு படுத்துவார்கள்..

      Delete
    3. கடவுள்தான் இந்த தேசத்தையும், செய்வதறியாத ஜனங்களையும் காத்தருள வேண்டும் என்பதற்கு மேல் வேறென்ன சொல்ல துரை செல்வராஜூ சார்?

      Delete
  2. என் அனுபவத்தை எழுதுகிறேன். நாடார் சமூகம் மிக நன்றாக, ஒரு சமூகமாக (சகோதரத்துவத்துடன்) முன்னேறியிருக்கிறது. இரண்டு வகையில். நிறைய கல்விக்கூடங்கள். அடுத்தது தொழில் (மளிகை, சிறு உற்பத்தி-கடலைமிட்டாய் போன்று....). இதில்-கடைகள், தொழிலில், சக நாடார்களையும் சேர்த்துக்கோண்டு ஒரு சமூகமாக அவர்கள் முன்னேறினர். இப்படிச் செய்யாமல், எங்களை தாழ்த்திவிட்டார்கள் என்று குரல் மட்டும் கொடுத்துக்கொண்டு வெறும் வாக்கி வங்கியாக தங்களை நிலைநிறுத்திக்கொண்டிருக்கலாம்...ஆனால் அவர்கள் ஆக்கபூர்வமான வழியைத் தேர்ந்தெடுத்தனர்.

    இன்னொரு சமூகம், தலித் மற்றும் மீனவர்கள். இவர்களில் கிறிஸ்துவத்தைத் தழுவியவர்கள், கல்வி என்ற பாதையைப் பிடித்து நிறைய கல்வி பெற்றனர், அரசு மற்றும் கிறிஸ்துவ நிறுவனங்கள் கொடுக்கும் சலுகைகளைப் பயன்படுத்திக்கொண்டு நல்ல நிலைமைக்கு வந்தனர். நான் ஏராளமான அப்படிப்பட்டவர்களைக் கண்டிருக்கிறேன், உடன் வேலைபார்த்திருக்கிறேன் (வேலைக்கு எடுத்திருக்கிறேன்).

    இந்த மாதிரி வழியை நாடாமல், வெறும்ன புரட்சி, ரவுடியிசம், மற்ற சமூகத்தின் நல்லுறவை, அடக்குமுறைக்கான எதிர்ப்பு என்ற வழியைப் பிடித்து, கெடுப்பதை, இந்த மாதிரி 'தலித் புரட்சியாளர்கள்' அவர்களுடைய சமூகத்திற்குச் சொல்லிக்கொடுத்து அவர்களை முன்னேறவிடாமல் செய்கிறார்கள் என்பது என் எண்ணம். சட்டம் நிச்சயம் தலித்துகளின் பாதுகாப்பையும் சமூகத்தில் அவர்களுக்கான இடத்தையும் உறுதி செய்கிறது.

    ReplyDelete
    Replies
    1. நெல்லைத்தமிழன் சார்! நீங்கள் சொல்லியிருப்பவற்றோடு முழுதும் உடன்படுகிறேன்!

      Delete
  3. மக்களை உணர்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினால்தான் புரட்சிகரமான கருத்துகள்.  அவர்கள் பிழைப்பு நடக்கவேண்டுமே..  சமூகமானது..  அமைதியாவது....    ராஜராஜன் என் மூதாதையர்களின் சொத்தை வாங்கி ஏமாற்றினான் என்று சொன்னவர்கள்தானே..

    ReplyDelete
    Replies
    1. இந்தமாதிரி ஜனங்களை எதற்கெடுத்தாலும் போராடு, சாலையை மறி, இயல்பு வாழ்க்கையைக் கெடு என்பதெல்லாம் கம்யூனிஸ்ட் புரட்சியாளர்களுக்கு அளிக்கப்படும் பாலபாடம் ஸ்ரீராம்!

      அடங்கமறு திமிறி எழு திருப்பி அடி என்று அதையே இந்த சாதீய வன்மத்தில் குளிர்காய்கிற அரசியலும் காப்பியடிக்கிறது, ஆனால் வெற்றுக்கலவரங்கள் சாதீய வன்மங்கள் எப்போதுமே ஜெயித்ததில்லை என்பதும் வரலாறு. ,

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)