Showing posts with label ஆந்திரா. Show all posts
Showing posts with label ஆந்திரா. Show all posts

Thursday, May 20, 2021

#அடுத்தவீடு #கேரளா #ஆந்திரா அரசியல்! அப்புறம் கமல் காசர்!

ஒருவழியாக கேரளத்தில் இரண்டாவது முறையாக இடது முன்னணி அரசின் அமைச்சர்கள் இன்றைக்குப் பதவி ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் நடந்த ஐந்து மாநிலங்களில் கேரளம் தவிர்த்து மற்ற மாநிலங்களில் மந்திரிசபை பதவியேற்பு நடந்து விட்டது. 140 இல் 99 இடங்களைப் பிடித்தவர்கள், மந்திரிசபையை முடிவு செய்வதற்கு இத்தனை நாட்கள் ஆனது ஏன் என்ற கேள்வி இருந்தது. மந்திரிசபையில் யார்யார் என்பதை முடிவு செய்வதற்காகவே இத்தனை நாள் ஆகியிருக்கிறது என்பதை விட பழைய முகங்கள் எவரும் வேண்டாம் என்று தீர்மானிப்பதற்கே இத்தனை காலமாகி இருக்கிறது. முந்தைய மந்திரிசபையில் மிகவும் திறமையாகப் பணியாற்றி எல்லோராலும் அபிமானிக்கப் பட்ட K K ஷைலஜாவுக்கு மந்திரிசபையில் இடமில்லை என்பதே பினரயி விஜயன் மீது கேரளத்தில் கடும் அதிருப்தி ஏற்படக் காரணமாக இருப்பதாக செய்திகள் வருகின்றன.

 


எது எப்படியானால் தான் என்ன? தமிழக அரசியலின் கபட வேடதாரிகளுடைய வாழ்த்தும் வரவேற்பும் பினரயி விஜயனுக்கு இருக்கிறதே! அது போதாதா என்ன?  

******* 

ஆந்திர அரசியலில் என்ன நடக்கிறது என்பதைப் பார்த்தே நீண்டகாலமாகி விட்டதல்லவா? சந்திரபாபு நாயுடு கொஞ்சம் மாநிலத்தைத் தாண்டி அரசியல் செய்ய முயன்று YSR காங்கிரசிடம் எல்லாவற்றையும் இழந்து நிற்கிற பரிதாபத்தைக் கடைசியாகப் பேசிய நினைவு. ஆனால் முதல்வர் YS ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி செய்கிற விதம் மிகவும் விபரீதமானதாக இருக்கும் போலத் தெரிகிறதே!அவரை எதிர்த்தோ விமரிசித்தோ எவரும் வாயைத் திறக்கக் கூடாதென்ற ரீதியில் அப்படியான செயல்களில் ஈடுபடுவதாக சந்தேகிக்கப் படுகிறவர்கள் எவராயினும் அவர்கள் மீது Sedition தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்படுவதாகச் செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன.அவருடைய கட்சி MP ஒருவர்மீதே அப்படிக் குற்றம் சாட்டப்பட்டு, போலீசாரால் சித்திரவதை செய்யப்பட்டதாக எழுந்த புகார்மீது விசாரணை நடத்திய ஆந்திர உயர்நீதி மன்றம், அவருக்கு ஹைதராபாத் ராணுவ மருத்துவமனையில் பரிசோதனையும் சிகிச்சையும் அளிக்க உத்தரவு பிறப்பித்திருந்தது. கருத்து சுதந்திரம் என்று கம்பு சுற்றிக் கொண்டிருந்த போராளிகள் எவர் கண்ணிலும் இது ஏன் படவே இல்லை என்கிற அனாவசியமான கேள்வியை நான் கேட்கப்போவதே இல்லை! 


இப்படிப்போற்றிப்பாடப்பட்டதெல்லாம் மிகவும்  பழைய கதை!  Telugu media outlet TV5 News has moved the Supreme Court seeking quashing of an First Information Report (FIR) in a sedition case in Andhra Pradesh. Shreya Broadcasting Pvt Ltd, which owns TV5, has contended in its plea that the state government "intends to silence" critics and the media by filing a "vague FIR" and abusing the process of law. "It is humbly submitted that the continuance of the FIR is likely to cause a chilling effect on the media in such crucial times of the pandemic, when truthful and fearless reporting is the need of the hour," said the plea என்கிறது செய்தி. ஆட்சி அதிகாரம் கண்ணை மறைக்கிற தருணங்களில் வீழ்ச்சியும் சேர்ந்தே வரும் ரன்பது வரலாறு சொல்கிற அனுபவம்!

*******


எம்ஜியார் படப்பாடல் வரிகளோடு காட்சி தருகிற கமல் காசர் அது தனக்கே பாடமாகிப் போகும் 
என்பதை ஏனோ மறந்துவிட்டார்!   

கமல் காசர் கட்சியிலிருந்து இன்னொரு முக்கியப்புள்ளி CK குமரவேல் இன்றைக்கு விலகியிருக்கிறார் என்பது சிலகாலம் முன்புவரை இங்கே சென்னை விமானநிலைய மேற்கூரை மீண்டும் மீண்டும் பெயர்ந்து விழுந்த கதை மாதிரியான சுவாரசியமற்ற செய்தியாகிக் கொண்டு வருகிறது என்பது இந்த நாளுடைய விசேஷம். நேற்றைக்கு முருகானந்தம் என்ற புள்ளி விலகினாராம்! விலகியதற்கு குமரவேல் சொன்ன காரணம் விசித்திரமானது. Kumaravel told TNM that Kamal Haasan disappointed them as he made it clear that MNM is a leader based party and not a cadre based party என்கிறது இந்தச்செய்தி அவர் சொல்கிற மாதிரி cadre based party இங்கே எத்தனை இருக்கிறது என்பது தெரியுமா? cadre based party என்பதன் பொருள் புரிந்துகொள்ள முடிகிறதா? சொல்லுங்களேன்!

மீண்டும் சந்திப்போம்.    

Thursday, April 1, 2021

#அடுத்தவீடு ஆந்திரா! தெலுகு தேசம் கட்சிக்கு மேலும் ஒரு இடி!

இன்றைக்கு டெக்கான் க்ரோனிக்கிள் நாளிதழில் வெளியான செய்தி இது:

செய்தியைப் பார்த்துவிட்டு தெலுகு தேசம் கட்சியின் முக்கியத்தலைவர்கள் கொதித்துப்போய் நாளிதழின் ஆசிரியரை நீக்கவேண்டும், பத்திரிக்கை ஓனர் வெங்கட்ராமி ரெட்டி மன்னிப்புக் கேட்டே ஆகவேண்டும் என்றெல்லாம் கூக்குரலிட்டுக் கொண்டிருக்கிறார்கள். செய்தி உண்மையா? DC நாளிதழ் சில ஆண்டுகளாகவே ஏப்ரல் முதல் தேதியன்று இதுமாதிரிச் செய்தியை முழு உண்மைபோலவே வெளியிடுவது, முட்டாள்கள் தினக் கொண்டாட்டத்தின் ஒரு அங்கமாகவே பார்க்கப் படுவதால், தெலுகு தேசம் கட்சித் தலைவர்களுடைய கூக்குரல் பெரிதாகக் கண்டுகொள்ளப்படவில்லை!  

ஆந்திர அரசியலில் சந்திரபாபு நாயுடுவுக்கு நேரம், கட்டம் எதுவுமே சரியில்லை போல இருக்கிறது! சில நாட்களுக்கு முன்புதான் NTR கதாநாயகுடு என்ற திரைப்படம் வந்து, NT ராமராவ் தெலுகு ஆத்ம கௌரவத்துக்காக இந்திராவை எதிர்த்து தெலுகு தேசம் கட்சியை ஆரம்பித்ததை ஜனங்களுக்கு மீண்டும் ஞாபகப்படுத்தி விட்டுப் போயிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக, ஹைடெக் சந்திரபாபு நாயுடுவை கிராமங்களுக்கு யாத்திரை நடத்தித் தோற்கடித்த YSR என்கிற ராஜசேகர ரெட்டியின் கதை மம்மூட்டி நடித்து வெளியாகி இருப்பதும் கூடவே வந்து உருத்தூட்டுகிறதாம்! இப்படி 2019 இல் இதே பக்கங்களில் யாத்ரா திரைப்பட அறிமுகமாக எழுதியிருந்தது இன்றும் கூடப் பொருத்தமாகத்தான் இறுக்கிறது போல. யாத்ரா ஒரு திரைப்பட விமரிசனமாக இங்கே  சந்திரபாபு நாயுடு கதை அவ்வளவுதானா என்கிற அலசல் கூட இங்கே நடந்தது 

NT ராமாராவ் தொடங்கிய தெலுகு தேசம் கட்சியும் மாமனாரிடமிருந்து TDPயைப் பறித்துக்கொண்ட சந்திரபாபு நாயுடுவும் 2019 தேர்தல் தோல்விக்குப்பிறகு இன்னமும் மீண்டெழ முடியாமல் தவிப்பது ஆந்திர அரசியலின் ஒருமுகம்.

40 ஆண்டுகளைக்கடந்த தெலுகு தேசம் கட்சியின் வரலாற்றில், இப்போதிருக்கிற மாதிரி ஒரு சோதனையான காலகட்டம் இருந்ததே இல்லை என்று சொல்கிறார்கள். N.T. ராமாராவுடைய குடும்ப சப்போர்ட்  TDPக்கு இருந்தாலும், N.T. ராமாராவ் கதையை இரண்டு பாகங்களாகப் படம் எடுத்துக் கையைச் சுட்டுக் கொண்டதுதான் மிச்சம், ஜனங்களுடைய ஆதரவு, அனுதாபம் எதுவுமே படத்துக்கும் சரி, கட்சிக்கும் சரி கிடைக்கவில்லை. இந்த லட்சணத்தில் ஜுனியர் NTR  (ராமாராவின் பேரன்) நேரடியாக அரசியலில் இறங்கினால் தான் தெலுகு தேசம் கட்சியைக் காப்பாற்ற முடியும் என்று ஜாதி உணர்வில் (கம்மா) கொடி பிடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். Except Chandrababu Naidu, everybody in the TDP are believing that the party can be rescued only with the entry of Jr NTR into the politics.Though there are many indications surrounding this opinion, recently the TDP leader Gorantla Butchiah Chowdary voic, மார்கெட் ed out this opinion publicly in Rajahmundry. As per the inside sources it is said that many biggies from the community close to the TDP are forcing Jr NTR by emotionally blackmailing him என்கிறது ஒரு ஆந்திரச்செய்தி.தெலுங்கு சினிமாவில் எல்லாத் தரப்பு ஜனங்களுடையஆதரவையும் பெற்ற, மார்க்கெட் உள்ள ஹீரோவாக இருக்கும் Jr NTR எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார் அரசியலை நம்பி சினிமாவைக் கைவிட அவர் தயாராக இல்லை என்று அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள்.

சரி, இந்தக்கதையெல்லாம் இப்போது எதற்கு?

வருகிற ஏப்ரல் 17 அன்று திருப்பதி (தனி) மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறவிருப்பதில். ஆளும் YSRCP கட்சிக்கும் ஆட்சியைப்பறிகொடுத்த தெலுகு தேசம் கட்சிக்கும், கௌரவப்பிரச்சினை ஆகி இருக்கிறது.  

Naidu’s commitment notwithstanding, party insiders doubt whether he, already in his 70s (he turns 71 on April 20), can have a battle trim TDP ready for the 2024 assembly and Lok Sabha polls. They say that the best days for the party are perhaps over, recalling that the TDP was the first regional party to become the main opposition in the eighth Lok Sabha from 1984 to 1989 and that Naidu was the longest serving chief minister of erstwhile Andhra Pradesh (14 years).They believe it will be a Herculean task for the party in the face of the aggressive strategy of the ruling Yuvajana Sramika Ruythu Congress (YSRC) to retain popular appeal with sops and welfare measures. And there are other constraints. Naidu has never encouraged middle level leadership in the TDP though he launched several initiatives to broaden the party’s base by adopting social engineering techniques to woo different communities. Moreover, analysts point out, he has failed to shed the pro-Kamma bias tag that the TDP has worn since the days of NTR என இன்றைக்கு இந்தியா டுடே தளத்தில் அமர்நாத் K மேனன் எழுதிய ஒரு செய்திக்கட்டுரை சொல்கிறது. சுருங்கச் சொல்வதானால் A string of electoral defeats since 2019 means the party is staring at an existential crisis. It will have to work hard to stop Jagan Reddy from getting a second term in 2024    அவ்வளவுதான்!

படிப்பினை : மோடி எதிர்ப்பு கேடு தரும்! 

மீண்டும் சந்திப்போம்.

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)