Thursday, May 20, 2021

#அடுத்தவீடு #கேரளா #ஆந்திரா அரசியல்! அப்புறம் கமல் காசர்!

ஒருவழியாக கேரளத்தில் இரண்டாவது முறையாக இடது முன்னணி அரசின் அமைச்சர்கள் இன்றைக்குப் பதவி ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் நடந்த ஐந்து மாநிலங்களில் கேரளம் தவிர்த்து மற்ற மாநிலங்களில் மந்திரிசபை பதவியேற்பு நடந்து விட்டது. 140 இல் 99 இடங்களைப் பிடித்தவர்கள், மந்திரிசபையை முடிவு செய்வதற்கு இத்தனை நாட்கள் ஆனது ஏன் என்ற கேள்வி இருந்தது. மந்திரிசபையில் யார்யார் என்பதை முடிவு செய்வதற்காகவே இத்தனை நாள் ஆகியிருக்கிறது என்பதை விட பழைய முகங்கள் எவரும் வேண்டாம் என்று தீர்மானிப்பதற்கே இத்தனை காலமாகி இருக்கிறது. முந்தைய மந்திரிசபையில் மிகவும் திறமையாகப் பணியாற்றி எல்லோராலும் அபிமானிக்கப் பட்ட K K ஷைலஜாவுக்கு மந்திரிசபையில் இடமில்லை என்பதே பினரயி விஜயன் மீது கேரளத்தில் கடும் அதிருப்தி ஏற்படக் காரணமாக இருப்பதாக செய்திகள் வருகின்றன.

 


எது எப்படியானால் தான் என்ன? தமிழக அரசியலின் கபட வேடதாரிகளுடைய வாழ்த்தும் வரவேற்பும் பினரயி விஜயனுக்கு இருக்கிறதே! அது போதாதா என்ன?  

******* 

ஆந்திர அரசியலில் என்ன நடக்கிறது என்பதைப் பார்த்தே நீண்டகாலமாகி விட்டதல்லவா? சந்திரபாபு நாயுடு கொஞ்சம் மாநிலத்தைத் தாண்டி அரசியல் செய்ய முயன்று YSR காங்கிரசிடம் எல்லாவற்றையும் இழந்து நிற்கிற பரிதாபத்தைக் கடைசியாகப் பேசிய நினைவு. ஆனால் முதல்வர் YS ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி செய்கிற விதம் மிகவும் விபரீதமானதாக இருக்கும் போலத் தெரிகிறதே!அவரை எதிர்த்தோ விமரிசித்தோ எவரும் வாயைத் திறக்கக் கூடாதென்ற ரீதியில் அப்படியான செயல்களில் ஈடுபடுவதாக சந்தேகிக்கப் படுகிறவர்கள் எவராயினும் அவர்கள் மீது Sedition தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்படுவதாகச் செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன.அவருடைய கட்சி MP ஒருவர்மீதே அப்படிக் குற்றம் சாட்டப்பட்டு, போலீசாரால் சித்திரவதை செய்யப்பட்டதாக எழுந்த புகார்மீது விசாரணை நடத்திய ஆந்திர உயர்நீதி மன்றம், அவருக்கு ஹைதராபாத் ராணுவ மருத்துவமனையில் பரிசோதனையும் சிகிச்சையும் அளிக்க உத்தரவு பிறப்பித்திருந்தது. கருத்து சுதந்திரம் என்று கம்பு சுற்றிக் கொண்டிருந்த போராளிகள் எவர் கண்ணிலும் இது ஏன் படவே இல்லை என்கிற அனாவசியமான கேள்வியை நான் கேட்கப்போவதே இல்லை! 


இப்படிப்போற்றிப்பாடப்பட்டதெல்லாம் மிகவும்  பழைய கதை!  Telugu media outlet TV5 News has moved the Supreme Court seeking quashing of an First Information Report (FIR) in a sedition case in Andhra Pradesh. Shreya Broadcasting Pvt Ltd, which owns TV5, has contended in its plea that the state government "intends to silence" critics and the media by filing a "vague FIR" and abusing the process of law. "It is humbly submitted that the continuance of the FIR is likely to cause a chilling effect on the media in such crucial times of the pandemic, when truthful and fearless reporting is the need of the hour," said the plea என்கிறது செய்தி. ஆட்சி அதிகாரம் கண்ணை மறைக்கிற தருணங்களில் வீழ்ச்சியும் சேர்ந்தே வரும் ரன்பது வரலாறு சொல்கிற அனுபவம்!

*******


எம்ஜியார் படப்பாடல் வரிகளோடு காட்சி தருகிற கமல் காசர் அது தனக்கே பாடமாகிப் போகும் 
என்பதை ஏனோ மறந்துவிட்டார்!   

கமல் காசர் கட்சியிலிருந்து இன்னொரு முக்கியப்புள்ளி CK குமரவேல் இன்றைக்கு விலகியிருக்கிறார் என்பது சிலகாலம் முன்புவரை இங்கே சென்னை விமானநிலைய மேற்கூரை மீண்டும் மீண்டும் பெயர்ந்து விழுந்த கதை மாதிரியான சுவாரசியமற்ற செய்தியாகிக் கொண்டு வருகிறது என்பது இந்த நாளுடைய விசேஷம். நேற்றைக்கு முருகானந்தம் என்ற புள்ளி விலகினாராம்! விலகியதற்கு குமரவேல் சொன்ன காரணம் விசித்திரமானது. Kumaravel told TNM that Kamal Haasan disappointed them as he made it clear that MNM is a leader based party and not a cadre based party என்கிறது இந்தச்செய்தி அவர் சொல்கிற மாதிரி cadre based party இங்கே எத்தனை இருக்கிறது என்பது தெரியுமா? cadre based party என்பதன் பொருள் புரிந்துகொள்ள முடிகிறதா? சொல்லுங்களேன்!

மீண்டும் சந்திப்போம்.    

4 comments:

  1. பச்சோந்தியில் நம்பர் ஒண்ணு இந்த திருமா. காசுக்குக் கூவுவதில் வைகோவின் கடைமையான போட்டியாளர். இவரும் வைகோவும் பொழுது போகாமல் கட்சி நடத்துகிறார்கள்.

    கமலஹாசன் படத்தை வெளியிட்டார். படம் தோல்வி. இனி அடுத்த படம் ஆரம்பிப்பார்

    ReplyDelete
    Replies
    1. வைகோ திருமா கமல் காசர் இவர்களில் எவருமே வேலைவெட்டி இல்லாமல் கட்சி நடத்தவில்லை என்பது முதல் திருத்தம் நெல்லைத்தமிழன் சார்! வேறு எவருடைய அஜெண்டாவையோ இவர்கள் காசு மற்றும் வேறு ஆதாயங்களுக்காக எடுத்துச் செய்கிறார்கள் என்பது அடுத்தது. பச்சோந்திகளாக இருப்பதே ஒரு சாமர்த்தியமான விஷயம்தான்!

      Delete
  2. குமரவேல் தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்டு சந்தைமடத்திலிருந்து கிளம்பிவிட்டார். ஙேறு என்ன சொல்ல

    ReplyDelete
    Replies
    1. குமரவேல் மடத்திலிருந்து கிளம்பிப்போவது இப்போது இரண்டாவது முறை. அவர் என்ன வேலைக்காக வந்தாரோ அது முடிந்ததும் கிளம்புகிறார். வேலைகொடுத்ததும் வெளியே வரச்சொன்னதும் ஆளும் கழகம்தான் என்பது பரவலாகப்பேசப்படும் செய்தி.

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)