Tuesday, May 11, 2021

K R கௌரி அம்மா! இடதுசாரி அரசியலில் ஒரே பெண் சிங்கம்!

கேரள அரசியலில் மிக நீண்டகாலம் பயணித்த இடதுசாரி திருமதி கே ஆர் கௌரி அம்மா தனது 102 வது வயதில் முதுமை காரணமாக நேற்றைக்கு காலமானார் என்ற செய்தியைப் படித்த போது நிறைய விஷயங்கள் நினைவில் வந்துபோயின. கொஞ்சம் கூட சமரசம் செய்து கொள்ளாத கொள்கைப்பிடிப்புடன் கடைசி வரை வாழ்ந்த சிங்கப்பெண் என்றால் அது கௌரி அம்மா மட்டும் தான்! எமெர்ஜென்சி தருணத்தில் சிறையில் அடைக்கப் பட்ட கௌரி அம்மா போலீஸ் சித்திரவதை பற்றிச் சொன்னது கேரளத்தில் மிகவும் பிரசித்தம்! "அந்த லத்திகளுக்கு மட்டும் வீரியம் இருந்திருக்குமானால் ஆயிரக்கணக்கில் லத்திகளைப் பிரசவித்திருப்பேன்"  


இந்த நேர்காணலில் நெறியாளர் கரயாத்த கௌரி தளராத்த கௌரி கலிகொண்டு நிந்நால் அவள் பத்ரகாளி இதுகேட்டு கொண்டே செறுபால்யமெல்லாம் பதிவாயி ஞங்ஙள் பயமாற்றி வந்நு என்ற பாலசந்திரன் சுள்ளிக்காடு கவிதை வரிகளைச் சொல்லி ஆரம்பிக்கிறார். 1987 இல் இடது சாரி அரசின் முதல்வராக  வருவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மார்க்சிஸ்ட் கட்சிக்குள் நடந்த உள்ளடி வேலைகளால் E K  நாயனார் முதல்வர் ஆனார். 1994 இல் கட்சிவிரோத செயல்பாடுகளுக்காக என குற்றம் சாட்டப்பட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.அந்தத்  தருணத்தில் எழுதப் பட்ட கவிதை அது. 4 வருடங்களுக்கு முன்னால் எடுக்கப்பட்ட இந்த நேர்காணலில் நெறியாளர் நினைவு படுத்திச் சொல்கிற அளவுக்கு அது பிரபலமான பாடலாக இருந்திருக்கிறது. அதுமட்டுமல்ல 2019 இல் கௌரி அம்மாவின் 101வது பிறந்தநாளின் போது கேரள முதல்வர் பினரயி விஜயனே அந்தப்பாட்டை முழுதுமாகச் சொல்லிப் புளகாங்கிதம்  அடைந்ததாக செய்திகளும் உண்டு. 

1994 இல் கட்சியை விட்டு வெளியேற்றப் பட்ட கௌரி அம்மா தனியாக ஜனாதிபத்ய  சம்ரக்ஷண சமிதி JSS என்ற அமைப்பைத் தொடங்கி காங்கிரஸ் தலைமையிலான UDF உடன் கூட்டணி வைத்து அரசியல் பயணத்தைக் தொடர்ந்ததில் 2001 A K அந்தோணியின் அமைச்சரவையிலும் இடம்பெற்றாலும், 2011 தேர்தல் தோல்விக்குப் பிறகு மார்க்சிஸ்ட் கட்சிக்கே வீடு திரும்ப நினைத்தார். ஆனாலும் CPIM - JSS இணைப்பு நடக்கவே இல்லை. ஆனால் இடதுமுன்னணியுடன் கூட்டணி மட்டும் வைத்துக் கொள்ளப் பட்டது.

கௌரி அம்மாவின் திருமண வாழ்க்கையும் அப்படிச் சொல்லிக் கொள்கிற மாதிரி அமையவில்லை. T V தாமஸ் என்கிற சக அமைச்சரைத் திருமணம் செய்து  கொண்டதிலும் கட்சி வாழ்க்கை குறுக்கே வந்தது. கம்யூனிஸ்ட் கட்சி CPI, CPI M என்று உடைந்ததில் கணவர் முன்னதிலும் மனைவி பின்னதிலுமாக. அதிகாரப் பூர்வமாக பிரியவில்லை என்றாலும் கடைசி வரை ஒட்டவே இல்லை என்பது இன்னொரு சோகம்.       

CPM: Most casteist party of India
Kerala's Iron Lady KR Gowri Amma passed away Monday. She was a different breed of communist - totally incorruptible and loaded with self respect. Below is a translation of the words in the image.
//At CPM meetings instead of using the word Saghav (Comrade), she used to address party leader EMS Namboodiripad as Mr EMS. This style of addressing pissed of Namboodiripad's son EM Sreedharan so much that he got up from his seat and shouted a caste slur at Gowri: "Gowri Chothy, sit down right there."
Even the great VS Achudanandan (future Chief Minister and an Ezhava) who was present in the meeting remained silent.
At that cursed moment, Gowri Amma would have understood how Draupadi was treated and humiliated in the Kaurava Sabha.//
For those not in the loop, Chovan is a caste slur used by some people in Kerala to mock the majority Ezhavas/Thiyyas. Chothy is the female equivalent.
Now think how many Ezhavas are having their moment of schadenfreude. I don't know if EM Sreedharan is alive but he must have watched in agony as first VS Achudanandan and now Pinarayi Vijayan are ruling Kerala, the land his family ruled for centuries.
In fact, Pinarayi might rule for another 10 years. He may be a remorseless killer but many people don't care. You see, this is why he wins. As long as there are people like EM Sreedharan in Kerala, there will be Pinarayi Vijayans too.
As long as Namboodiripad lived, no Ezhava leader could become the Chief Minister of Kerala despite Ezhavas being close to a third of the population of the state. In the 1987 elections, he pitched Gowri as the CM candidate and after winning he made EK Nayanar, a retired communist, as CM. Namboodiripad also ensured the defeat of Achudanandan so that the party could easily select Nayanar.
Moral of the story is Ezhavas are the biggest losers by supporting the CPM. Today, they have 27 MLAs in a house of 140, but both the Education and Finance portfolios are with Christians and Muslims. Despite so many MLAs the community gets zilch gains.
CPM's Hindu MLAs anyway do nothing for Hindus, let alone for their own castes.
Nairs, the second largest Hindu caste, are in a similar situation. After supporting Christians for decades, all that they got was extension of the charitable status of their association, the Nair Service Society. They had a caste based party named Nair Democratic Party but it's dissolved now because Christians no longer need Nair votes.
Christians and Muslims are very smart in creating or being part of political alliances in which they corner all the benefits - jobs, land, ministries.
On the other hand, Hindus in Kerala have been totally duped. Once Ezhavas are down to 15% and Nairs to 8%, their fate will be the same as that of the Hindus of Bengal under TMC.

The only Hindu caste that has always been with the RSS is the Arayan (fisherman) community. They are around 6%. They are in truth the only brave community of Kerala. Harmfuls really fear them. 

அந்தநாட்களில் தயிர்வடையைச் சாப்பிட்டுக் கொண்டே தோழர் வரதராஜன் சொல்வார் --ஒரு CPI மாவட்டச் செயலாளர் சொன்னதாக:: "கம்யூனிஸ்ட் கட்சிக்குள் வந்ததே தப்பு. கட்சியை விட்டு வெளியே போவது அதைவிடப் பெரிய தப்பு" 

லட்சியவாதம் பேசிக்கூட வீணாய்ப்போக முடியும் என்பதற்கு தோழர் கௌரி அம்மா வாழ்க்கையும்  ஒரு நல்ல உதாரணம்.   

டிஸ்கி: 

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய அஞ்சலிப்பதிவை இப்போதுதான் வாசித்தேன். 

2 comments:

 1. கம்யூனிஸ்ட் அரசு, கட்சி என்பதே சிறுபான்மையினரின் நன்மைக்காக மட்டும் செயல்படும் மதச்சார்பான கட்சி. இதனை கௌரி புரிந்துகொள்ளாதது அவருடைய தவறு

  ReplyDelete
  Replies
  1. புரிந்து கொள்ளாமல் இருந்தது கௌரி அம்மா மட்டும் தானா நெல்லைத்தமிழன் சார்?

   எமெர்ஜென்சி தருணங்களில் இந்திரா இடைச்செருகலாகச் செருகிவிட்டுப்போன pseudo secularism அதுவரை ஒழுங்காக இருந்த மார்க்சிஸ்டுகளையும் பீடித்து இன்றைக்கு அவர்களும் சாதிக்கட்சிதான் என்று குற்றம் சாட்டப்படுகிற அளவுக்கு சீரழிந்து கிடக்கிறார்கள்.

   Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

ஸ்டாலின் டெல்லி பயணம் சாதனையா? ::: புதிய தமிழகம் கட்சி Dr. கிருஷ்ணசாமி!

புதிய தமிழகம் கட்சி யின் நிறுவனரும் தலைவருமான டாக்டர் K .கிருஷ்ணசாமியை தமிழக அரசியலில் எப்படி மதிப்பிடுகிறோம்? அவரை அரசியலில் எந்த இடத்தில் ...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (322) அனுபவம் (252) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (87) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)