சில விவாதங்களின் காணொளிகள் திரும்பத்திரும்பப் பார்க்கிறமாதிரி இருக்கும். சிக்க மாட்டாரா என்ற எதிர் பார்ப்பிலேயே கேள்விகளாய்க் கேட்டாலும் கொஞ்சம் கூடத் தயங்காமல் தெளிவான பதில்களைச் சொல்லும் திருமதி நிர்மலா சீதாராமன்!இந்தியா டுடே South Conclave விவாதங்களில் ராகுல் கன்வலுடன் நடத்திய இந்த 46 நிமிட விவாதத்தில் தமிழக அரசியல் களத்தில், திமுக, காங்கிரஸ் கட்சிகளுடைய முகத்திரையைக் கிழித்து எறிந்திருக்கிறார்.
சொல்வதற்கும் செய்வதற்கும் கொஞ்சம் கூடப் பொருத்தமே இல்லாதவை திமுக, காங்கிரஸ் கட்சிகள் என்பதை சுற்றிவளைக்காமல், வார்த்தைகளை விரையம் செய்யாமல் சொல்லியிருப்பது சிறப்பு. இந்த விவாதம் தெற்கே பிஜேபி காலூன்றுமா என்ற தலைப்பில் இருந்தாலும், அதையும் தாண்டி முதலில் பாதுகாப்பு அமைச்சராக இருந்து இப்போது நிதியமைச்சராகவும் இருப்பதால், இரண்டுதுறைகளைக் குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டபோது அத்தனைக்கும் பொறுமையாகவும் புரிகிற மாதிரியும் பதில் சொன்னவிதம் அருமை! பேட்டியின் முடிவில் தமிழிலும் கேட்கச்சொல்லி பதிலும் சொன்னது மனதின் அடி ஆழத்திலிருந்து வந்ததாகவே கருதுகிறேன்.
இந்தியா டுடே நிகழ்ச்சிக்கு முன்னாடியே முகநூலில் நண்பர் இப்படிச் சொல்லியிருந்ததும் நினைவுக்கு வந்தது. வீடியோவைக் கொஞ்சம் பொறுமையாகப் பார்த்து விட்டு பாலாஜி சார் சொல்வது ஏற்புடையது தானா என்று கொஞ்சம் சொல்லுங்களேன்!
மீண்டும் சந்திப்போம்.
ஆஹா... அடுத்த விடீயோவை ரிசர்வ் பண்ண வைத்து விட்டீர்கள்!
ReplyDeleteசந்தோஷம் ஸ்ரீராம்! பலவிஷயங்களை விஷுவலாகப்பார்ப்பது மிகவும் உபயோகமானது.
Deleteகெக்கேபிக்குணி தயாநிதி மாறன் இளித்துக்கொண்டே அரசியல்பேசியது இந்த நிகழ்ச்சியின் மிகப்பெரிய காமெடி!
பாலாஜி வாசு எழுதியிருப்பது சரியானதுதான். இந்த பத்திரிகையாளர்கள், அதிலும் மூத்த பத்திரிகையாளர்கள் என்ற போர்வையில் கட்சிக்காரர்கள் செய்யும் அட்டஹாசம் தாங்கலை.
ReplyDeleteநிர்மலா சீதாராமன் நல்ல அட்மின். ஆனால் தலைமைப் பொறுப்புக்குச் சரிவர மாட்டார். 'தலைமை' என்பது அன்பைக் காண்பித்து எல்லோரையும் அரவணைக்கத் தெரிந்திருக்கவேண்டும், ஜெ. மாதிரி. அதனால் நி.சீ அதுக்குச் சரிப்பட்டுவரமாட்டார்.
வாருங்கள் நெல்லைத்தமிழன் சார்! உங்களுடைய அளவுகோல்களின் படி இருக்கும் ஒரு தலைவரையவாது கட்ட முடியுமா?
Deleteதலைமைப்பொறுப்புக்கு வருவதற்கான அத்தனை பண்புகளும் திருமதி நிர்மலா சீதாராமனிடம் இருப்பதாகவே கருதுகிறேன். இதே பக்கங்களில் change management , தலைமைப்பண்பு குறித்து நிறையப்பதிவுகள் இருக்கின்றன. இவை எனக்கு மிகவும் பிடித்த பரிச்சயமான சப்ஜெக்ட்.
தமிழகத்துக்கு என்றால் இப்போது இருக்கும் எடப்பாடி என்பது என் எண்ணம். ஆனால் காலம் இன்னும் நல்ல தலைவரைக் கொண்டுவரும் என்று நம்புகிறேன்.
Deleteகம்பெனி தலைமைப் பொறுப்பு என்பது வேறு, இந்தியா போன்ற நாடுகளில் மாநிலங்களின் அரசியல் தலைமைப்பொறுப்பு என்பது வேறு. நீங்க சொல்வதைப் பார்த்தால், இன்ஃபோஸிஸ் நாராயணமூர்த்தி சிறந்த பிரதம மந்திரியாக இருப்பாரா?
நாராயணமூர்த்தி கடைசியில் எப்படித்திரிந்துபோனார் என்பதைத் தெரிந்துதான் சொல்கிறீர்களா?
Deleteஒரு நல்ல தலைமைக்கான எதுவும் எடப்பாடி, இசுடாலின் அல்லது அவர்களைச் சுற்றியிருப்பவர்களிடம் இருந்ததே இல்லை. போட்டி போட்டுக்கொண்டு இலவசங்களை வாரியிறைத்து மாநிலத்தைக் குட்டிச்சுவராக்கிக்கொண்டிருப்பதை இரண்டு கழகங்களும் நிறுத்தவுமில்லை, திருந்தப்போவதுமில்லை.
கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்.