Showing posts with label சோனியா காங்கிரஸ். Show all posts
Showing posts with label சோனியா காங்கிரஸ். Show all posts

Wednesday, June 9, 2021

சின்னச் சின்னதாய்க் கொஞ்சம் #செய்திகளின்அரசியல் !

தினசரி ஏதாவது ஒரு ஆடியோவை வெளியிட்டு, யாரைக் குழப்புகிறார் சசிகலா? புதிய தறுதலை அறிவாளிகளே குழம்புகிறார்கள் என்றால் நாமெல்லாம் எந்த மூலைக்கு? 


தேர்தல் தோல்விக்குப்பின்னால் அதிமுக கொஞ்சம் துவண்டுபோய்த்தான் கிடக்கிறது.O பன்னீர் செல்வம் பழைய பன்னீர்செல்வமாக இருக்கிறாரா அல்லது புதிதாக தர்மயுத்தம் 2 என ஆரம்பிப்பாரா? சசிகலா அதிமுகவுக்குள் குட்டையைக் குழப்பிப் பார்க்கிறார் என்பது ஒருபக்கம், OPS என்னசெய்வாரோ  என்று இன்னொரு பக்கமுமாக கண்ணாமூச்சி ஆட்டம் நடந்து கொண்டிருக்கிறது.  இதில் திமுகவே ஒதுங்கிநின்று வேடிக்கை பார்க்கிறதென்றால் .........!


கமல் காசருடைய #மநீம கட்சி என்ன நிலைமையில் இருக்கிறது? மக்கள் நீதி மையத்தின் ஆலோசனை கூட்டம் இணையம் ஊடாக நடந்தது.கமலஹாசன் தானே பேசி தானே ஆலோசனை செய்திருக்கலாம் அல்லது தசவாதாரம் போல பல வேடங்களில் அவரே வந்து பேசியிருக்கலாம் என்று முகநூலில் ஸ்டேன்லி ராஜன் நேற்று முன்தினம் நையாண்டி செய்திருப்பது போலத் தானா? ஆனால் இரண்டு நாட்களாக பொள்ளாச்சி Dr. மகேந்திரன் திமுகவில் இணையப்போவதாக, பெரிய போஸ்டிங் காத்திருப்பதாக செய்திகள் கசிந்துகொண்டே இருந்தன.மு க அழகிரி - இசுடாலின் சந்திப்பு மாதிரியே அதுவும் வரும் ஆனா வராது ரகமாகிப்போய்விட்டது.


கமல் மாதிரியே, நிறைய பன்ச் டயலாகெல்லாம் பேசித் தன்னுடைய அரசியல் ஞானத்தை வெளிப் படுத்தியவர் விஜய் சேதுபதி. தேர்தல் ரிசல்ட்டுக்குப்பிறகு அரசியல் பன்ச் பேசினால் என்னவாகும் என்பது தெரிந்தவராக, சங்கடமான பன்ச்சை விட்டு சமையல் நிகழ்ச்சியில் சங்கீதம் பாடப்போறேன் என்று ஒதுங்கிவிட்டார். யார் சேனலில் என்று கூடத்தெரியாத அப்பாவியாக இருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.


என்ன தயா இதெல்லாம் என்று ஆதங்கப்பட வேண்டாம்! சமூக இடைவெளி, கொரோனா கட்டுப்பாடுகள், ஆட்டோவில் இருவர் மட்டுமே பயணிக்கலாம் இவை சட்டமே நாங்கள்தானடா திமுக அமைச்சர்களுக்குப் பொருந்தாது என்பது உங்களுக்குப் புரிந்திருக்க வேண்டுமே!

சோனியாவின் தவப்புதல்வன் ராகுல் காண்டிக்கு ட்வீட்டரில் மட்டுமே அரசியல் பேசத்தெரியும். அதையும் யார் எழுதிக்கொடுக்கிறார்கள் என்பது காங்கிகளின் பரமரகசியம். பப்பு ஒரு கீச்சைப் போட்டவுடன் நாலா பக்கங்களிலிருந்தும் வந்து எப்படிக் கிழிக்கிறார்கள் பாருங்கள்! இந்த லட்சணத்தில் நரேந்திர மோடிக்கு எதிராக அரசியல் களத்தில்
நிற்கக்கூடியவர் என்று ராகுலுக்கு முட்டுக்கு கொடுக்கிறார்களே. அது எப்படி?

இங்கே இசுடாலினுக்கு ஊடகங்கள் முட்டுக்கொடுக்க ஆரம்பித்து சில வருடங்கள் தான் ஆகியிருக்கும்! ஆனால் ராகுலுக்கு 2004 இலிருந்தே முன்களப்பிணியாளர்கள் முட்டுக் கொடுத்துவருகிறார்கள். முட்டுக்கொடுத்துக் கொடுத்தே இந்த நிலைமைக்குக் கொண்டுவந்து விட்டார்கள் என்பதையும் சேர்த்தே பாருங்களேன்!

மீண்டும் சந்திப்போம்.

Sunday, December 13, 2020

இரண்டு புத்தகங்கள்! புத்தகம் எழுதியே சோனியா காங்கிரசை மிரட்டுகிறார்களே!

தற்குறிகளைத் தலைமையாகக் கொண்ட சோனியா  காங்கிரசுக்கு, யாராவது அவர்களைப் பற்றிப் புத்தகம் எழுதிவிட்டால் ஜன்னி வந்துவிடும் என்பதை ஸ்பானிஷ் எழுத்தாளர் ஜேவியர் மோரோ எழுதிய சிவப்புச் சேலை::வாழ்க்கையே அதிகாரத்தின் விலை (The Red Saree: When Life is The Price of Power)  ஒரு புத்தகம் எவ்வளவு மிரட்டியது என்பதை சிவப்புச் சேலையைக் கண்டு மிரளும் காங்கிரஸ்! பதிவில் அந்தப்பக்கங்களில் முன்பே பார்த்திருக்கிறோம். வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த கே.நட்வர்சிங்கை எண்ணெய் பேர ஊழலில் பலிக்கடாவாக்கி மந்திரிசபையில் இருந்து வெளியேற்றிய பிறகு, அவர் தன்னுடைய சுயசரிதையை எழுதப்போகிறார் என்ற செய்தி கசிந்ததும் சோனியாவும் பிரியங்காவும் அவரது வீட்டுக்கே போய்த் தாஜா செய்த கதையையும் அந்தப்பக்கங்களில் பார்த்திருக்கிறோம்! 


முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தனது நினைவுகளை புத்தகமாக எழுதி வெளியிட்டதில் இது வரை மூன்று பகுதிகள் வந்தாயிற்று. நான்காவது பகுதி அவர் ஜனாதிபதியாக இருந்த 2012 -- 2017 காலத்தைய நினைவுகளாக வருகிற ஜனவரி மாதம் வெளிவர இருப்பதாக, பதிப்பாளர்களான ரூபா பப்ளிகேஷன்ஸ் அறிவித்திருக்கிறது. அதிலிருந்து சின்னச் சின்னதாக சில பகுதிகள் வெவ்வேறு ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றன.வாங்கின காசுக்காகக் கூவுகிற ஊடகங்களில் வந்த செய்தி ஒன்று இங்கே சாம்பிளாக  

ஆனால் முன்னைப்போலப் பதறக் கூடப் பொழுது இல்லாமல்  தலைக்குமேலே வெள்ளம் போன பிறகு சாண் என்ன முழம் என்ன என்ற கையறு நிலையில் சோனியா & கோ இருக்கிற மாதிரித்தான் தெரிகிறது.


தேர்தலுக்குத் தேர்தல் தோல்வியையே சந்தித்துக் கொண்டிருந்தால் மாமியார் மெச்சின மருமகள் என்பதைத்தாண்டி அரசியலே தெரியாத இத்தாலிய மம்மி தான் என்ன செய்வார்? மகன், மகள் இருவருமே அரசியலை வெறும் விளையாட்டாகவும், வெறும்  பொழுதுபோக்காகவும் எடுத்துக் கொள்கிறவர்களாக இருக்கையில் என்னதான் செய்வது? ராமச்சந்திர குஹாக்கள் குமுறிக் கதறி அழுவது ஏனென்று இப்போது புரிகிறதா?

 

Sanjay Jha's new Twitter bio reads: "Congressi by DNA. Sacked & Suspended. My big blunder: Fought for internal democracy, suggested changes to revive Congress, challenged Rip Van Winkle leadership. (sic)" இப்படித்தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் சஞ்சய் ஜா காங்கிரசின் முன்னாள் தேசிய ஊடகத் தொடர்பாளர். கடந்த ஜூலையில் கட்சித்தலைமையை விமரிசித்ததற்காக கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப் பட்டவர். இவர் எழுதிய புத்தகம் ஒன்று இந்த டிசம்பர் 21 அன்று வெளியாகிறது. அமர்த்யா சென் இந்தப்புத்தகத்தைப் பற்றிச் சொன்னதிலிருந்து ஓரிரு வாக்கியங்களை முகப்பில் போட்டு இருப்பதிலிருந்தே சஞ்சய் ஜா காங்கிரஸ் DNA தன்னுள் இருப்பதாகச் சொல்வது அந்த DNA கண்மூடித்தனமான மோடி எதிர்ப்பு, வெறுப்பைத்தவிர வேறொன்றுமில்லை என்பதையும் கோடிட்டுக் காட்டிவிடுகிறது.

அப்படி சஞ்சய் ஜா என்னதான் சொல்லி இருக்கிறார் என்பதை இங்கே நூலின் ஒருசிறுபகுதியை எடுத்துப்போட்டுச் சொல்லி இருக்கிறார்கள்! அதிலிருந்தும் ஒரு சிறுபகுதி The Congress is its own worst enemy, the saying goes. Infighting is in the party’s DNA, and internecine feuds are exhausting. Scurvy wheeler-dealers forget that the real adversary is the BJP, the default beneficiary of the Congress’s self-destruction. 


2014 ஜனவரியில் டைம்ஸ் நவ் டிவிக்கு
ராகுல் காண்டி அளித்த முழுப்பேட்டி யிலிருந்தே காங்கிரசின் வீழ்ச்சி தொடங்கிவிட்டதாக சஞ்சய் ஜா பொருமியிருக்கிறார். அதில் இருந்தே பிஜேபியினர் ராகுல் காண்டியை பப்பு எனக்கிண்டல் செய்ய ஆரம்பித்துவிட்டதாக இப்போது புலம்புவதில் என்ன பிரயோசனம்?

காங்கிரசைப் பீடித்திருக்கும்  பெரிய வியாதி தேர்தல் தோல்விகள் அல்ல! சோனியாவும் வாரிசுகளும் தான் என்பது இந்த இரண்டு புத்தகங்களைப் படித்துத்தான் தெரிந்துகொள்ள வேண்டுமா என்ன?

ஆனாலும் வாசிப்பதே சுவாசமாக நினைக்கிற ஒருவன் இந்தப் புத்தகங்களை அறிமுகப்படுத்தாமல் இருந்து விட முடியுமா?

மீண்டும் சந்திப்போம்.      

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)