சுதந்திரதினக் கொண்டாட்டங்களை ஒட்டி வீரச் செயல் புரிந்ததற்காக 132 பெயர்கள் விருதுகளுக்காகப் பரிந்துரை செய்யப் பட்டு ஜனாதிபதி மாளிகை அறிவித்திருப்பதில், நமக்கு மிகவும் பரிச்சயமான பெயர் விங் கமாண்டர் அபி நந்தன்! தமிழகத்தைச் சேர்ந்த அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. கார்டூனிஸ்ட் சதீஷ் ஆசார்யா ஒரு அற்புதமான கார்டூனில் விங் கமாண்டர் அபிநந்தனை வாழ்த்தியிருக்கிறார். நம்முடைய பங்குக்கு நாமும் அவரை வாழ்த்துவோம்!
அபிநந்தனோடு சேர்ந்து கவனிக்கப்படவேண்டிய இன்னொரு சாதனையாளர்,
ஸ்க்வாட்ரன் லீடர் மின்டி அகர்வால்! Flight Controller ஆகப் பணி புரியும் இந்த வீராங்கனை, அபிநந்தன் உள்ளிட்ட நம்முடைய விமானிகளை வழிநடத்திய அந்த உன்னதமான தருணத்துக்காக யுத்த சேவா மெடலைப் பெற்றிருக்கிறார். அபிநந்தன் பாகிஸ்தானில் சிறைப்பட்டு மூன்றே நாட்களில் விடுவிக்கப்பட்டு நாடுதிரும்பிய பரபரப்பான சமயத்தில் இவரைப்பற்றிய செய்திகள் வந்தாலும் எல்லோருடைய கவனமும் அபிநந்தன் மீது மட்டுமே இருந்ததால் அப்போது பெரிதாகக் கவனிக்கப்படவில்லை.
நாம் கவனிக்கவில்லை என்றாலும் மத்திய அரசு அவரது சேவையைக் கவனித்ததோடு விருதும் வழங்கி கௌரவப் படுத்தியிருக்கிறது. The IAF received a total of 13 awards including five Yudh Seva Medals and seven Vayu Sena Medal. At least five IAF pilots who were part of the mission to strike a Jaish-e-Mohammad camp inside Pakistan, and Minty Agarwal, a lady officer who played a key role as flight controller during the Pakistani retaliation, were also among the military awardees.
The Vayu Sena medal award winners are Group Captain Saumitra Tamaskar, Wing Commander Pranav Raj, Wing Commander Amit Ranjan, Sq Ldr Rahul Basoya, Sq Ldr Pankaj Arvind Bhujade , Sq Ldr B Karthik Narayan Reddy, Sq Ldr Shashank Singh. Besides Minty Agarwal, the Yudh Sena medal winners are Air Commodore Sunil Kashinath Vidhate, Group Captain Yeshpal Singh Negi, Goup Captain Hemant Kumar, Group Captain Hansel Joseph Seqeira.என்கிறது செய்திக்குறிப்பு. 13 விருதுகள் என்று செய்தி சொல்கிறதே , இங்கே 12 பெயர்கள் மட்டும் தானே இருக்கிறது என்று குழம்பமாட்டீர்கள் என நம்புகிறேன். முதல் பெயராக அபிநந்தன் என்று சேர்த்துப் பார்த்தால் கணக்கு சரியாகவரும்!
வீரர்களில் விருது பெற்றவர்கள் மட்டும் தான் கவனிக்கப்பட வேண்டியவர்கள் என்றில்லை! ஒரு குழு உணர்வு Team Spirit உடன் செயல்படுகிறவர்கள் நம்முடைய முப்படையினர். இதைப் புரிந்துகொண்டால் நம்முடைய வீரர்கள் ஒவ்வொருவரையும் இந்த சுதந்திரத்திருநாளில் அரசு கௌரவத்திருக்கிறது என்றே எடுத்துக்கொள்ளவேண்டும்.
விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தானியர்களிடம் சிக்கி இருப்பது குறித்து சமூக வலைத்தளங்களில் படு கேவலமான பகிர்வுகள், சமாதானப் புறாக்கள் வேடத்தில் வந்து கொண்டிருக்கும் போது நடிகர் மாதவனின் ட்வீட்டர் பகிர்வு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது! எங்கள்Blog டிவிட்டரில் கூட, கொஞ்சம் வாயை மூடிக் கொண்டிருந்தால் நல்லது என்ற மாதிரி ஒரு செய்தி!
It’s a war against terror not between 2 nations yet. Dear Media —-you can actually stop this escalation .. please let’s be responsible and work towards peace.
TRP is very important for them. They will go to any extreme for that.
அங்கேயும் கொஞ்சம் கலப்படமான பின்னூட்டங்கள்!
கலப்படம் என்றால் கழகங்கள் நினைவு வராமல் இருக்குமா என்ன?
இன்றைய செய்திகளில் தமிழக அரசியல் நிலவரம் படு கலவரமாக இருப்பதைப் பார்த்துச் சிரிப்பதா? அழுவதா? என்று ஒரே குழப்பம்! ஊடகங்களைப் பார்த்து வேறென்ன வரும்?
மதுரைக்கே உண்டான வெள்ளந்தித்தனம், தெனாவட்டு மிகுந்த விஜய காந்தை இந்தத் தேர்தல் களத்தில் ரொம்பவும் மிஸ் பண்ணுகிறோமோ? இந்தப் பழைய வீடியோ தொகுப்பைப் பார்த்த பிறகு அப்படித்தான் ஒரு எண்ணம் எழுந்தது.
அதிக தொகுதிகள், அதிக டிமாண்ட் வைப்பதால் தேமுதிகவை திமுக நிராகரிக்க உள்ளதாக திமுக வட்டார தகவல்கள் வெளியாகி உள்ளது. நாளை ஸ்டாலின் பிறந்த நாளில் தொகுதி பட்டியல் வெளியாக வாய்ப்புள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன என்கிறது ஹிந்து நாளிதழ் பழம் நழுவிப் பாலில் விழும் என்று அந்தநாளில் கருணாநிதி காத்திருந்து ஏமாந்தது போல இல்லாமல் இந்தமுறை திமுக ரொம்ப விழிப்போடு இருப்பதாக எடுத்துக் கொள்ளலாமா?
முக அழகிரி கொடுப்பது ஸ்டாலினுக்கு சாபமா? தமிழக மக்களுக்கு ஆசீர்வாதமா? எதுவானாலும் அதை ஜனங்களாகிய நாம்தானே முடிவு செய்ய வேண்டும்!
இது கேப்டனோட 2014 கூட்டணி அறிவிப்பு! ச்சும்மா ட்டமாஷுக்கு! எப்படியிருந்தவரைப் போய் இப்படி நாலுக்கும் அஞ்சுக்குமா அலைய விடறாங்க?
அது யாரு அடக்க ஒடுக்கமா பின்னால? டாக்டர் யக்கோவ் தானா?!