அவரது பிடிவாதம் அவர் மீது கண்மூடித்தனமாக நம்பிக்கை வைக்கப் பயிற்றுவிக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான அவரது சீடர்களின் வாழ்வை மட்டுமல்ல, முஸ்லீம்களின் இமேஜையும் சீர்குலைத்துவிட்டது என்று அந்த சமூகத்தைச் சேர்ந்த பலர் கூறுகிறார்கள்.
அவரது நிகழ்வில் (மார்கஜ்) கலந்து கொண்ட பலர் கொரானா தொற்று உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், மெளலானா சாத் முஷீர்கள் எனப்படும் தனது ஆலோசகர்களுடன் ஒளிந்து கொண்டிருக்கிறார்.
இந்தியாவில் கொரானா தொற்றுள்ளதாகக் கண்டறியப்பட்டவர்களில் 30% பேர் தப்லிகி ஜமாத்தோடு தொடர்புடையவர்கள். உத்தர பிரதேசத்தில் இந்த எண்ணிக்கை 50% ஆக உயர்ந்துள்ளது ( இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்படாத செய்தி தமிழ்நாட்டில் இது ஏறத்தாழ 80-90%) தில்லி துர்க்மான் கேட்டில் தலைமையகத்தைக் கொண்டிருக்கும் தப்லிகி ஜமாத்திலிருந்து பிரிந்த இன்னொரு அமைப்பான ஷுரா -இ- ஜமாத், தொறு நோய் பரவும் செய்தி கிடைத்ததுமே தனது எல்லா நிகழ்சிகளையும் ரத்து செய்து விட்டது. ஆனால் அந்தச் செய்தி குறித்துச் சற்றும் கவலைபடாத மெளலானா சாத் திட்டமிட்டபடி நிகழ்ச்சிகள் நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தினார். வைரலாகப் பரவிய அவரது டேப் ஒன்றில் அவர் " மசூதியில் இறப்பது உயர்ந்த சாவு" என்று போதித்துள்ளார்.
மும்பையில் வசித்து வரும் தப்லிகி ஜமாத்தின் மூத்த உறுப்பினர் முகமது ஆலம் "சாத்திற்கு எல்லாம் தெரியும். அவரது பிடிவாதம் அப்பாவி தப்லிகிகளை (முஸ்லீம்களை) கொள்ளை நோயின் வாயில் தள்ளிவிட்டுவிட்டது" என்கிறார். "தன்னை முஸ்லீம் உலகின் அமீராக (அரசனாக்)க் கருதிக் கொள்ளும் ஒருவர். மெக்கா, மதீனாவிற்கு அடுத்தாற்போல் தப்லிகி மார்கஜ்தான் புனிதமான இடம் எனச் சொல்லும் ஒருவர் எப்படி கொள்ளை நோய் பற்றி அறியாதவராக இருந்திருக்க முடியும்?" எனக் கேட்கிறார் அவர்.
மாவைச் சேர்ந்த இன்னொரு மூத்த தப்லிகி உறுப்பினர் லியாகத் அலி கான், " பொறுப்புள்ள முஸ்லீம் சிந்தனையாளர்களின் அறிவுரைகளை ஏன் மெளலானா சாத் குப்பைத் தொட்டியில் போட்டார்? ஏன் தனனை வைரஸ் பரிசோதனைக்குட்படுத்திக் கொள்ளாமல் ஒளிந்த்திருக்கிறார்?" எனக் கேட்கிறார்.மெளலானா சாத்தின் நெருங்கிய நம்பிக்கைக்குரிய பெயரை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பாத ஒருவர், நிகழ்ச்சியை ரத்து செய்யுமாறு மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டதற்கு அவர் செவிமடுக்கவில்லை என டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் தெரிவித்தார். "இப்போது அவர் தனது சீடர்களையே அபாயத்தின் விளிம்பிற்குத் தள்ளிவிட்டார்!" என்கிறார்
மீம் அஃப்சல் என்ற காங்கிரஸ் தலைவரும், ஜாபர் சரேஷ்வாலா என்ற முஸ்லீம் தலைவரும், மெளலானாவிற்குப் பல முறை நிகழ்ச்சியை ரத்து செய்யுமாறு தகவல் அனுப்பப்பட்டதாகவும் ஆனால் அவர் அதைப் பொருட்படுத்தவில்லை என்றும் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்
"ஜனவரி -பிப்ரவரியில் கோவிட்-19 பற்றிய தகவல்கள் எங்களுக்குக் கிடைக்கத் தொடங்கியதும் நாங்கள் எல்லா நிகழ்ச்சிகளையும் ரத்து செய்தோம், இந்தியாவிற்கு வருகைதரயிருந்த அயல் நாட்டினரைத் தடுத்து நிறுத்தினோம். ஊரடங்கு இருக்கும் என எதிர்பார்த்தோம். அதனால் கூட்டங்கள் இல்லாமல் பார்த்துக் கொண்டோம்" என்கிறார் மருத்துவரும் ஷுரா பிரிவின் மூத்த உறுப்பினருமான டாக்டர் எம்.எஸ் கித்வாய்
என்றாலும் மெளலானா சாத்தின் நெருங்கிய மற்றொரு உதவியாளர் மெளலானா ஹாரிஸ், " அயல்நாடுகளிலிருந்து வந்த ஜமாத் உறுப்பினர்கள் இந்தியாவில் நுழைய இந்திய அரசு அனுமதித்தது. அது எப்படி எங்கள் தவறாகும்?" என்று தனது தலைவருக்கு ஆதரவாக வாதிடுகிறார்.
மற்றொரு முஸ்லீம் அமைப்பான தியோபந்த் துறவி அப்துல் காசிம், " தியோபந்த் இஸ்லாமிக் செமினரி மூன்றாண்டுகளுக்கு முன்னரே தப்லிகி ஜமாத்தைத் தடை செய்து விட்டது" என்கிறார்
[ இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வந்த செய்தியின் தமிழாக்கம்]
இங்கே ஒவ்வொரு ஊடகத்துக்கும் ஊடகக்காரருக்கும் ஏதோவொரு சார்புநிலை இருக்கிறது. அதையும் தாண்டிக் காசுக்கு கூவுவது ஊடகங்களுடைய இன்னொருபக்கமாகவும் இருக்கிறது. செய்திகளைத் தவிர்ப்பதால் ஊடகப்பொய்களிலிருந்து தப்பித்துவிடுவோம் என்பதுகூடத் தவறான அனுமானம் தான்! வருகிற செய்திகளிலிருந்து உண்மையைப் பகுத்து அறிய முடிவதுதான் உண்மையிலேயே பகுத்தறிவு! செய்திகள் உண்மையா பொய்யா என்பதை அதன் வேரைப் பிடித்துப் பார்க்கப்பழக வேண்டும். தொடர்ந்து பழகினால் எவராலும் முடிகிற விஷயம்தான்!
மீண்டும் சந்திப்போம்.
அழிப்பதே எங்கள் நோக்கம் என்று வெளிப்படையாகச் சொல்லி இருக்கலாம்:(
ReplyDeleteவாருங்கள் அம்மா!
Deleteதங்களுடைய வன்மத்தை அவர்களில் சிலர் மறைத்ததே இல்லை.ஆனாலும் மீதமுள்ளவர்களும் கூடத் தங்களில் பலர் தவறுசெய்வதைத் தட்டிக்கேட்பதில்லை, கண்டிப்பதுமில்லை. இந்தவிஷயத்தில் .பேசுவதற்கு நிறைய இருந்தாலும், இதை பதிவிட்டதும் கூட, நமக்குத் தகவலாவது தெரிந்திருக்க வேண்டும் என்பதற்காகத்தான்.
கஷ்டம்... கஷ்டம்...
ReplyDeleteகஷ்டம் கஷ்டம் என்பானேன்? துஷ்டரைத் தூரவிலக்கிவிடு என்றல்லவா சொல்லவேண்டும்! சரிதானா ஸ்ரீராம் ?
Deleteஅதெல்லாம் ஏற்கனவே முடிவானது தான்...
ReplyDeleteகொரானா பரவி வந்த நிலையில் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களை சரியாக சோதனைக்கு உட்படுத்தாதது அரசு ஊழியர்களின் தவறு என்றே படுகிறது...
பிறரது தவறுகளைச் சுட்டிக் காட்டத் தயங்கினால் நீதியும் நியாயமும் எப்படி நிலைத்திருக்க முடியும்?...
வாருங்கள் துரை செல்வராஜூ சார்!
Deleteநீங்கள் சொல்வது சரிதான்! பிரிட்டிஷ்காரர்களிடமிருந்து அரசியலமைப்பை மட்டும் நாம் காப்பியடிக்கவில்லை ஒரு ஒழுங்கீனமான அரசு இயந்திரத்தையும் சேர்த்தே சுவீகரித்திருக்கிறோம். நாய் வாலை நிமிர்த்தமுடியாது என்பது தெரிகிறது, கொஞ்சம் வெட்டித்தான் ஆக வேண்டும். அதற்கு எப்போது நேரம் வரப்போகிறதோ?
உங்களிடம் தனிப்பட்ட முறையில் சில சந்தேகங்களைக் கேட்க விருப்பம்...
Deleteபொது வெளி வேண்டாம்... நன்றி...