இந்த 49 நிமிட நேர்காணலில் கரண் தாப்பர், பிரசாந்த் கிஷோர், The Wire சித்தார்த் வரதராஜன் மூவரும் மோடிவெறுப்பு என்கிற ஒற்றைப்புள்ளியில் இணைந்திருப்பதைப் புரிந்துகொள்ள பெரிய அளவுக்கு அரசியல் ஞானம் வேண்டியதே இல்லை. ‘Modi is Not Caring Enough, It’s His Greatest Weakness’: இப்படி பிரசாந்த் கிஷோர் சொல்வதாக வீடியோவுக்குத் தலைப்பு வைத்தாயிற்று. என்ன முக்கிப்பார்த்தும் கூட நேர்காணலின் தலைப்பில் சொன்னதை நியாயப்படுத்த முடியவில்லை! மோடியுடன் பழகிய அனுபவத்தில் அவருடைய வலிமை என்ன என்பதைக் கரண் தாப்பர் கேள்விகேட்டு பிரசாந்த் கிஷோர் சுற்றிவளைத்துப் பதில் சொல்வதற்குள்ளாகவே முதல் இருபது நிமிடம் ஓடிவிடுகிறது. அப்படி என்ன வலுவான விஷயங்களை மோடியிடம் பார்த்தாராம்? RSS பிரசாரகராக 15 வருடம், பிஜேபி கட்சிப் பணியில் 15 வருடம், அப்புறம் அரசியல் தலைவராக 15! வருடம் என்று 45 வருட அனுபவம், அடுத்தவர் சொல்வதைக் கவனமாகக் கேட்பவர் என்று நிறுத்தி நிறுத்தி சொல்லும்போதே பிரசாந்த் கிஷோருக்கு நரேந்திர மோடியைப் பற்றி விசேஷமாகச் சொல்கிற அளவுக்குப் பரிச்சயம் இருந்ததில்லை என்பதான குட்டு உடைபடுவது தான் மிச்சம்! கொஞ்சம் பொறுமையாக இந்தத் தமாஷாவைப் பார்க்க முடிந்தால் பிரசாந்த் கிஷோர் எப்படி வெற்றிகரமான தேர்தல் உத்தி வகுப்பாளராக ஆனார் என்கிற கேள்விக்கும் கூட விடை புரிய வரலாம்!
இதை இன்னொரு விதத்திலிருந்து பார்க்கலாம்! ஜனங்களிடமிருந்து கற்றுக்கொள்வது ஜனங்களுக்கு கற்றுக் கொடுப்பது என்ற இரண்டு விஷயங்கள் கம்யூனிஸ்ட் கட்சியில் சொல்லப்படுவதுண்டு. கம்யூனிஸ்ட் கட்சியில் நரேந்திர மோடியை விட அதிக கால அனுபவம் உள்ளவர்களுண்டு. ஆனால் ஏன் நல்லகண்ணு போன்றவர்களால் தங்களுடைய கட்சியில் உள்ளவர்களுக்கே ஒரு தெளிவான அரசியல் பார்வையைக் கற்றுக் கொடுக்க முடியவில்லை என்ற கேள்வியைக் கேட்டுப்பாருங்கள்! இன்னும் தெளிவான விடை கிடைக்கலாம்!
ஒரிஜினலாக இந்த ஞாயிற்றுக் கிழமை ஒரு பழைய பாக்கியராஜ் படமான தூறல் நின்னுபோச்சுக்குத் தான் திரைப்பட விமரிசனமாக ச்சும்மா ஜாலிக்கு எழுத உத்தேசித்திருந்தேன். கரண் தாப்பரும் பிரசாந்த் கிஷோரும் குறுக்கே வந்து 49 நிமிடங்களை எடுத்துக்கொண்டுவிட்டார்கள் என்பதால் பார்த்து ரசிக்க அந்தப்படத்திலிருந்து இளையராஜாவின் இசையில் இரண்டு அருமையான பாடல்கள்!
தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி!
ஏரிக்கரைப் பூங்காற்றே! நீ போற வழி தென்கிழக்கோ?
மீண்டும் சந்திப்போம்!
அந்தப் பழமொழி -
ReplyDeleteஆண்டிகள் கூடி மடம் கட்டியது....
நினைவுக்கு வருகிறது...
வாருங்கள் துரை செல்வராஜூ சார்!
Deleteபழமொழியைக் கொஞ்சம் மாற்றி வைத்துக் கொள்ளலாமா? ஊடகங்கள் கூடி மோடி வெறுப்பை விதைத்து அறுவடை செய்ய முயற்சிப்பது மாதிரி!
ஆனால் அந்தக் காலத்து ஆண்டிகள் வேறு...
ReplyDeleteஇன்றும் கூட அந்தக் காலத்து ஆண்டி மாதிரி சாதுவானவர்கள் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள்! என்ன, ஆண்டிப் பண்டாரம் மாதிரி வேஷம் கட்டினால் ஓசிச்சோறு, காசுபணம் கிடைக்குமே என்று பலர் உள்ளே பகுத்தறிவோடு புகுந்துவிட்டனர், அவ்வளவுதான்! காவிக்குப் பதிலாகக் கருப்பு!
Delete