மாலை மயங்கும் 6.40 மணிக்கு தொடங்குகிறது உத்தவ் தாக்கரே பதவியேற்பு நிகழ்வு.எந்த சிவாஜி பார்க்கில் 1966 இல் பால் தாக்கரே மராத்திய மக்களுடைய உணர்வுகளை தென்னிந்திய மக்களுக்கெதிராகத் திருப்பி விட்டு சிவசேனா கடையை ஆரம்பித்தாரோ அதே சிவாஜி பார்க்கில் இன்று தனது பதவியேற்பு நிகழ்வை மிக ஆர்ப்பாட்டமாக நடத்தவிருக்கிறார்.
டைம்ஸ் ஆப் இந்தியாவில் சந்தீப் அத்வர்யு வரைந்திருக்கும் கார்டூன் கனகச்சிதமாக விஷயத்தை சொல்லிவிடுகிறது. மஹாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 5 வருடங்களில் ஊழலற்ற ஆட்சியைக் கொடுக்க முடிந்த தேவேந்திர ஃபட்னவிசுக்கு, ஊழலுக்குப் பெயர்போன சரத் பவாரை, ஊசலாட்டத்துக்குப் பெயர் போன தாக்கரேக்களை சமாளிக்கிற சூது தெரியவில்லை என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.
ஹிந்து ஆங்கிலநாளிதழுக்காக சுரேந்திரா போட்ட கார்டூனில் ஒரு பகுதி மட்டும் உண்மை. முரண்பாடுகளின் மொத்த உருவமாக அமைந்திருக்கிற சிவசேனா கூட்டணி அந்த முரண்பாடுகளாலேயே முடிந்து விடும் என்பது வரை சரிதான்!
இந்தப்படத்தைப் போட்டு ஹிந்துஸ்தான் டைம்ஸில் Sharad Pawar-Sonia Gandhi axis can revive Congress, NCP | Opinion எழுதியிருக்கிறார் அபய் வைத்யா.There was enormous hesitation in the Congress to ally with the Shiv Sena to stake claim to power in Maharashtra. That, however, became a reality, only because of Pawar’s political acumen, his persuasive skills and his ability to accommodate disparate interests. காங்கிரஸ் சார்பு ஊடகத்தில் இப்படிக் காங்கிரஸ் மீண்டும் உயிர்த்தெழுகிற மாதிரியான கற்பிதங்கள் தம்பட்டம் அடிக்கப்படுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை தான்! ஆனால் சரத் பவாருக்கு காங்கிரஸ் முடிந்து போனாலென்ன? பிழைத்தால் தான் என்ன? இருபது வருடங்களுக்கு முன்னால் சோனியாவின் பிரதமர் கனவுக்கு ஆப்பு வைக்கிற மாதிரி அவருடைய இத்தாலிய பூர்வீகத்தை எதிர்த்துக் கலக்க கொடி எழுப்பியவர் சரத் பவார். ராகுல் காண்டி மாதிரி ஒரு உதவாக்கரைப் பிள்ளையை வைத்துக் கொண்டிருக்கிற காங்கிரஸ் மறுபடியும் மத்தியில் ஆட்சியைப் பிடிப்பதென்பது குதிரைக் கொம்புதான்! அண்ணன் மகன் அஜித் பவாரை மஹாராஷ்ட்ரா அரசியலுக்கும் ஒரே மகள் சுப்ரியா சுவேவை நாடாளுமன்றத்துக்கு அனுப்பி மத்திய ஆட்சியில் பங்கெடுக்கிற பழைய நினைப்பெல்லாம் இப்போதும் சரத் பவாருக்கு இருக்கிறதா? இந்தக்கேள்விக்கு விடைதெரியாமல் Opinion என்று எத்தையாவது எழுதிவிட்டால் சரியாகப் போய்விடுமா? உத்தவ் தாக்கரேவின் பேராசையைப் பயன்படுத்திக் கொண்டு மஹாராஷ்டிராவில் மீண்டும் மறைமுகமாக ஆட்சியை பிடித்திருக்கிற சரத் பவார் இதேபோல இதர மாநிலங்களிலும் காங்கிரசை உயிர்த்தெழ வைத்து விட முடியுமா?
Breaking: 6 ministers being sworn in Maharashtra: Balasaheb Thorat, Nitin Raut (Cong), Chaggan Bhujbal, Jayant Patil (NCP), Subhash Desai, Eknath Shinde (Shiv Sena).. DCM likely to be
who will be sworn in next week after confidence vote.
3:12 PM · Nov 28, 2019 from New Delhi,
அஜித் பவாருக்கு இங்கே நம்மூர் ரெண்டு முருகன் மாதிரி ஆயுசு முழுக்க இரண்டாவது இடம்தானா? இந்தக் கேள்விக்கு சரத் பவார் தனக்கடுத்து மகள் சுப்ரியா சுலேவை நம்பர் 1 இடத்துக்குக் கொண்டு வரப் போகிறாரா? இல்லையா? இதற்கு விடைதெரிய வேண்டுமே!
உத்தவ் தாக்கரேவுக்கு தற்போதைய கூட்டாளிகள் முதுகில் குத்துகிற வாய்ப்புக் கிடைக்குமா? அல்லது கூட்டாளிகள் அவர் முதுகில் குத்துவார்களா? விடை தெரிவதற்கான countdown மாலை 6.40 மணிக்குத் தொடங்குகிறது!
மீண்டும் சந்திப்போம்.











