மஹாராஷ்டிரா அரசியலில் 50 ஆண்டுகள் பழம்தின்று கொட்டை போட்டவர் சரத் பவார். இப்போது நடந்து முடிந்த மகா இழுபறியில் இன்றைய நிலவரப்படி ஜெயித்தவர் அவர் ஒருவர்தான்! இறுதிமூச்சை விடத் தயாராக இருந்த சோனியா காங்கிரசுக்கு, கொஞ்சம் அவகாசம் கிடைத்திருக்கிறது. ஆனால் இந்தியா டுடே முதல் இங்கே திமுகழகத்தின் ஆசிபெற்ற ஊடகங்கள் வரை என்னவோ இதுவரை தடுத்து நிறுத்தமுடியாதபடி இருந்த பிஜேபியின் அசுர வளர்ச்சியை காங்கிரஸ் அணை போட்டுத் தடுத்து விட்ட மாதிரி, மோடி, அமித் ஷா கொட்டம் அடக்கப்பட்டு விட்டதாகவும் பெரிதாகத் தம்பட்டம் போட்டுக் கொண்டிருப்பதிலேயே, நிலவரம் அப்படியில்லை என்பது புலப்படுகிறது.
உத்தவ் தாக்கரே நாளை மஹாராஷ்டிரா முதல்வராகப் பதவியேற்கிறாராம்! இந்திய அரசியல் சரித்திரத்தில் முதல்முறையாக ஒரு முதல்வர், அமைச்சர்கள் பதவி ஏற்காத நிலையில், மஹாராஷ்டிர MLA க்களுக்கு இன்று பதவிப்பிரமாணம் செய்து வைக்கப் பட்டிருக்கிறது! ராகுல் காண்டி நாளை தாக்கரே பதவி ஏற்பு நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை என்று அறிவிக்கப் பட்டிருக்கிறது. என்னமாதிரியான அரசியல் பூடகம் இது?
தி.மு.கழகமோ, சிவசேனாவோ, NCP, காங்கிரசோ இப்படி வாரிசுகள் கோலோச்சும் கட்சிகளில் நேரடி வாரிசுகளுக்கு மட்டுமே முழு உரிமையும் கொடுக்கப் படும் என்பது மீண்டும் ஒரு முறை அழுத்தமாகப் பதிவு செய்யப் பட்டிருக்கிறது. அஜித் பவார் காங்கிரசை அண்டி இருக்க வேண்டாமே என்று அடுத்தடுத்து செய்த முயற்சிகளை சித்தப்பூ சரத் பவார் லாவகமாகக் கிள்ளி எறிந்திருக்கிறார்.
டெக்கான் ஹெரால்ட் நாளிதழில் சஜித் குமார் இப்படி லந்தடித்திருக்கிறார். வங்கிகளில் வாங்கிய கடன் 1951 கோடி ரூபாய்களைத் திரும்பிச் செலுத்தாமல், அழிச்சாட்டியம் செய்துவருகிற டெக்கான் ஹெரால்ட் இப்படி ஒரு கற்பனையை வெளியிடாமல் இருந்தால் தான் ஆச்சரியம்!
மிகா அஜீஸ் ட்வீட்டரில் வெளியிட்டிருக்கிற இந்த கார்டூனை விட, மேலே முதல் கார்டூன் நிலவரத்தைத் தெளிவாகச் சொல்கிறது.
MIdDay இதழுக்காக மஞ்சுள் வரைந்திருக்கிற கார்டூன்! மஹாராஷ்டிரா அரசியலில் ஊடகங்களால் பெரிதாக ஊதப்படும் மிகப்பெரிய பொய் இதுவாகத்தான் இருக்க முடியும்! ஒரு blog ஐ மேற்கோள்காட்டி இந்தப் பொய்யை முதலில் வெளியிட்டதே டைம்ஸ் ஆப் இந்தியா தான்! அஜித் பவார் பெயர் எந்த FIR இலும் இல்லாதபோது, சாமர்த்தியமாக தன்மீதிருந்த வழக்குகளை ஒன்றுமில்லாதபடி அஜித் பவார் செய்து விட்டார் என்ற தகவலை மும்பை லஞ்ச ஒழிப்புத்துறை திட்டவட்டமாக மறுத்திருக்கிறது. ஆனாலும் பொய்க்குக் கால்கள் அதிகம் வேகமும் அதிகம் என்பதற்கு ஏற்ப பொய்ச்செய்தி இன்னமும் பரவவிடப் பட்டுக் கொண்டே இருக்கிறது.
மஹாராஷ்டிர அரசியலில் நடந்து கொண்டிருப்பது அயோக்கியத்தனங்களின் உச்சம்! சரத் பவார் அமித் ஷா இருவருமே முற்றிலும் மாறுபட்ட அரசியல்வாதிகள். இந்தப் பிரச்சினையில் ஒரிஜினல் சாணக்கியரை ஏன் தேவையே இல்லாமல் வம்புக்கிழுக்கிறார்கள்? ஏதாவது புரிகிறதா?
மீண்டும் சந்திப்போம்.
சாணக்கியரை இழுக்கா விட்டால்
ReplyDeleteபொழுது எப்படிப் போவதாம்!....
அதாகப்பட்டது, நம்மூர் அரசியல்வாதிகளுக்கு வெட்டி ஒரண்டை இழுக்கவும் வெட்டிப் பொழுது போக்கவும் நிறைய நேரமிருக்கிறது என்கிறீர்கள்! அப்படித்தானே துரை செல்வராஜூ சார்! :-)))
Delete