கார்டூனிஸ்டுகள் வரைகிற எல்லாப்படங்களிலுமே ஏதோ கருத்து இருக்கும் என்று தேடுவது வியர்த்தம் என்பதை சதீஷ் ஆசார்யாவும் ஹிந்து சுரேந்திராவும் அனுபவப் பாடமாகவே உணர்த்தியிருக்கிறார்கள். ஒரு சாம்பிளுக்கு இன்றைய ஹிந்துவில் சுரேந்திரா வரைந்த படம். ஒன்றே போதுமென்று நினைக்கிறேன்.
இப்படியெல்லாம் கேணத்தனமாக என்னசொல்கிறார் தீர்ப்பைத் என்பதே புரியாமல் வரைந்தால்தான் ஹிந்து முதலாளிக்கு மனம்குளிரும், சுரேந்திராவின் பிழைப்பும் ஓடும். நேற்றைக்கு உச்சநீதிமன்றம் அயோத்தி விவகாரத்தில் வழங்கியிருக்கிற தீர்ப்பு மிக விரிவானது மட்டுமல்ல, எல்லா அம்சங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டுதான் வழங்கப் பட்டிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். 1045 பக்கத் தீர்ப்பை முழுக்க வாசித்துவிட்டுத்தான் நேற்றைக்குப் பலரும் கருத்தைச் சொன்னார்கள் என்று நினைத்தால் அதைவிடப் பெரிய காமெடி எதுவுமிருக்காது. இன்று காலைதான் உச்சநீதிமன்றத்தின் தளத்தில் இருந்து தீர்ப்பைத் தரவிறக்கம் செய்து சிறிதுசிறிதாகப் படித்துக் கொண்டிருக்கிறேன். நீங்களும் படிக்க விரும்பினால் சுட்டி மேல்வரியிலேயே இருக்கிறது.
சேகர் குப்தாவின் காங்கிரஸ் சார்புநிலை தெரிந்தது தான்! ஆனாலும், ஒரு அனுபவமுள்ள பத்திரிகையாளராக உச்சநீதிமன்றத்தீர்ப்பின் சாரத்தை இந்த 18 நிமிட வீடியோவில் குழப்பாமல் மிகத் தெளிவாகச் சுருக்கமாகச் சொல்கிறார். சட்டத்தின் பார்வையில் அயோத்தியில் குறிப்பிட்ட அந்த இடம் யாருக்குச் சொந்தம் என்கிற தாவாவாக மட்டுமே அணுகப் பட்டதில், சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள், வாதங்கள் அடிப்படையில் தீர்ப்பை வழங்கியிருக்கிற அதே நேரம் அரசியல் சாசனத்தின் 142 வது பிரிவின் கீழ் உச்சநீதி மன்றம் இப்போது நடைமுறையில் உள்ள சட்டங்களையும் தாண்டி சில விஷயங்களை முடிவு செய்யலாம்; அப்படி முடிவுசெய்யப்படுவதே சட்டமாகவும் ஆகிவிடும் என்கிற அம்சத்தின் கீழ் 1949. 1992 ஆம் ஆண்டுகளில் இழைக்கப்பட்ட சில தவறுகளுக்கு பரிகாரமாக சன்னி வக்ஃப் வாரியத்துக்கு 5 ஏக்கர் நிலம் வழங்கவும், வழக்கின் மனுதாரர்களாக இருந்த Nirmohi Akhara என்ற அமைப்பின் மனுவைத் தள்ளுபடி செய்தபிறகு, மத்திய அரசுக்கு ஒரு அறக்கட்டளையை ஏற்படுத்த வேண்டும் என்ற உத்தரவின் தொடர்ச்சியாக அந்த அமைப்பு அறக்கட்டளையின் உறுப்பினராக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து தீர்ப்பின் முக்கியமான அம்சமாக அயோத்தி இடப பிரச்சினை நாடு விடுதலை அடைவதற்கு முன்னாலிருந்தே தாவாவில் இருப்பதால் இந்தத் தீர்ப்பு என்பதையும், (காசி, மதுரா முதலான) வேறு இடங்களுக்கு இதைப் பொருத்திப் பார்க்க முடியாது என்று குறிப்பிடப்பட்டிருப்பதாக சேகர் குப்தா சொல்கிறார். பழ.கருப்பையா, தொல்.திருமா போன்ற அதிமேதாவிகள் தீர்ப்பை முழுதாகப் படித்துவிட்டுத் தான் கருத்தை உதிர்த்திருப்பார்களா என்பது சந்தேகமே!
கர்தார்பூர் காரிடார் நேற்று துவங்கப்பட்டதில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், பஞ்சாப் மாநில முதல்வர் அம்ரிந்தர் சிங், அகாலிதள சட்டமன்ற உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் பலரும் பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூர் சாஹிப் என்றழைக்கப் படும் குருத்வாராவுக்குப் பரவசத்துடன் போயிருக்கிறார்கள். நாளை மறுநாள் 12 ஆம் தேதிதான் குருநானக் தேவ் ஜியின் 550வது பிறந்த நாள் என்பதோடு ஆண்டு முழுவதும் சீக்கியர்கள் இந்தப் பயணத்தை மேற்கொள்வார்கள் என்றும் தெரிகிறது.
ஆக, ஆதாரம் தங்களிடம் இல்லை என்பதை இதைவிட அழகாக எவரும் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து விட முடியாது. ஆனாலும் சட்டசபை ஆவணக்குறிப்பிலேயே ஆதாரம் இருப்பதாக கலீஞர் டிவியும் அதே செய்தியை மின்னம்பலம் தளமும் வெளியிடுவானேன்? அவர்கள் ஆதாரமாகக் காட்டியிருக்கிற சட்டசபை குறிப்பே உறுப்பினர்கள் கொடுத்த தகவல்களின் அடிப்டையிலானது என்பதற்கு இன்னும் வேறென்ன சாக்குச் சொல்வார்களோ? ராதா ரவி சொல்கிறபடி Detention order காண்பித்தால், யார் என்ன கேள்வி கேட்கப்போகிறார்கள்? பூசிப்பூசி மெழுக மெழுக சந்தேகம் வலுத்துக் கொண்டே வருகிறதா இல்லையா?
இது காவேரி நியூஸ் சேனலில் இருந்து திராவிடங்களால் துரத்தப்பட்டு, இப்போது WIN TV News சேனலில் அரசியல் செய்தி ஆசிரியராக இருக்கும் அதே மதன் ரவிச்சந்திரனுடைய ட்வீட் தான்! அவருடைய ட்வீட்டர் கணக்கும் தற்காலிகமாக முடக்கி வைக்கப் பட்டிருப்பதாக ட்வீட்டர் பக்கம் தகவல் சொல்கிறது.
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment