மஹாராஷ்ட்ரா அரசியலில் என்ன நடக்கிறது? ஒருவார காலமாகியும் கூட அங்கே அரசு அமைக்கக் காணோமே என்று திகைப்பவர்கள் எதற்கும் முந்தைய பதிவில் சேகர் குப்தா வீடியோவை ஒருதரம் பார்த்து விடுவது, புரிந்துகொள்ள உதவியாக இருக்கும்.
நேற்றைக்கு சிவசேனாவின் கற்றுக்குட்டி MLA ஆதித்ய தாக்ரே தேர்ந்தெடுக்கப்பட்ட இதர 55 MLA க்கள் + 7 சுயேட்சை MLA க்கள் ஆதரவு இருப்பதாகக் காட்டிக் கொள்ளவும், விவசாயிகள் பிரச்சினையில் அக்கறை காண்பிப்பதாகக் காட்டிக் கொள்ளவும் ஆளுநர் மாளிகைக்குக் கூட்டிச் சென்று ஒரு ஸ்டன்ட் அடித்ததோடு, சிவசேனா MP சஞ்சய் ராவத் NCP கட்சி நிறுவனர் சரத் பவாரைப் போய்சசந்தித்ததும் நடந்து முடிந்திருப்பதில் கூட்டணி என்றாலே குடைச்சல்தான் என்பது வெட்டவெளிச்சமாக்கப் பட்டிருக்கிறது. இதற்கு முன்னுதாரணமாக கர்நாடகத்தில் குமாரசாமி முதல்வர் ஆனது, நினைவு படுத்திக் கொள்ள முடியுமானால், வெறும் 29 எம்பிக்களுடன் காங்கிரஸ் வெளியிலிருந்து ஆதரவு கொடுத்து சந்திரசேகர் பிரதமர் ஆனது இருக்கின்றன. ஆனால் இரண்டுமே நிலைக்கவில்லை என்பதோடு காங்கிரசின் இன்றைய பரிதாபத்துக்குக் காரணமாகவும் அமைந்தன என்பதையும் சேர்த்துப் பார்க்க வேண்டும். சோனியா காங்கிரசுக்கு வரலாறும் தெரியாது, படிப்பினைகளைக் கற்றுக் கொள்ளவும் தெரியாது என்பது தெரிந்ததுதான்!
உள்ளூர் காங்கிரஸ் தலைகள் டில்லிக்குப் போய்ப் பெருந்தலை சோனியாவின் கண்ணசைவை நாடிக் கொண்டிருக்கும் வேளையில் NCP யின் சட்டமன்றக் கட்சித்தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும் அஜித் பவார் (சரத் பவாருடைய அண்ணன் மகன்) சஞ்சய் ராவத் சரத் பவாரை சந்தித்துவிட்டுப் போன சிலமணி நேரத்திலேயே, தங்கள் கட்சி எதிர்க்கட்சி வரிசையில் தான் அமரும் என்று மறுபடியும் சொல்லியிருக்கிறார். ஆக NCP கட்சி சிவசேனாவின் அலப்பறைகளில் கொஞ்சமும் ஆர்வம் காட்டவில்லை என்பது இப்போதைய நிலவரம். ஆனாலும் சஞ்சய் ராவத் சிவசேனா ஆசாமிதான் முதல்வராக வருவார் என்று பழைய பல்லவியையே பாடிக் கொண்டிருக்கிறார்.
இது ட்வீட்டரில் பார்த்த குஷ்பு காமெடி! அடிக்கடி காணாமல் போகும் ராகுல் காண்டிக்கு அம்மணி சப்போர்ட்டாம்!
The Govt seeking WhatsAop’s response on who bought Pegasus to spy on Indian citizens, is like Modi asking Dassault who made money on the sale of RAFALE jets to India!
#WhatsApp
அண்ணனும் தங்கையும் இப்படி மாறிமாறி ட்வீட்டரில் காமெடி செய்வது மட்டுமே ஆக்டிவ் அரசியல் என்று நினைக்கிறார்கள் போலிருக்கிறது!
If the BJP or the government has engaged Israeli agencies to snoop into the phones of journalists, lawyers, activists and politicians, it is a gross violation of human rights and a scandal with grave ramifications on national security. Waiting for the government’s response.
10:57 AM · Nov 1, 2019
இஸ்ரேல் நிறுவனம் ஒன்றால் உருவாக்கப்பட்ட spyware மூலம் உலகெங்கும் உள்ள சுமார் 1400 பேர் வேவு பார்க்கப்பட்டதில் இந்திய ஊடகவியலாளர்களும், செயற்பாட்டாளர்களும் அடக்கம் என்று உடனடி செய்தி பரிமாற்ற செயலியான வாட்ஸ்-ஆப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது இதற்குத்தான் பப்புவும் பப்பியும் இத்தனை அலப்பறை!
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment