பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே தந்தி டிவியை விட்டு வெளியேறி விளையாட்டுப்போல ஒருவருடம் நிறையப் போகிறதா? நிறுவனபலம் இல்லாமலேயே தன்னுடைய தனிப்பலத்தை சாணக்யா என்றொரு தளத்தை ஆரம்பித்து நிரூபித்தார். வேந்தர் டிவியின் CEO பொறுப்பு தேடிவந்ததையும் ஏற்றுக்கொண்டு செயற்பட்டு வருகிறார் என்பது திறமைக்கான அங்கீகாரம் என்பதோடு அதிர்ஷ்டமும் கைகொடுத்து இருக்கிறதென்றே சொல்ல வேண்டும்.
நம்மூர் அரசியலில் நல்ல மாற்றங்கள் நிகழ விடாமல் தடுத்துக் கொண்டிருப்பது எது? எப்போதாவது இதைப் பற்றி யோசித்துப் பார்த்தது உண்டா?அரசியல்வாதி என்றானாலே ஒரு அசட்டுத்துணிச்சல், அகந்தை இவை எல்லை மீறிப் போய்விட ஆரம்பித்து விடுகிறது. என்னை எதிர்த்து எவன் கேள்வி கேட்டுவிட முடியும் என்கிற திமிர் வந்து விடுகிறது.
கட்சி நிர்வாகியாகவோ தப்பிததவறி MLA, MP ஆகி விட்டாலோ கேட்கவே வேண்டாம்! வானளாவிய அதிகாரம் படைத்தவர்களாய்த் தங்களை நினைத்துக் கொள்கிற அபத்தமும் சேர்ந்து கொள்கிறது. விசிக தலைவர் திருமாவளவனுக்கு அந்த அதீதக்கற்பனை வந்துவிட்ட மாதிரித் தான் சமீபத்தைய நிகழ்வுகள் சொல்கின்றன.
ஆயிரம் குறை சொன்னாலும் இதுமாதிரி அரசியல் நிலவரத்தைப் பளிச்சென்று அவ்வப்போது சொல்லி விடுவதால் கார்டூனிஸ்ட் சதீஷ் ஆசார்யாவைப் பாராட்டியே ஆகவேண்டி இருக்கிறது. அடங்கமறு! திமிறி எழு! நான் புலியாக்கும்! என்று வரட்டு வீம்பு, திமிரோடு திரிந்த சிவசேனாவை சரத் பவார் வழிக்கு கொண்டு வந்துவிட்ட மாதிரி, தற்போதைய செய்திகள் சொல்கின்றன. காங்கிரஸ் NCP நிபந்தனைகள் ஏற்கப் படுமா? மஹாராஷ்டிராவில் சிவசேனா அரசு அமையுமா? நாளைக்குத் தான் தெரியுமாம்!
புலிகள், புலிவேஷம் கட்டுகிறவர்கள் எல்லோருக்குமே போதாத காலம் வந்து வெகுகாலமாயிற்று. அதையெல்லாம் மறந்துவிட்டு நான் புலியாக்கும் சிறுத்தையாக்கும் என்றே சிலுப்பிக் கொண்டிருந்தால் என்ன நடக்கும்? உங்களுக்கு விடை தெரியுமா? கொஞ்சம் உரக்கச் சொல்லுங்களேன்!
மீண்டும் சந்திப்போம்.
வீடியோ 29 நிமிடம். அயோத்தி தீர்ப்பு. ஐஐடி மாணவி ஃபாத்திமா தற்கொலை இப்படிப் பலவிஷயங்களையும் தொட்டு கேட்கப்படும் கேள்விகளுக்குத் தயக்கம் எதுவுமில்லாமல் பதில் சொல்கிறார். இங்கே WIN News சேனலில் மதன் ரவிசந்திரன் செய்திகள், விவாதங்கள் நடத்துவது வேறுவிதம். இன்னும் கொஞ்சம் அனுபவம், முயற்சியும் சேர்ந்தால் பட்டைதீட்டப்பட்ட வைரமாக ஜொலிக்கிற நாளும் வரலாம்.
புலிகள், புலிவேஷம் கட்டுகிறவர்கள் எல்லோருக்குமே போதாத காலம் வந்து வெகுகாலமாயிற்று. அதையெல்லாம் மறந்துவிட்டு நான் புலியாக்கும் சிறுத்தையாக்கும் என்றே சிலுப்பிக் கொண்டிருந்தால் என்ன நடக்கும்? உங்களுக்கு விடை தெரியுமா? கொஞ்சம் உரக்கச் சொல்லுங்களேன்!
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment