இன்றைய தினமலர் முதல்பக்க விளம்பரம் கொஞ்சம் வித்தியாசமானதாக இருந்ததில் நிறைய காமெடிகள் இருப்பதைக் கவனித்தீர்களா? எதிராளிகளைக் குறிப்பிட்டே குத்துகிறமாதிரியான விளம்பர உத்திகள் எப்போதிலிருந்து இங்கே ஆரம்பித்தது என்று நினைவு வருகிறதா?
இந்த விளம்பரம் யார் யாரைக் காயப்படுத்தியதோ தெரியாது, ஆனால் கவலைகள் களேபரங்கள் வரிசைகட்டி வலம்வரத் தொடங்கிவிட்டன என்பது மட்டும் நன்றாகத் தெரிகிறது.
கொஞ்சநாட்களுக்குமுன் ரங்கராஜ் பாண்டே ஒரு நேர் காணல் அல்லது கேள்விபதில் வீடியோவில் இங்கே தமிழ் செய்தி சேனல்கள் எதுவும் லாபத்தில் இயங்க ஆரம்பிக்கவில்லை என்று சொல்லியிருந்தார். ஏதோ ஒரு சார்புநிலை எடுத்துக் கூவுவதற்காக தரப்படும் காசு கணக்கில் வருவதில்லை போலும்! #2 லாபம் வராத செய்தி சேனல்கள் இப்படி புற்றீசல் போல வரிசை கட்டி வருவதன் பின்னணி, மர்மம் என்ன?
மகா இழுபறிக் காமெடி இன்னும் ஓய்ந்தபாடில்லை! இது ஹிந்து ஆங்கில நாளிதழுக்காக சுரேந்திரா போட்ட கார்டூன்! காங்கிரஸ் சார்புள்ள மவுண்ட்ரோட் மாவோ ஊடகம் தான் என்றாலும் அவர்களாலும் நமட்டுச் சிரிப்பு சிரிக்காமல் இருக்க முடியவில்லை. #3 உங்களுக்கும் சிரிப்பு வந்ததா?
பிஜேபி ஆதிக்கம் செல்வாக்கு சுருங்குகிறது என்று தம்பட்டம் அடிப்பது இன்றைக்கு ஒரு ஊடக ஃபேஷன்! மொகலாய சாம்ராஜ்யம் அதன் இறுதிநாட்களில் டில்லியிலிருந்து பாலம் வரை வெறும் 7 கி.மீ. எல்லைக்குத் தான் இருந்தது என்ற வரலாறு காங்கிரஸ் கட்சிக்கல்லவா கனகச்சிதமாகப் பொருந்துகிறது!?
காசுக்கு கூவுவதென்றால் வரலாற்றையும் மாற்றிப் போடுகிற வேலையை முன்னெல்லாம் இடதுசாரிகள் என்று தங்களைச் சொல்லிக் கொண்டிருந்தவர்கள் செய்து கொண்டிருந்த வேலை! பரிணாம வளர்ச்சியில் இன்று கார்டூனிஸ்டுகள் வரை வந்திருக்கிறது. #4 சரியா? தவறா?
சாணக்கியர் அமித் ஷா இல்லை! கூந்தலில் ஊஞ்சல் ஆடுகிறாரே சரத் பவார், அவர்தான் என்கிறார் சதீஷ் ஆசார்யா கார்டூனிஸ்டுகள் சொல்வதற்கெல்லாம் அர்த்தம் தேடுவது வீண்வேலை! #5 சரியா? தவறா?
இந்தப்படம் பார்க்க ரசிக்க சிரிக்க மட்டுமே! கேள்வி எதுவும் இல்லை!
2,3,4,5 என்று வரிசையாகக் கேள்வி இருக்கிறதே! முதல் கேள்வி எங்கே போனது என்று இதைப் படிப்பதற்கு முன்னாலேயே கேட்கத் தோன்றியதா? நீங்களே என் அபிமானத்துக்குரிய வாசகர், நண்பர், புரவலர், எல்லாம்!
விடுபட்ட கேள்வி எங்கே? அதற்கான விடை எங்கே? சொல்லுங்களேன் பார்க்கலாம்!
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment