காங்கிரஸ் கட்சியின் சிவசேனா தடுமாற்றம், NCPயின் பொறுமையைச் சோதித்தது மட்டுமல்லாமல் ஒருவழியாக மஹாராஷ்டிராவில் 20 நாட்களாக நீடித்த இழுபறி நிலைமையையும் ஒரு முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டது என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் கால அவகாசம் கேட்டுக் கொண்டே இருப்பதால் மஹாராஷ்டிரா ஆளுநர் குடியரசுத் தலைவர் ஆட்சிக்குப் பரிந்துரை செய்து விட்டார். இன்று கூடிய மத்திய அமைச்சரவையும் அதை ஏற்றுக் கொண்டு குடியரசுத்தலைவருக்குப் பரிந்துரையும் செய்து விட்டது.
சிவசேனா கொதித்துப்போய் உச்சநீதிமன்றத்தின் கதவைத் தட்டித் தங்களுக்குப் போதிய கால அவகாசம் கொடுக்காமல் ஆளுநர் முடிவு செய்தது சட்ட விரோதமானது, அவசர வழக்காக இன்றே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவேண்டுமென்று முறையிட்டிருக்கிறது. ஆனால் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவது சந்தேகமே என்று மேலும் செய்திகள் சொல்கின்றன.
Raj Bhavan Press Release 12.11.2019 3.16 PM
3:16 PM · Nov 12, 2019Twitter Web App
ஆளுநர் தலையிலேயே எல்லாப்பழியையும் சுமத்தித் தங்களுடைய இயலாமையை மறைக்க சிவசேனா, காங்கிரஸ், மற்றும் NCP மூன்று கட்சிகளும் நீதிமன்றம் போய் வழக்காடலாம். கபில் சிபல் தான் சிவசேனாவுக்கும் வழக்கறிஞர் என்ற தகவலைப் பார்த்த போது சிரிப்புத்தான் வந்தது. அபிஷேக் மனு சிங்வியும் கூட வாதாடுகிறாராம்!
இந்த விஷயத்தில் காங்கிரஸ்தான் தாமதத்துக்குக் காரணம் என்று NCP பொதுவெளியில் போட்டு உடைத்திருக்கிறது. தவிர இன்று காலை ஆளுநரிடம் கூடுதல் கால அவகாசம் வேண்டும் என்று கேட்டதையும் ஒப்புக் கொண்டிருக்கிறது.
நீங்களும் நானும் என்ன கதறினாலும் அரசியல்களமோ அரசியல்வாதிகளோ மாறப்போவதில்லை.அதற்காக சும்மா இருந்துவிட முடியுமா? ஜனங்கள் சும்மா இருந்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில்தானே அவர்கள் இத்தனையும் செய்து கொண்டிருக்கிறார்கள்!
உங்கள் கருத்து எதுவானாலும் தயங்காமல் உரக்கச் சொல்லுங்கள்!
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment