First things first! இன்று விஞ்ஞானி Sir C V ராமனுடைய பிறந்த தினம்!
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பைத் தகுதி நீக்கம் செய்யும் நடவடிக்கைகளில் டெமாக்ரட்டுகள் தீவீரமாக இறங்கியிருக்கும் இந்த நேரத்தில் இர்விங் வாலஸ் எழுதிய The Man புதினத்தில் இந்தத் தகுதி நீக்கம் செய்கிற விதத்தைக் குறித்து விவரமாக எழுதி இருந்ததும் நினைவு வந்தது. புத்தகத்தை இன்னொரு முறை வாசிக்க எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த தருணத்தில் டைம் இதழில் ஜோன் மீச்சம் எழுதியிருக்கும் ஒரு செய்தி அலசல் கண்ணில் பட்டது.
The Impeachment Inquiry Is About More Than Donald Trump — It’s About Who We Are as Americans என்று தலைப்பிட்டு ஆரம்பிக்கிற செய்தி அலசல் The start of public impeachment hearings in Congress on Nov. 13 marks the beginning of a test for the country. As the debate over impeachment and removal unfolds, the nation’s immediate and long-term future depends on whether Americans will be guided by reason rather than passion, fact rather than faith, evidence rather than tribe என்று அடுத்தவாரம் புதன்கிழமையன்று ஆரம்பமாகும் டொனால்ட் ட்ரம்பைத் தகுதிநீக்கம் செய்கிற நடவடிக்கைகளின் தொடக்கம் அமெரிக்காவுக்கே வைக்கப்படுகிற ஒரு சோதனையாகவும் இருக்கும் என்கிறார்.
டில்லி வழக்கறிஞர்களுடைய அடாவடித்தனத்துக்கும் சதீஷ் ஆசார்யா வரைந்திருக்கிற இந்த கார்டூனுக்கும் பொருத்தமில்லைதான்! ஆனால் சீனாதானா முழிக்கிற விதம் கொஞ்சம் சிரிப்பை வரவழைத்தது உண்மை!
இசுடாலின் மிசா தியாகியா என்ன? அமைச்சர் ஜெயகுமார் அவர்பங்குக்கு பொதுவெளியில் போட்டு உடைக்கிறார், இந்த விஷயம் 4வது நிமிடத்தில் இருந்து ஆரம்பிக்கிறது.
ஒரு இடதுசாரித்தோழர் இந்தப்படத்தைப் பகிர்ந்து இருந்ததில் மனதில் தோன்றியது இது: #கவிதைநேரம்
அவர்கள் நிரந்தரம் என்ற கனாவோடு இருந்தார்கள்
மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை மறந்தவர்கள் கட்டியிருந்த கோவணமும் உருவப்பட்டதென்பதை
அறியாதவர்களாக!
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment