Showing posts with label மகா இழுபறி. Show all posts
Showing posts with label மகா இழுபறி. Show all posts

Saturday, November 23, 2019

ஆட்டமென்ன சொல்லுவேன் தோழி நான்! பாட்டு கேட்டதுண்டா?

மஹாராஷ்டிரா அரசியலில் இன்று காலை நிகழ்ந்த அதிரடி மாற்றம், ஊடகங்களை மட்டுமல்ல, காங்கிரஸ் காரர்களையும் கிறுக்குப் பிடிக்க வைத்திருக்கிறதென்பது அங்கங்கே வெளிப்படும் மனக் குமுறல்களில் இருந்து புரிந்துகொள்ள முடிகிறது. நேற்று வரை சரத் பவாரை இந்திய அரசியலின் சாணக்கியர் என்று கொண்டாடித் தீர்த்தவர்கள் , இன்று சரத் பவாரும் வாயடைத்துப் போகிற மாதிரி ஒரு அதிரடி ஆட்டத்தில் சிவசேனா அண்ட் காங்கிரஸ் கம்பனி கலகலத்துப் போயிருப்பதைப் பார்க்க மிகவும் பரிதாபமாக இருக்கிறது. ரொம்பவும் காமெடியாக இருக்கிறதென்றும் கூடச் சொல்லலாம்! தவறே இல்லை!


பொதுவாக மீடியாக்களுக்கே அலட்டல், அலப்பறை எல்லாமே ரொம்ப ஜாஸ்தி! ஆக்கவும் அழிக்கவும் எங்களால் மட்டுமே முடியும் என்கிற மிதப்பும் கூட! காசுக்குக் கூவுகிற ஊடகங்களாய்க் குறுகிப் போன பிறகும் கூட நம்மூரில் ஊடகங்களுடைய திமிர் கொஞ்சமும் குறைந்ததே இல்லை! இன்றைக்கு செய்தியை முன்கூட்டித் தருகிற பவுசில் வெளியிட்ட மிதப்பு என்னாயிற்று? நடந்து முடிந்தபிறகுதான் அது செய்தி! எலெக்ட்ரானிக் மீடியா அல்லது சேனல்களிலாவது சிறிது நேரத்திலேயே சரிசெய்து கொண்டு விடமுடியும்! அச்சு ஊடகங்கள்?
சிவசேனாவைப் போல முகத்தில் அச்சுமையைப் பூசிக் கொள்ள வேண்டியதுதான்! 

நேற்று நள்ளிரவிலிருந்து இன்று காலைவரை என்ன நடந்ததாம்? டைம்லைன் சொல்கிறார்கள்!   IANS செய்திகளை மேற்கோள்காட்டி டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்ட infograph இது  நன்றி :TOI


துக்ளக்கில் சத்யா என்கிற சத்ய நாராயணன் நையாண்டி செய்து எழுதிய வாசகங்கள் நிஜமாகவே ஆகிப்போனதை என்னவென்று சொல்வீர்கள்? பரட்டை வசனம் பேசுகிற மாதிரிச் சொல்வதென்றால், அதிசயம், ஒரு அற்புதம் நிகழ்ந்தே விட்டது என்றா?😂😃





சிவசேனா மதசார்பற்ற கட்சி என்று எதிர்கட்சிகளால் அறிவிக்கப் பட்ட நாள் ! 

நாளையே சிவசேனா ஓடிப்போய் பிஜேபி யுடன் சேர்ந்து கொள்ளக் கூடும்.
அப்போது.. reference-க்கு எதிர் கட்சிகளின் இந்த quote உதவும். 
எது எப்படியோ..
போரடித்துக் கொண்டிருந்த இந்திய அரசியல் களத்தை... பரபரவென நகரும் ஆங்கில political thriller திரைப்படங்கள் போல படு த்ரில்லிங்காக மாற்றி இருக்கிறார்கள் மோடி-அமித்ஷா !  



சோனியா காண்டியின் ஆலோசகர் அகமது படேல் என்ற கோமாளி  ஃபட்னவிஸ் பதவி ஏற்றதை அரசியல் ரீதியாகவும் சட்டரீதியாகவும் எதிர் கொள்வோம் இப்படி வீரவுரை என்றபெயரில் காமெடி செய்திருக்கிறார்.


அமித் ஷாவையும் மிஞ்சிய அரசியல் சாணக்கியர் என்று நேற்று வரை சரத் பவாரை கொண்டாடியவர்கள் முன்னால் முகத்தைக் காப்பாற்றிக் கொள்ள இப்போது ஊடகங்களுக்கு முன்னால் விளக்கம் மதியம் 12.30 மணி வீடியோ 27 நிமிடம்.ஆனால் இதற்குச் சரியான பொழிப்புரையை முகநூலில் பார்த்தேன் ரசித்தேன்!

ஆட்டம் Deuce இல் போய்க் கொண்டிருந்தது.
Advantage – NCP, Advantage – Sena என்று ஆட்டம் தொடர்ந்து கொண்டிருந்த போது திடுதிப்பென்று Match Point ஐ BJP Score செய்து விட்டது.
இந்த Dramatic Twist இல் நிறைய ரசனையான விஷயங்கள் உண்டு.
சிவசேனாவின் வால் நறுக்கப்பட்டது முதல் திருப்தி. அவர்களின் கொள்கைகளில் சில எனக்கு முற்றிலும் ஏற்பு இல்லாதது. மஹாராஷ்டிராவில் வெளி மாநிலத்தவர்கள் யாரும் இருக்கக் கூடாது என்று துரத்தியடிக்கும் மோசமான பிராந்திய மனப்பாங்கு அவர்களுடையது. மும்பைத் தமிழர்களின் எதிரிகள்.
அடுத்தது, மீண்டும் BJP ஆட்சி வேண்டும் என்று வாக்களித்த மக்களை ஏமாற்றாமல் அதைச் செய்து முடித்தது.
எல்லாவற்றையும் விட அதைச் செய்து முடித்த விதம் ரொம்ப சுவாரஸ்யமானது. காலை ஐந்தரை மணிக்குக் கூட மீடியாக்கள் அந்த மூவர் கூட்டணி ஒப்பந்தத்துக்கு வந்து விட்டது என்றும் உத்தவ் தாக்கரே முதல்வர் ஆகிறார் என்றும் சொல்லிக் கொண்டிருந்தன.
பா. ஜ. க தலைவர்கள் எல்லாரும் இது சந்தர்ப்பவாதக் கூட்டணி, கிச்சடி கேபினட் என்றும், நித்தின் கட்கரி இந்த ஆட்சி 8 மாசத்தில் கவிழும் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அப்படிப் போய்க் கொண்டிருந்த நேரத்தில் இந்த முடிவு வந்தது மட்டுமில்லை, வெடுக்கென்று பதவி ஏற்பும் முடிந்து விட்டது!
அமித்ஷாவுக்குள் இருக்கும் அற்புதமான திரைக்கதை ஆசிரியரை எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது! டயலாக்கே இல்லை, ஒன்லி ஆக்ஷன்!  

சிவாஜி கணேசனுக்காக அந்த நாட்களில் பாடிய ஒரு  பாட்டின் நடுவில் ஆட்டமென்ன சொல்லுவேன் தோழி! ஆடிடுவேன் கொஞ்ச நாழி! என்றொரு அருமையான வரிகள் வரும்! கேட்டிருக்கிறீர்களா?

   
கேட்டுவிட்டு நிம்மதியாக வேறுவேலை பார்க்கப் போகலாமா?

மீண்டும் சந்திப்போம்.         

Monday, November 11, 2019

மஹாராஷ்டிரா! தொடரும் இழுபறி!

மஹாராஷ்டிர அரசியலில் சிவசேனா ஏற்படுத்திய குழப்பம் இன்றைக்கும் தீர்ந்தபாடில்லை! அவர்களை மட்டுமே அதற்கு குறை சொல்ல முடியாதுதான்! ஏதோ பிஜேபி வேண்டாம் என்று உதறியதாலேயே NCP, காங்கிரஸ் இன்னபிற கட்சிகளெல்லாம் ஓடிவந்து ஆதரவளிப்பார்கள் என்ற கனவை இரவு 7.30 மணிக்குள் மெய்ப்பிக்க முடியவில்லை என்பதனால், ஆளுநர் அவர்கள் கேட்ட இரண்டுநாள் கூடுதல் அவகாசம் தர மறுத்து விட்டார். முதலில் பிஜேபி, அடுத்து சிவசேனா, அதற்கடுத்து NCP என்று சட்டசபை உறுப்பினர்கள் அடிப்படையில் இப்போது ஆட்சியமைக்க வாய்ப்பு இருக்கிறதா என்று பந்து NCP வசம் வந்திருக்கிறது.

சிவசேனாவின் முதல்வர் முகம் யார்? முதல்முறையாக MLA ஆகியிருக்கும் ஆதித்ய தாக்கரேவா? அல்லது MLA ஆக இல்லாத உத்தவ் தாக்கரேவா? இருவரில் யாருடன் சரத் பவார் வியாபார வரவுசெலவு வைத்துக் கொள்வார் என்பதிலேயே இன்னமும் சிவசேனாவுக்குத் தெளிவான முடிவு எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை. முன்னர் ஜம்பம் அடித்துக் கொண்டபடி, சரத் பவார் கூட அதைப் பற்றிக் கேள்வி எழுப்பினாரே நினைவிருக்கிறதா? 170 MLA க்கள் ஆதரவிருப்பதாகச் சொன்னார்களே, ஆதரவுக் கடிதம் வாங்கினார்களா? ஆதரவுக் கடிதம் இல்லாமல், குறைந்த பட்சம் NCP கட்சித் தலைவர்கள் எவரையாவது கூட்டியும் போகாமல், ஆதித்ய தாக்கரேவை அனுப்பி இன்னும் கொஞ்சம் அவகாசம் கொடுங்கள் என்று கேட்டால், எப்படிக் கிடைக்கும்?

Maharashtra Govt Formation LIVE Updates: High drama is being witnessed in Mumbai as Governor Bhagat Singh Koshyari has now invited Sharad Pawar-led NCP to stake government after Shiv Sena failed to submit letter of support from NCP and Congress within 7:30pm. The governor's decision came after Uddhav Thackeray's son Aaditya sought three more days to prove majority. However, the governor rejected their demand. அதன்படி NCPயின் அஜித் பவார் இரவு. 8.45 வாக்கில் ஆளுநரை சந்திக்கப்போவதாக செய்தி சொல்கிறது 

Breaking: Congress high command takes the PV Narasimha Rao route on Maharashtra where not taking a decision is sometimes a decision. Continues to dither on whether to support Shiv Sena or not. Picture baaki hai! #MaharashtraPoliticalCrisis
7:25 PM · Nov 11, 2019 from Noida, IndiaTwitter for iPhone

Aaditya Thackeray, Shiv Sena: We told the Guv that we're willing to form the govt. We asked him for at least 2 days time but we weren't given t8.45ime. The claim (to form govt) wasn't denied but the time was. We'll continue to put in efforts to form govt in the state. #Maharashtra
7:40 PM · Nov 11, 2019Twitter Web App

Replying to
😂
😂
😂
🙏
🙏
7:41 PM · Nov 11, 2019Twitter for Android

சிறுபிள்ளை வெள்ளாமை வீடுவந்து சேராது என்று முன்னோர்கள் சரியாகத்தான் சொல்லிப் போயிருக்கிறார்களோ?


ஒருவழியாக ஜனாதிபதி ஆட்சிக்குத் தயாராகிறதா மஹாராஷ்டிரா? இப்போது எழும் முக்கியமான கேள்வி இது ஒன்றுதான்!

மீண்டும் சந்திப்போம்.   
                          

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)