#NationFirst என்று முன்னெடுக்கிற வலதுசாரிகள் இங்கே இந்தியாவில் மட்டுமல்ல, உலகநாடுகள் பலவற்றிலும் தொடர்ந்து ஜெயித்து வருகிறார்கள். ஜெர்மனியில் ஏஞ்செலா மெர்க்கல் கை மிகவும் தாழ்ந்து போயிருக்கிறது. சர்வதேசியம் பேசித்திரிந்த இடதுசாரிகள் மிகவும் புதைந்து போனார்கள் என்பதையும் தாண்டி, தேசிய உணர்வு பலநாடுகளிலும் தலைதூக்கிவருகிறதே! என்ன காரணத்தால் என்பதை எப்போதாவது யோசித்துப் பார்த்திருக்கிறோமா?
The Print தளத்தின் சேகர் குப்தா இந்தக் கேள்விகளை எடுத்துக் கொண்டு மிகவும் செலெக்டிவாக விடையைத் தேட முயற்சிக்கிறார். வீடியோ 17 நிமிடம். உண்மை என்னவென்று தேட சேகர் குப்தாக்களையும், அவர்கள் அரைகுறையாக சொல்வதையும் கேட்பது என்ற வழக்கத்தைப் பழகிக் கொண்டுவிட்டேன்.
அமெரிக்க செனேட் சபையில் டொனால்ட் ட்ரம்ப்பை தகுதிநீக்கம் செய்கிற விசாரணையின் இறுதிக்கட்டம் கடந்த 2 மணிநேரமாக நடந்து கொண்டு இருக்கிறது. அதிகாலை 4.30 மணிவாக்கில் வாக்கெடுப்பு நடக்கும் என்று தெரிகிறது. ஆனால் என்ன மாதிரி யூடிவிருக்கும் என்பது ஏற்கெனெவே தெரிந்த விஷயமாக இருப்பதால், சுவாரசியம் எதுவும் இருக்கப் போவதில்லை. டொனால்ட் ட்ரம்ப் இதுவரை இருந்த அமெரிக்க அதிபர்களிலேயே மிகமிக மோசமானவர் என்ற கறைபடிந்த புதிய வரலாறு படைக்கப் போகிறார்.
குடியரசுக் கட்சி வருகிற நவம்பரில் மீண்டும் டொனால்ட் ட்ரம்ப்பையே தனது அதிபர் வேட்பாளராக அறிவித்தால், சுத்தம்! விதி வலியது என்று அமெரிக்கா மட்டுமல்ல உலகமே அனுபவித்துத் தீர்க்க வேண்டியது தான் என்று எங்கேபோய் முட்டிக்கொள்வது?
மீண்டும் சந்திப்போம்.
ட்ரம்ப் வெளிப்படையாக மோசமானவர். அவ்வளவு தான். இவர் மோசம் என்பதால் மற்றவர் உத்தமர் என்பதல்ல. நான் இப்படித்தான் என்று அவர் இருப்பதால்தான் யாருமே அவரை எதிர்க்க முடியவில்லை. யாருக்குமே அவரை எப்படி எதிர்ப்பதென்று தெரியவில்லை. இன்றைய தேதியில், வரும் எலெக்ஷனில் அவர் வென்று வர மிக அதிக வாய்ப்பிருக்கிறது. டெமாக்ரட் எல்லோரும் கோமாளித்தனமாக உளறுகிறார்கள். ரிபப்லிக்கன் பார்ட்டியை பொறுத்தவரை, இவர் கண்டிப்பாக ஜெயிக்கக் கூடிய குதிரை. அதனால் கண்ணை மூடிக்கொண்டு இவர் பின்னால் இருக்கிறார்கள்.
ReplyDeleteஎன்னை பொறுத்தவரை, ட்ரம்ப் பின் மிகப்பெரிய சாதனைகள் -- ப்ரெசிடெண்ட் என்பவரும் சாதாரண மனிதர் தான் என்று காட்டியதும் பொலிடிக்கலி கரெக்ட் என்ற hypocrisy -ஐ உடைத்ததும் தான்!
ட்ரம்ப் பின் மிகப்பெரிய சாதனைகள் -- ப்ரெசிடெண்ட் என்பவரும் சாதாரண மனிதர் தான் என்று காட்டியதும் பொலிடிக்கலி கரெக்ட் என்ற hypocrisy -ஐ உடைத்ததும் தான்! super
Deleteவாருங்கள் ஜோதி ஜி!
Deleteஅமெரிக்க ஜனநாயக நடைமுறைகள் கொஞ்சம் வித்தியாசமானவை. பிரச்சினைகளை அவர்கள் அணுகும் முறையே வேறு, முடிவு செய்யும் விதமும் வேறு! அங்கே அதிபரை தனிநபராகப் பார்ப்பதில்லை. Embodiment of Law என்று மட்டுமே பார்க்கிறார்கள். சட்டத்தின்படி நடக்கிற சட்டப்படியே எல்லாம் நடந்தாக வேண்டுமென்பதன் அடையாளமாகவே அமெரிக்க அதிபர் முழு அதிகாரம் பெற்றவராக இருக்கிறார். அதுவே கேள்விக்குள்ளாக்கும் போது என்ன செய்வது? தகுதிநீக்கம் எப்படிச் செய்யப் படுகிறது?
இர்விங் வாலஸ் எழுதிய The Man நாவல் பற்றிய சிறு அறிமுகம் இந்தப்பக்கங்களிலேயே இருக்கிறது முடிந்தால் புத்தகத்தைப் படித்துப் பாருங்கள்! எழுபதுகளில் எழுதப்பட்ட இந்த நாவலில் நிறையவிஷயங்களைப் புரிந்துகொள்ள முடியும்.
2016 அதிபர் தேர்தலில் இருபெரிய கட்சிகளுமே மிக மோசமான வேட்பாளர்களைத்தான் அதிபர் பதவிக்கு நிறுத்தினார்கள் என்பதில் இருப்பதில் எது ஆகக் குறைந்த மோசம் என்று பார்த்துத் தேர்ந்தெடுக்கிற வாய்ப்பு மட்டுமே அமெரிக்க வாக்காளர்களுக்கு இருந்தது. டெமாக்ரட் வேட்பாளர் ஹிலாரி க்ளின்டன் ஆகப்படுமோசமான நம்பகத்தன்மையற்றவர் என்பதாலேயே டொனால்ட் ட்ரம்ப் ஜெயிக்க முடிந்தது. தேர்ந்தெடுத்த தருணத்தில் ட்ரம்ப் மீதான நம்பிக்கை விகிதம் மிகக் குறைவாகவே இருந்தது.
இருநாடுகளுமே ஜனநாயக முறைப்படி தேர்தல், வாக்குச்சீட்டு மூலமாகத் தேர்ந்தெடுக்கின்றன என்ற ஒருவிஷயத்தைமட்டும் வைத்து இந்தியச்சூழ்நிலையோடு ஒப்பிட்டுப்பார்க்க முடியாது.
வாருங்கள் பந்து!
Deleteஅமெரிக்க மண்ணில் இருந்துகொண்டு நீங்கள் எழுதியிருப்பதை ஜோதிஜி எப்படிப் புரிந்து கொண்டு எதனால் super என்று சொன்னார் என்பது எனக்குப் புரியவில்லை. அதனால் அவர் சொன்னதற்கே பதில் சொன்ன மாதிரி இருந்தாலும், உங்களுடைய வாதத்துக்கும் அதிலேயே பதில் இருக்கிறதென்றே நினைக்கிறேன்.
இப்போது சேகர் குப்தா 17 நிமிட வீடியோவில் என்ன முடிவாகச் சொல்ல முடிந்தது என்பதைக் கவனியுங்கள்! இங்கே நரேந்திர மோடி என்கிற தனிநபர் மீது, (பிஜேபி என்ற கட்சி மீதல்ல) இந்தியவாக்காளர்கள் நம்பிக்கை வைத்திருப்பது 2024 தேர்தலிலும் தொடரும் என்பதான நிலைமை எதனால்?
ReplyDeleteவெறும் வலதுசாரி தேசியவாதம் என்று வார்த்தைகளால் மட்டுமே விளக்கக் கூடிய விஷயமா இது?