முந்தைய பதிவில் பிரசாந்த் கிஷோர் என்கிற குழம்பிய அரசியல் குட்டையில் ஆதாயம் தேடுகிற நபரைப் பற்றி கொஞ்சம் பேசியிருந்தேன். அர்னாப் கோஸ்வாமி நேற்றைய விவாதமொன்றில் பிரசாந்த் கிஷோர் பீகாரில் புரட்சிசெய்யக் கிளம்பியிருப்பதைக் குறித்துப் பேசியிருக்கிறார். வீடியோ 17 நிமிடம்
பீகாரில் நிதீஷ் குமார் கொஞ்சம் தெளிவான அரசியல் செய்யத் தெரிந்தவர்! பிஜேபியுடன் கூட்டு சேருவதும் விலகியிருப்பதும் இப்படி இரண்டுவிதமாகவும் இருந்து பார்த்தவர். பிரசாந்த் கிஷோர் என்ன செய்துவிட முடியும் என்பதையும் தெளிவாக அனுமானிக்க முடியாதா? பிஜேபி JDU கூட்டணிக்கு எதிராக மறுபடி மஹாகட் பந்தன் என்ற மாயையை மறுபடியும் கையில் எடுத்தால் இருகட்சிகளாலும் சமாளிக்க முடியாதா? இப்படி எத்தனை எத்தனை கேள்விகளை இப்படியும் அப்படியுமாக எழுப்பினாலும் விடை என்னவோ பிடிபடாமல் நழுவுகிற மாதிரித்தான் இப்போதைய நிலவரம் இருக்கிறது. பிரசாந்த் கிஷோர் செயல்படும் விதம் வெளிப்படையாக எவருக்கும் புரிவதில்லை என்பதால் வெற்று ஊகங்களை மட்டுமே பார்க்க முடிகிறது.
அதென்னவோ மான்டெக் சிங் அலுவாலியா மாதிரி காங்கிரஸ் அரசில் 10 ஆண்டுகளாகத் திட்டக்கமிஷன் துணைத்தலைவராக இருந்தவர் புத்தகம் எழுதினாலும். ராகேஷ் மரியா மாதிரி முன்னாள் மும்பை போலீஸ் கமிஷனர் புத்தகம் எழுதினாலும், காங்கிரஸ்கட்சி மீது செந்தட்டி தடவுகிறமாதிரி ஆகிப்போவதே தொடர்ந்து வரும் பரிதாபம்! காங்கிரஸ் இனிமேல் ஆட்சிக்கு வரவே வராது என்றாகிப்போன நிலையில் ராகேஷ் மரியா மாதிரி போலீஸ் அதிகாரிகள் Let me say it now என்று புத்தகம் எழுதி முன்னாள்#?# பானாசீனாவின் காவி பயங்கரவாதம் என்பதான அபத்தக் குற்றச்சாட்டு எவ்வளவு கற்பனையானது, ஜோடிக்கப்பட்டது என்று உடைத்துச் சொல்கிற அளவுக்குப் போயிருக்கிறது.
ராகேஷ் மரியா 2008 நவம்பர் 26 அன்று மும்பை மீது இஸ்லாமிய பயங்கரவாதிகள் நடத்திய கொலை வெறித் தாக்குதல்களுக்கு ஹிந்துக்களே காரணம் என்ற மாதிரி ஜோடனைகளுடன் வந்தனர் என்பதை மட்டும் தான் சொல்கிறார். டாக்டர் சுப்ரமணியன் சுவாமி சொல்கிறபடி ஒரு தீவீர விசாரணைக்கு உத்தரவிடப்படுமானால், உள்நாட்டில் எவரெவர் பாகிஸ்தானிய தீவீரவாதிகளுக்கு உடந்தையாக இருந்தார்கள் என்பதும் வெளியே வரலாம்.
ஷாஹீன் பாக் போராட்டத்தை ‘மக்களின் உரிமை’ என்று உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இது பற்றிய வழக்கில் பின்வருமாறு குறிப்பிட்டு உள்ளது: ‘ஜனநாயகம் பல்வேறு வகைகளில் வேலை செய்கிறது. நீங்கள் போராட வேண்டுமா, தாராளமாக செய்யுங்கள். CAA பற்றிய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு காத்திருக்க உங்களுக்கு ஏற்புதல் இல்லையா? நீங்களே பொதுமக்களிடம் CAAவுக்கு எதிரான நிலைப்பாட்டை உருவாக்க விரும்புகிறீர்களா, செய்யுங்கள். இன்னும் ஆயிரம் போராட்ட களங்களை உருவாக்குங்கள்.’என்று சொல்லி இருக்கிறது.
என்ன, நீதிமன்றத்துக்கு இருந்த ஒரே பிரச்சினை, போக்குவரத்து பாதிக்கப்படுவது. ‘எங்களுக்கு இருக்கும் சிறிய பிரச்சினை அது மட்டும்தான். போக்குவரத்துக்கு பாதிப்பு இன்றி போராட்டத்தை தொடருங்கள். ஒவ்வொரு உரிமையுடனும் கடமையும் சேர்ந்தே வருகிறது.’ என்று குறிப்பிட்டு இருக்கிறது.
போராடும் மக்களுடன் பேசி இதற்கு ஆவண செய்ய மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டேவை நியமித்து இருக்கிறது. ஹெக்டே பொறுப்பான ஒரு வழக்கறிஞர் அவர் நீதிமன்றத்துக்கு இருக்கும் இந்தக்குறையை திறமையாக சரி செய்வார் என்று எதிர்பார்க்கிறேன்.
ஸ்ரீதர் சுப்ரமணியத்துடைய நம்பிக்கையை டில்லியின் #வண்ணாரப்பேட்டை (ஷாஹீன் பாக்) போராளிகள் எப்படிக் காப்பாற்றினார்களாம்?
உச்சநீதிமன்றம் அனுப்பிவைத்த வழக்கறிஞர்களிடம் என்ன கேட்கவேண்டுமென்று பாடம் எடுத்து அனுப்பி வைத்ததில், வழக்கறிஞர்கள் சஞ்சய் ஹெக்டே, சாதனா ராமச்சந்திரன் இருவரும் இன்று போய் நாளையும் வாரோம் என்று சொல்லிவிட்டுக் கிளம்பியதாக செய்திகள் சொல்கின்றன.
சாந்தியும் சமாதானமும் விரும்புகிறவர்களுக்கு மட்டும் தான் கிடைக்கும்!
மீண்டும் சந்திப்போம்.
அரசியலை அவரவர் ஆதாயத்துக்குத்தான் பயன்படுத்திக்கொள்ள எத்தனிக்கிறார்கள். ஆகவே குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான போராட்டம் வெற்றி பெறுமா என்பது கேள்விக்குரியதே.
ReplyDeleteதமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை .
இதேநேரம் நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக ஆறு வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன், அடுத்த மாதம் முதல் தமிழ்மணம் போல தனிப்பதிவுகளாக அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.
@சிகரம் பாரதி
Deleteதமிழ்மணம் ஜெயித்தவிதமும் பின்னர் கைமாறி, அப்புறமும் சறுக்கியது எதனால் என்பதைப் புரிந்துகொண்டு செயல்படமுடியுமானால் தமிழ்மணத்துக்கு மாற்று என்பதை சாதிக்கவும் முடியும். இப்போது வலை ஓலை செய்வதை விட சிறப்பாகவே புக்மார்க்கிங்கில் எங்கள் பிளாக் சைடுபாரில் நீண்டநாட்களாகவே செய்து வருவதைக் கவனித்திருக்கிறீர்களா? திருப்பூர் ஜோதி ஜி அவருடைய பதிவில் உங்களுக்குச் சொன்ன பதிலில் கூட ஒரு bookmarking site ஆக நடத்துவது பற்றி ஒரு குறிப்பு இருந்ததே!