Showing posts with label கொஞ்சம் விமரிசனம். Show all posts
Showing posts with label கொஞ்சம் விமரிசனம். Show all posts

Wednesday, February 19, 2020

#அரசியல்களம் கொஞ்சம் #செய்தி கொஞ்சம் #விமரிசனம்

முந்தைய பதிவில் பிரசாந்த் கிஷோர் என்கிற குழம்பிய அரசியல் குட்டையில் ஆதாயம் தேடுகிற நபரைப் பற்றி கொஞ்சம் பேசியிருந்தேன். அர்னாப் கோஸ்வாமி நேற்றைய விவாதமொன்றில் பிரசாந்த் கிஷோர் பீகாரில் புரட்சிசெய்யக் கிளம்பியிருப்பதைக் குறித்துப் பேசியிருக்கிறார். வீடியோ 17 நிமிடம்

   
பீகாரில் நிதீஷ் குமார் கொஞ்சம் தெளிவான அரசியல் செய்யத் தெரிந்தவர்! பிஜேபியுடன் கூட்டு சேருவதும் விலகியிருப்பதும் இப்படி இரண்டுவிதமாகவும் இருந்து பார்த்தவர். பிரசாந்த் கிஷோர் என்ன செய்துவிட முடியும் என்பதையும் தெளிவாக அனுமானிக்க முடியாதா? பிஜேபி JDU கூட்டணிக்கு எதிராக மறுபடி மஹாகட் பந்தன் என்ற மாயையை மறுபடியும் கையில் எடுத்தால் இருகட்சிகளாலும் சமாளிக்க முடியாதா? இப்படி எத்தனை எத்தனை கேள்விகளை இப்படியும் அப்படியுமாக எழுப்பினாலும் விடை என்னவோ பிடிபடாமல் நழுவுகிற மாதிரித்தான் இப்போதைய நிலவரம் இருக்கிறது.  பிரசாந்த் கிஷோர் செயல்படும் விதம் வெளிப்படையாக எவருக்கும் புரிவதில்லை என்பதால் வெற்று ஊகங்களை மட்டுமே பார்க்க முடிகிறது.


அதென்னவோ மான்டெக் சிங் அலுவாலியா மாதிரி காங்கிரஸ் அரசில் 10 ஆண்டுகளாகத் திட்டக்கமிஷன் துணைத்தலைவராக இருந்தவர் புத்தகம் எழுதினாலும். ராகேஷ் மரியா மாதிரி முன்னாள் மும்பை போலீஸ் கமிஷனர் புத்தகம் எழுதினாலும், காங்கிரஸ்கட்சி மீது செந்தட்டி தடவுகிறமாதிரி ஆகிப்போவதே தொடர்ந்து வரும் பரிதாபம்! காங்கிரஸ் இனிமேல் ஆட்சிக்கு வரவே வராது என்றாகிப்போன நிலையில் ராகேஷ் மரியா மாதிரி போலீஸ் அதிகாரிகள் Let me say it now என்று புத்தகம் எழுதி முன்னாள்#?# பானாசீனாவின் காவி பயங்கரவாதம்  என்பதான அபத்தக் குற்றச்சாட்டு எவ்வளவு கற்பனையானது, ஜோடிக்கப்பட்டது என்று உடைத்துச் சொல்கிற அளவுக்குப் போயிருக்கிறது.

ராகேஷ் மரியா 2008 நவம்பர் 26 அன்று மும்பை மீது   இஸ்லாமிய பயங்கரவாதிகள் நடத்திய கொலை வெறித் தாக்குதல்களுக்கு ஹிந்துக்களே காரணம் என்ற மாதிரி ஜோடனைகளுடன் வந்தனர் என்பதை மட்டும் தான் சொல்கிறார். டாக்டர் சுப்ரமணியன் சுவாமி சொல்கிறபடி ஒரு தீவீர விசாரணைக்கு உத்தரவிடப்படுமானால், உள்நாட்டில் எவரெவர் பாகிஸ்தானிய தீவீரவாதிகளுக்கு உடந்தையாக இருந்தார்கள் என்பதும் வெளியே வரலாம்.    

ஷாஹீன் பாக் போராட்டத்தை ‘மக்களின் உரிமை’ என்று உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இது பற்றிய வழக்கில் பின்வருமாறு குறிப்பிட்டு உள்ளது: ‘ஜனநாயகம் பல்வேறு வகைகளில் வேலை செய்கிறது. நீங்கள் போராட வேண்டுமா, தாராளமாக செய்யுங்கள். CAA பற்றிய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு காத்திருக்க உங்களுக்கு ஏற்புதல் இல்லையா? நீங்களே பொதுமக்களிடம் CAAவுக்கு எதிரான நிலைப்பாட்டை உருவாக்க விரும்புகிறீர்களா, செய்யுங்கள். இன்னும் ஆயிரம் போராட்ட களங்களை உருவாக்குங்கள்.’என்று சொல்லி இருக்கிறது.
என்ன, நீதிமன்றத்துக்கு இருந்த ஒரே பிரச்சினை, போக்குவரத்து பாதிக்கப்படுவது. ‘எங்களுக்கு இருக்கும் சிறிய பிரச்சினை அது மட்டும்தான். போக்குவரத்துக்கு பாதிப்பு இன்றி போராட்டத்தை தொடருங்கள். ஒவ்வொரு உரிமையுடனும் கடமையும் சேர்ந்தே வருகிறது.’ என்று குறிப்பிட்டு இருக்கிறது.
போராடும் மக்களுடன் பேசி இதற்கு ஆவண செய்ய மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டேவை நியமித்து இருக்கிறது. ஹெக்டே பொறுப்பான ஒரு வழக்கறிஞர் அவர் நீதிமன்றத்துக்கு இருக்கும் இந்தக்குறையை திறமையாக சரி செய்வார் என்று எதிர்பார்க்கிறேன். 

ஸ்ரீதர் சுப்ரமணியத்துடைய நம்பிக்கையை டில்லியின் #வண்ணாரப்பேட்டை  (ஷாஹீன் பாக்) போராளிகள் எப்படிக் காப்பாற்றினார்களாம்?

   
உச்சநீதிமன்றம் அனுப்பிவைத்த வழக்கறிஞர்களிடம் என்ன கேட்கவேண்டுமென்று பாடம் எடுத்து அனுப்பி வைத்ததில், வழக்கறிஞர்கள் சஞ்சய் ஹெக்டே, சாதனா ராமச்சந்திரன் இருவரும் இன்று போய் நாளையும் வாரோம் என்று சொல்லிவிட்டுக் கிளம்பியதாக செய்திகள் சொல்கின்றன.

சாந்தியும் சமாதானமும் விரும்புகிறவர்களுக்கு மட்டும் தான் கிடைக்கும்! 

மீண்டும் சந்திப்போம். 

    

Thursday, September 12, 2019

வண்டி உருண்டோட அச்சாணி தேவை!

குடும்பமோ, தொழிற்சாலையோ, அல்லது ஒரு அரசியல் கட்சியோ இப்படி   எந்த ஒரு நிறுவனமாக இருந்தாலும், அது சுமுகமான முறையில்  நடக்கவும், முன்னேறவும் அதற்கு  அடிப்படையான ஒரு விஷயம் தேவைப்படும்! என்னவென்று ஊகிக்க முடிகிறதா? முடியவில்லை என்றால் இந்தப்பாட்டை கொஞ்சம் கேளுங்கள்!


  
வண்டி உருண்டோட அச்சாணி தேவை!  இந்த அச்சாணி எப்படி இருக்கும் என்பது  மாட்டு வண்டிச்சக்கரத்தைப் பார்த்திருந்தால், வீடியோவில் மைனாவதி கையில் வைத்துக் கொண்டு பாடுகிறாரே, அதுதான் என்பது தெரிந்திருக்கும்! வீடியோவில் சரியாகத் தெரியவில்லையா? இங்கே படத்தில் பாருங்கள்!


அச்சாணி, கடையாணி என்று அழைக்கப்படும் இந்தக் கொண்டி தான் வண்டி ஓடுகிற வேகத்தில் சக்கரம் தனியாகக் கழன்று வெளியே போய்விடாமல் பாதுகாக்கும் அம்சமாக இருக்கிறது. Linchpin என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்! சேத் கோடின் இந்தத்தலைப்பிலேயே ஒரு புத்தகம் கூட எழுதி இருக்கிறார்.

நிறுவனங்கள் என்று எடுத்துக் கொண்டோமேயானால், அங்கே பலவிதமான குணாதிசயங்களுடன் ஊழியர்கள் இருப்பார்கள். எவ்வளவு மெதுவாக வேலைசெய்ய முடியுமோ, அவ்வளவு மெதுவாகச் செய்வோமே என்ற மனோபாவத்துடன் பலர். அவர்களை வேலைவாங்குவதற்கென்றே மேற்பார்வையாளர் என்று சிலர் அதிகாரம் செய்துகொண்டிருப்பதையும் பார்க்க முடியும் இல்லையா? இந்த இரண்டுக்கும் நடுவே, மிகச்சில பேர் தங்களுடைய வேலையை, கூலிக்காகச் செய்வதுதானே என்றில்லாமல் முழு ஆர்வத்தோடு செய்துகொண்டு இருப்பார்கள், பார்த்திருக்கிறீர்களா? இவர்கள் தான் அந்த நிறுவனத்தின் அச்சாணிகள்! இந்த விஷயத்தை சுருக்கமாகச் சொல்கிற சேத் கோடின் பதிவு இங்கே. 

இதை படித்த பிறகு நமக்கு நன்றாகப் பெயர் தெரிந்த டொயோடா கார் நிறுவனம்! Toyota Production System  (TPS) கார் தயாரிப்பதையே எப்படி ஒரு நுணுக்கமான மேலாண்மை முறையாக வளர்த்து வந்தது என்பது இன்று எத்தனை பேருக்குத் தெரியும்? சீனாவின் தரமற்ற உற்பத்தியும் மலிவுவிலையில் உலகெங்கும் கொட்டி வருவதும் இன்றைக்கு எப்படியெல்லாம் பெரும் பிரச்சினையாக மாறி வருகிறது என்பதையும் யோசித்துப் பார்க்கிற விதமாக ....... 

வடிவேலு அடி வாங்கினா நமக்குக் காமெடி! டொயோடா சரிந்தால்.....! 

இப்படி டொயோடா கார் உற்பத்தி முறையைப் பற்றி, உற்பத்தியின் ஒவ்வொரு கட்டத்திலும் தர உத்தரவாதம் என்றிருந்ததற்கும், தரமே இல்லாமல் விலை மலிவு என்ற சாக்கில் குப்பைகளைத் தள்ளிவிட்ட சீனக் கதையையும் ஒப்பிட்டுச் சொல்லியிருந்ததை நேரமிருந்தால் படித்துப் பாருங்கள்! அன்றைக்கு எழுதும் போது சீனப்பூச்சாண்டி பெரிதாகத் தெரியவில்லை. ஆனால் உலகத்தைப் பீடித்திருக்கும் பெரிய அபாயமாக  இப்போது நன்றாகப் புலப்படுகிறது.       


2009, 2010களில் எப்படி எதைப்பற்றியும் கவலை இல்லாமல் செய்திகளைத் தேடிப்படித்து, நிர்வாகம், மேலாண்மை, தலைமைப் பண்பு என்ற தலைப்புக்களில் வரிந்துவரிந்து எழுதிக் கொண்டிருந்தேன் என்று இப்போது திரும்பிப் பார்க்கையில்,  வெப் சீரீஸ், சினிமா என்று எவ்வளவு சோம்பேறி ஆகிவிட்டேனென்று எனக்கே மிகக்கேவலமாக  உறைக்கிறது.

மீண்டும் சந்திப்போம். 
       

Friday, August 30, 2019

ச்சும்மா ஜாலிக்கு! கொஞ்சம் சினிமா! கொஞ்சம்போல விமரிசனம்!

ச்ச்சும்மா ஜாலிக்கு என்று ஆரம்பித்தாலும், பதிவின் முக்கியமான செய்தியே வேறு! என்னவென்று கண்டுபிடிக்க முடிகிறதா பாருங்கள்! இன்றைக்கு இரண்டு படங்கள், அதுவும் மிகப்பழைய படங்களை விமரிசனத்துக்கு எடுத்துக் கொள்ளப்போகிறோம்! விமரிசனம் என்றால் மிகச்சிறியதாக மட்டுமே! பயம் வேண்டாம்! 😂😱🙏  


ரிலீசாகி 71 வருடங்களை நிறைவு செய்யப்போகிற சபாபதி என்கிற நகைச்சுவைப் படத்தை இன்று பார்த்தாலும் கூட, வாய்விட்டுச் சிரிக்காமல் இருக்க முடியாது என்பது நான் தரும் காரண்டீ! மேலே சாம்பிளுக்குக் காட்டுகிற 39 நிமிட ஒளித் துண்டைப் பார்த்தீர்களானால் என்னைப்போல நீங்களும் கூட காரண்டீ கொடுப்பீர்கள்! 

சபாபதி! இது கதாநாயகன் TR ராமச்சந்திரன், அவரது வேலைக்காரன் காளி N ரத்தினம் இருவருக்கும் ஒரே பெயர்! கதாநாயகன் வசதியான, படிப்பில் கொஞ்சமும் அக்கறை காட்டாத, நண்பர்களோடு சீரியஸாக  லூட்டி அடிக்கிற ரகம்! வேலைக்காரன் படிப்பறிவே இல்லாத சொன்னதைச் சொன்னபடி செய்கிற தற்குறி! சொற்படி கேட்பது நல்லது தானே என்கிறீர்களா? சோடா உடைத்துக் கொண்டுவா என்று எஜமானன் சொன்னால் குண்டு சோடா பாட்டிலை சுத்தியலால் உடைத்துத் தட்டில் வைத்துக் கொண்டு வருகிற ரகம்! இப்படிக் கதாநாயகனும் வேலைக்காரனுமாக லூட்டி அடித்துக் கொண்டிருந்தால் எப்படி? கூடவே காமெடி லூட்டி அடிப்பதற்காக தமிழாசிரியர் சின்னசாமி முதலியாராக வரும்  K சாரங்கபாணி முதல் தோசை ராமன் என்கிற சின்னக் கேரக்டர் (நடித்தவர் பெயர் தெரியவில்லை) வரை ஒரு சின்னப் பட்டாளமே காமெடி செய்து கலக்குகிறது. 

படிப்பில் மந்தமான அம்மா செல்லம் கொடுத்துக் கெடுத்த மந்தபுத்தியுள்ள கதாநாயகனுக்கு கல்யாணம் செய்து வைக்கிறார்கள். பெண் சிவகாமு (R பத்மா)   நன்றாகப் படிக்கிறவள். கதாநாயகன் திருமணமான பின்னும் கூட அதே மாதிரிப் பொறுப்பில்லாதவனாகத் தான் இருக்கிறான். கதா     நாயகி வீட்டு வேலைக்காரி குண்டுமுத்து (CT ராஜகாந்தம்) வேலைக்காரன் சபாபதியோடு காதலாகிறாள். இந்த இருபெண்களும் எப்படித் தங்கள் கணவன்மார்களை common sense உள்ளவர்களாக மாற்றுகிறார்கள் என்பதுதான் கதை. கதாநாயகன் வெற்றிகரமாக பள்ளிப்படிப்பை பாஸ் .செய்து முடித்து விடுகிறான். வெறும் நாற்பதாயிரம் ரூபாய் பட்ஜெட்டுக்குள் மொத்தப்படமும் முடிந்து AV மெய்யப்ப செட்டியாருக்குக் காசை அள்ளிக்  கொடுத்த படம் இது. படத்தில் PA பெரியநாயகி பாட வயலின் மிருதங்கம் இவற்றையும் பெண்களே வாசிக்கிற மினிகச்சேரி படத்தின் இன்னொரு ஸ்பெஷல் பம்மல் சம்மந்த முதலியார் 1908 இல் எழுதிய முதல் கதை என்பது கூடுதல் விசேஷம். யூட்யூபிலேயே தேடினால் முழுப்படமும் நல்ல பிரிண்டில் கிடைக்கும். 


சபாபதி படம் கொடுத்த வெற்றி, தெம்பில் AV M செட்டியார் அதேபோல இன்னொரு காமெடிப்படத்தைத் தயாரிக்க விரும்பி எடுத்த படம்  என் மனைவி 1942 இல் வெளியான படம் K சாரங்கபாணி மனைவி மீது சந்தேகம் கொள்வதில் எழுகிற சம்பவங்களைக் காமெடியில் கோர்த்து எடுத்த படம். ஒரு மராத்தி கதையை பட இயக்குனரே திரைக்கதை எழுதி எடுத்த படம்  12 பாடல்கள் என்று வஞ்சனையே இல்லாமல் பாடல்களோடு வந்த படம்.

  
சங்கடமான சமையலை விட்டு சங்கீதம் பாடப்போறேன் என்ற இந்தப்படப்பாடல் மிகவுமே பிரபலமானதாக இருந்ததாம்.


அறுபது வயது முதியவரான இந்தப் பழம்பெரும் கிழம் சாரங்கபாணி எந்தச் சிங்காரியை ஒய்யாரியை மயக்க இப்படித் தன்னை அலங்கரிக்கிறது என்று தான் தெரியவில்லை! என்ற குறிப்போடு நாம் இருவர் படத்திலிருந்து இந்த அரைநிமிட வீடியோவை வலையேற்றிய Kandasamy SEKKARAKUDI SUBBIAH PILLAI அதிசயிக்கிறார் பாருங்கள்! அதுதான் இந்தப்பதிவில் பேச வந்த முக்கியமான சங்கதி!

கும்பகோணத்துக்காரரரான கே சாரங்கபாணி 1904 இல் பிறந்தவர். இசை வேளாளர். நாடகத்துறையிலிருந்து சினிமாவுக்கு வந்தவர்.கலைவாணர் NS கிருஷ்ணனைப் போல பன்முகத்திறமை கொண்டவர். 1935 இல் நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை தயாரித்த பக்த ராம்தாஸ் படத்தில் தான் திரைப்பட அறிமுகம். பெரும்பாலும் நகைச்சுவை பாத்திரங்களிலேயே நடித்திருந்தாலும், சில படங்களில் கதாநாயகனாகவும், வில்லனாகவும் கூட  நடித்திருக்கிறார். எண்பது வயது வரை வாழ்ந்த கே சாரங்கபாணி நடிகர் தியாகுவின் தாத்தா என்பது தெரியுமோ? 


தில்லானா மோகனாம்பாள் படத்தின் இந்த கிளிப் சாரங்க பாணி பாவத்தோடு தவில் வாசிப்பதில் இருந்துதான் ஆரம்பம்.

Randor Guy என்ற புனைபெயரில் சினிமா விஷயங்களை மிக சுவாரசியமாக எழுதுகிற எழுத்தாளர் கே  சாரங்கபாணி பற்றியும்  சில  தகவலைச் சொல்கிறார். 

Sarangapani played 10 roles in a short film known in those days as ‘farces,’ which was screened along with the main movie. In some cases, the farces were more interesting than the main film! Sarangapani even played female roles in the ‘Milagaipodi’ farce! (Milagaipodi means red chilli powder!) His very first appearance in the farce was a hit, as he was already a noted theatre comedian.   

ஒரு நல்ல கலைஞனை நினைவு படுத்திக் கொள்வதற்காக.

மீண்டும் சந்திப்போம். 
  

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)