Friday, August 30, 2019

ச்சும்மா ஜாலிக்கு! கொஞ்சம் சினிமா! கொஞ்சம்போல விமரிசனம்!

ச்ச்சும்மா ஜாலிக்கு என்று ஆரம்பித்தாலும், பதிவின் முக்கியமான செய்தியே வேறு! என்னவென்று கண்டுபிடிக்க முடிகிறதா பாருங்கள்! இன்றைக்கு இரண்டு படங்கள், அதுவும் மிகப்பழைய படங்களை விமரிசனத்துக்கு எடுத்துக் கொள்ளப்போகிறோம்! விமரிசனம் என்றால் மிகச்சிறியதாக மட்டுமே! பயம் வேண்டாம்! 😂😱🙏  


ரிலீசாகி 71 வருடங்களை நிறைவு செய்யப்போகிற சபாபதி என்கிற நகைச்சுவைப் படத்தை இன்று பார்த்தாலும் கூட, வாய்விட்டுச் சிரிக்காமல் இருக்க முடியாது என்பது நான் தரும் காரண்டீ! மேலே சாம்பிளுக்குக் காட்டுகிற 39 நிமிட ஒளித் துண்டைப் பார்த்தீர்களானால் என்னைப்போல நீங்களும் கூட காரண்டீ கொடுப்பீர்கள்! 

சபாபதி! இது கதாநாயகன் TR ராமச்சந்திரன், அவரது வேலைக்காரன் காளி N ரத்தினம் இருவருக்கும் ஒரே பெயர்! கதாநாயகன் வசதியான, படிப்பில் கொஞ்சமும் அக்கறை காட்டாத, நண்பர்களோடு சீரியஸாக  லூட்டி அடிக்கிற ரகம்! வேலைக்காரன் படிப்பறிவே இல்லாத சொன்னதைச் சொன்னபடி செய்கிற தற்குறி! சொற்படி கேட்பது நல்லது தானே என்கிறீர்களா? சோடா உடைத்துக் கொண்டுவா என்று எஜமானன் சொன்னால் குண்டு சோடா பாட்டிலை சுத்தியலால் உடைத்துத் தட்டில் வைத்துக் கொண்டு வருகிற ரகம்! இப்படிக் கதாநாயகனும் வேலைக்காரனுமாக லூட்டி அடித்துக் கொண்டிருந்தால் எப்படி? கூடவே காமெடி லூட்டி அடிப்பதற்காக தமிழாசிரியர் சின்னசாமி முதலியாராக வரும்  K சாரங்கபாணி முதல் தோசை ராமன் என்கிற சின்னக் கேரக்டர் (நடித்தவர் பெயர் தெரியவில்லை) வரை ஒரு சின்னப் பட்டாளமே காமெடி செய்து கலக்குகிறது. 

படிப்பில் மந்தமான அம்மா செல்லம் கொடுத்துக் கெடுத்த மந்தபுத்தியுள்ள கதாநாயகனுக்கு கல்யாணம் செய்து வைக்கிறார்கள். பெண் சிவகாமு (R பத்மா)   நன்றாகப் படிக்கிறவள். கதாநாயகன் திருமணமான பின்னும் கூட அதே மாதிரிப் பொறுப்பில்லாதவனாகத் தான் இருக்கிறான். கதா     நாயகி வீட்டு வேலைக்காரி குண்டுமுத்து (CT ராஜகாந்தம்) வேலைக்காரன் சபாபதியோடு காதலாகிறாள். இந்த இருபெண்களும் எப்படித் தங்கள் கணவன்மார்களை common sense உள்ளவர்களாக மாற்றுகிறார்கள் என்பதுதான் கதை. கதாநாயகன் வெற்றிகரமாக பள்ளிப்படிப்பை பாஸ் .செய்து முடித்து விடுகிறான். வெறும் நாற்பதாயிரம் ரூபாய் பட்ஜெட்டுக்குள் மொத்தப்படமும் முடிந்து AV மெய்யப்ப செட்டியாருக்குக் காசை அள்ளிக்  கொடுத்த படம் இது. படத்தில் PA பெரியநாயகி பாட வயலின் மிருதங்கம் இவற்றையும் பெண்களே வாசிக்கிற மினிகச்சேரி படத்தின் இன்னொரு ஸ்பெஷல் பம்மல் சம்மந்த முதலியார் 1908 இல் எழுதிய முதல் கதை என்பது கூடுதல் விசேஷம். யூட்யூபிலேயே தேடினால் முழுப்படமும் நல்ல பிரிண்டில் கிடைக்கும். 


சபாபதி படம் கொடுத்த வெற்றி, தெம்பில் AV M செட்டியார் அதேபோல இன்னொரு காமெடிப்படத்தைத் தயாரிக்க விரும்பி எடுத்த படம்  என் மனைவி 1942 இல் வெளியான படம் K சாரங்கபாணி மனைவி மீது சந்தேகம் கொள்வதில் எழுகிற சம்பவங்களைக் காமெடியில் கோர்த்து எடுத்த படம். ஒரு மராத்தி கதையை பட இயக்குனரே திரைக்கதை எழுதி எடுத்த படம்  12 பாடல்கள் என்று வஞ்சனையே இல்லாமல் பாடல்களோடு வந்த படம்.

  
சங்கடமான சமையலை விட்டு சங்கீதம் பாடப்போறேன் என்ற இந்தப்படப்பாடல் மிகவுமே பிரபலமானதாக இருந்ததாம்.


அறுபது வயது முதியவரான இந்தப் பழம்பெரும் கிழம் சாரங்கபாணி எந்தச் சிங்காரியை ஒய்யாரியை மயக்க இப்படித் தன்னை அலங்கரிக்கிறது என்று தான் தெரியவில்லை! என்ற குறிப்போடு நாம் இருவர் படத்திலிருந்து இந்த அரைநிமிட வீடியோவை வலையேற்றிய Kandasamy SEKKARAKUDI SUBBIAH PILLAI அதிசயிக்கிறார் பாருங்கள்! அதுதான் இந்தப்பதிவில் பேச வந்த முக்கியமான சங்கதி!

கும்பகோணத்துக்காரரரான கே சாரங்கபாணி 1904 இல் பிறந்தவர். இசை வேளாளர். நாடகத்துறையிலிருந்து சினிமாவுக்கு வந்தவர்.கலைவாணர் NS கிருஷ்ணனைப் போல பன்முகத்திறமை கொண்டவர். 1935 இல் நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை தயாரித்த பக்த ராம்தாஸ் படத்தில் தான் திரைப்பட அறிமுகம். பெரும்பாலும் நகைச்சுவை பாத்திரங்களிலேயே நடித்திருந்தாலும், சில படங்களில் கதாநாயகனாகவும், வில்லனாகவும் கூட  நடித்திருக்கிறார். எண்பது வயது வரை வாழ்ந்த கே சாரங்கபாணி நடிகர் தியாகுவின் தாத்தா என்பது தெரியுமோ? 


தில்லானா மோகனாம்பாள் படத்தின் இந்த கிளிப் சாரங்க பாணி பாவத்தோடு தவில் வாசிப்பதில் இருந்துதான் ஆரம்பம்.

Randor Guy என்ற புனைபெயரில் சினிமா விஷயங்களை மிக சுவாரசியமாக எழுதுகிற எழுத்தாளர் கே  சாரங்கபாணி பற்றியும்  சில  தகவலைச் சொல்கிறார். 

Sarangapani played 10 roles in a short film known in those days as ‘farces,’ which was screened along with the main movie. In some cases, the farces were more interesting than the main film! Sarangapani even played female roles in the ‘Milagaipodi’ farce! (Milagaipodi means red chilli powder!) His very first appearance in the farce was a hit, as he was already a noted theatre comedian.   

ஒரு நல்ல கலைஞனை நினைவு படுத்திக் கொள்வதற்காக.

மீண்டும் சந்திப்போம். 
  

9 comments:

  1. நடிகர் தியாகுவின் நடிப்பு எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவர் கும்பகோணம் இராஜமாணிக்கம் பிள்ளை (வயலின் வித்வான்) அவர்களின் பேரன் அல்லவா?

    ReplyDelete
    Replies
    1. ரேண்டார் கை பகிர்வில் இப்படி ஒரு தகவல் இருக்கிறது.மகள் வழிப் பேரனாக இருக்கலாம்! உறுதியாகத் தெரியவில்லை!

      Delete
  2. சபாபதி சில காட்சிகள் பார்த்திருக்கிறேன். அப்போது டி கே ஆர் கலக்கிய இன்னொரு படம் கல்யாணம்பண்ணியும் பிரம்மச்சாரி. அப்புறம் படோ சன் படத்தின் தமிழ்த் திரைப்படம்... ஹிஹிஹி பெயர் மறந்து விட்டது!

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம்! அடுத்த வீட்டுப் பெண்ணையாவது யாரென்று நினைவிருக்கிறதா? :-)))

      Delete
    2. ஹா... ஹா... ஹா... ஆம்! நினைவிருக்கிறது!

      Delete
    3. யாருடைய அடுத்த வீட்டுப் பெண்?

      Delete
    4. நெல்லைத்தமிழன் சாரே! அதை ஸ்ரீராமிடம்தான் கேட்கவேண்டும்! :-))

      Delete
  3. சபாபதி படம் பலதடவை பார்த்திருக்கிறேன் (டி.வி.டி வச்சிருந்தேன்). ரொம்ப நல்லா இருக்கும். சாரங்கபாணி நல்லா நடிச்சிருப்பார். பல நகைச்சுவை பழைய நகைச்சுவை மாதிரி இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. சபாபதியின் ஒரு முக்கியரோல் மட்டும் தான் சார்ங்கபாணிக்கு! என்மனைவியில் அவருக்கு ஹீரோ ரோல் மாதிரி! அதை முதலில் சொல்லி சபாபதியை விட்டிருந்தால் பதிவில் சுவாரசியம் வந்திருக்குமா? சொல்லுங்கள்!

      பழசு மாதிரித் தோன்றினாலும் அந்தநாளைய படங்களில் இன்றைக்கும் சுவாரசியமாக இருக்கிற நகைச்சுவை அல்லவா! சிரிக்காமலா இருந்தோம்? !!

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)