நேற்று முன்தினம் நியூஸ் 7 சேனலில் கேள்விநேரம் நிகழ்ச்சியில் இந்தக் காமெடியை நேரலையில் கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, வேறு சில விஷயங்கள் படிக்க வேண்டிய பட்டியலில் குவிந்து விட்டதால், முக்கியமான விஷயங்களில் கவனம் மாறியதில் இந்தக் காமெடியை மிஸ்பண்ணி விட்டோமோ என்ற சந்தேகம் உறுத்திக் கொண்டிருந்ததால் இன்றைக்குப் பார்த்தாகிவிட்டது.
இசுடாலின் திமுகவின் தலைவராகப் பொறுப்பேற்று இன்று ஓராண்டு நிறைவு செய்திருப்பதை ஒட்டி தினத்தந்தி இந்த ஓராண்டில் இசுடாலின் என்னசாதித்தார் என்று விளக்கமாக ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறது.மிக முக்கியமான சாதனைகளான. அண்ணன் அழகிரியை ஒட்டுமொத்தமாக ஓரங்கட்டியது, உதயநிதியை இளைஞரணிச் செயலாளராக ஆக்கி அடுத்தவாரிசு இவர்தான் என்று சூசகமாக அறிவித்ததை விட்டு விட்டார்களே என்பதுதான் கொஞ்சம் வருத்தம்! அந்த வருத்தத்தைப் போக்கிக் கொள்ள இந்தக் காமெடியை உடனே பார்த்தாகவேண்டுமென்று முடிவு செய்த வரலாற்றுச்சிறப்பு மிக்க அந்தத்தருணம் வந்தது இப்படித்தான்! வீடியோ 56 நிமிடம்! ஒருமுழுநீளக் காமெடிக்கு நான் காரண்டீ!
காவேரி நியூஸ் சேனலைப் பிரபலமாக்கிக் கொண்டிருக்கும் அதன் இணை ஆசிரியர் மதன் ரவிச்சந்திரன் இதற்கு முன்னால் நியூஸ் 7 சேனலில் இருந்த நாட்களிலும் கூட இப்போது இருக்கிற மாதிரித்தான் இருந்திருக்கிறார்! ஒரு 10 நிமிடக் காமெடி கூடுதலாக! இந்த வீடியோவுக்கு வந்த நச் கமெண்டுகளில் 2 மட்டும்
போனவருடமே இந்த வீடியோவில் இசுடாலின் எதிர்காலம் எப்படி என்று கி வீரமணி ஆரூடம் சொல்லியிருப்பது தற்செயல்தான்!
இரண்டு காமெடிகளையும் பார்த்துவிட்டு எப்படி இருந்தது என்பதைச் சொல்வீர்களா?
மீண்டும் சந்திப்போம்.
இதெல்லாம் காசு வாங்கிக்கொண்டு நடத்தும் நிகழ்ச்சி. இதையெல்லாம் நீங்க சீரியஸா எடுத்துக்கிட்டு இங்க போட்டிருக்கீங்களே. இவ்வளவு வயதானபிறகு தன் கையில் கட்சி வந்துள்ளதால், உடனே தன் வாரிசை அங்கு நிலைநாட்டவேண்டிய கட்டாயம் ஸ்டாலினுக்கு இருக்கு. நேற்று வரை நயனதாராவோட சுத்திக்கிட்டிருந்தவரைப் பார்த்து, தமிழ் தேசியம், தமிழ்ச் சிந்தனை (வ.குவாட்டர் படம் எடுத்தவர்) என்றெல்லாம் காசு வாங்கிய ஊடகங்கள் பேசலாம். நமக்கு இதில் என்ன அக்கறை இருக்கமுடியும்?
ReplyDeleteநெல்லைத்தமிழன் சார்! என்ன இப்படிக்கு கேட்டு விட்டீர்கள்? :-)))
Deleteகாசுக்கு கூவுகிறவர்கள் என்பதையும் தாண்டி இதிலிருக்கிற காமெடி புரியவில்லையா? திராவிடத்தால் வீழ்ந்தோம் என கிளைத்தெழுந்த தமிழ்தேசியத்தை எப்படி வெட்கமே இல்லாமல் சொந்தம் கொண்டாடுகிறார்கள் என்பதில் இருந்து எத்தனை காமெடி!