Tuesday, August 6, 2019

ஆர்டிகிள் 370 :: அம்பேத்கர் வரவேற்பார்! தினமணி தலையங்கம்!

அம்பேத்கார் வரவேற்பார்- தினமணி  தலையங்கம்

ஜம்மு-காஷ்மீரத்துக்கான சிறப்பு அந்தஸ்து அகற்றப்படும் என்கிற நி   லைப்பாடு தேர்தல் வாக்குறுதியாக பாரதிய ஜனதாவால் இன்று நேற்றல்ல, 1980-இல் அந்தக் கட்சி தொடங்கப்பட்டபோதே கூறப்பட்டது.
எந்தவொரு கட்சியும் தனது கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்காகத்தான் ஆட்சிக்கு வருகிறது என்பதை உணர்ந்தால், நரேந்திர மோடி அரசின் இந்த முடிவில் தவறுகாண முடியாது.
கடந்த 70 ஆண்டுகாலமாக 370, 35 (ஏ) சட்டப் பிரிவு ஜம்மு-காஷ்மீரத்தின் அமைதிக்கோ, வளர்ச்சிக்கோ எந்தவிதத்திலும் உதவவில்லை எனும் நிலையில், அவை மறு பரிசீலனை செய்யப்படுவதிலும், அகற்றப்படுவதிலும் தவறில்லை. எந்தவொருசட்டமும் காலமாற்றத்துக்கும், தேவைக்கும் ஏற்ப திருத்தப்படுவது தவிர்க்க முடியாதது.
காஷ்மீர் பள்ளத்தாக்கின் சந்தர்ப்பவாத அரசியல் குடும்பங்களான அப்துல்லாக்களும், முஃப்திகளும், பிரிவினைவாதத் தலைவர்களும் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்கு, இந்தியாவின் ஏனைய பகுதியில் வாழ்பவர்களின் வரி வருவாய் பயன்படுகிறது என்பதை எத்தனை காலம்தான் சகித்துக்கொண்டிருப்பது?
தங்களது குழந்தைகளை லண்டனிலும், நியூயார்க்கிலும் படிப்பதற்கு அனுப்பிவிட்டு, காஷ்மீர் பள்ளத்தாக்கிலுள்ள அப்பாவி இளைஞர்கள் கல்லெறிந்து போராட்டம் நடத்தவும், கல்வியைப் புறக்கணிக்கவும் அரசியல்வாதிகளும், பிரிவினைவாதிகளும் தூண்டிவிடுவதற்கு என்றைக்காவது ஒரு நாள், யாராவது முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.
பிரதமர் நரேந்திர மோடி அரசு அதைத்தான் செய்திருக்கிறது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், காஷ்மீர் பள்ளத்தாக்கு என்பது ஒரு சிறிய பகுதிதானே தவிர, மொத்த மாநிலமும் அல்ல. 22 மாவட்டங்களைக் கொண்ட ஜம்மு-காஷ்மீரத்தில் காஷ்மீர் பள்ளத்தாக்கு என்கிற பகுதி மூன்றரை மாவட்டங்களை மட்டுமே கொண்டுள்ளது. ஆனால், 35 (ஏ) சட்டப்பிரிவின்படி நிரந்தரக் குடிமக்களாக அவர்கள் கருதப்பட்டு அந்தப் பகுதியில் அவர்கள் மட்டுமே அசையா சொத்து வைத்திருக்க முடியும், அரசு வேலை வாய்ப்புப் பெறமுடியும், கல்லூரியில் படிக்க முடியும் என்று சொன்னால், அது எந்த விதத்தில் நியாயம்?
காஷ்மீரிகளை இந்திய ராணுவத்தில் சேர்த்துக்கொள்வது அடிப்படை உரிமையாக இருக்க வேண்டும் என்று காஷ்மீர் ஒப்பந்தத்தின்போது பிடிவாதம் பிடித்த ஷேக் அப்துல்லா, ஜம்மு-காஷ்மீர் காவல்துறையில் காஷ்மீரிகள் அல்லாதவர்களுக்கு இடம் கிடையாது என்று தடுத்த கதை எத்தனை பேருக்குத் தெரியும்?
2002-இல் சட்டப்பிரிவு 370-ஐ பயன்படுத்தி ஃபரூக் அப்துல்லா மாநில அரசமைப்புச் சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டு வந்தார். அதன்படி 2026 வரை ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் எந்தவிதத் தொகுதி சீரமைப்புக்கும் தடை விதிக்கப்பட்டது. அதனால், 87 உறுப்பினர்கள் கொண்ட ஜம்மு-காஷ்மீர் அவையில் வெறும் மூன்றரை மாவட்டங்கள் மட்டுமே உள்ள காஷ்மீர் பள்ளத்தாக்கைச் சேர்ந்த 46 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஜனநாயகத்தைக் கேலிப் பொருளாக்கி, தங்களது ஆட்சி அதிகாரத்தை நிலைநாட்டிக் கொண்டிருந்த அப்துல்லாக்களுக்கும், முஃப்திகளுக்கும் இப்போதைய முடிவு, முடிவுகட்டும்.
ஜவாஹர்லால் நேரு என்கிற தனி மனிதரின் பிடிவாதத்தால் தான் 370, 35(ஏ) சட்டப் பிரிவுகள் அரசியல் சாசனத்தில் இணைக்கப்பட்டன. அன்றைய அரசியல் சாசன வரைவுக் குழுவின் தலைவரும் சட்ட அமைச்சருமாக இருந்த பாபா சாகேப் அம்பேத்கர் இந்தப் பிரிவுகளை அரசியல் சாசனத்தில் இணைக்க மறுத்தார். அன்றைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபபாய் படேல், அந்தக் கோரிக்கையை நிராகரித்தார். பிரதமராக இருந்த பண்டித ஜவாஹர்லால் நேரு, அல்லாடி கிருஷ்ணசாமி ஐயங்காரின் உதவியுடன் காஷ்மீர் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளவும், 370, 35 (ஏ) சட்டப்பிரிவுகளை அரசியல் சாசனத்தில் இணைக்கவும் வற்புறுத்தி வெற்றி கண்டார் என்பது வரலாறு. ( இந்த இடத்தில் தினமணி தவறு செய்திருக்கிறது. அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர் வேறு ! அவர் அந்தநாட்களில் புகழ்பெற்ற வக்கீல். இங்கே நியாயமாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டியது N கோபால் சுவாமி அய்யங்கார். காஷ்மீர் சமஸ்தானத்தின் பிரதம அமைச்சராகவும் பின்னாட்களில் நேருவின் அமைச்சரவையிலும் மந்திரியாகப் பணியாற்றியவர்) *** 

நீங்கள் உங்கள் எல்லைகளை இந்தியா பாதுகாக்க வேண்டும் என்கிறீர்கள். உங்கள் பகுதிகளில் நாங்கள் சாலைகளை அமைக்க வேண்டும் என்கிறீர்கள். உங்களுக்கு உணவுப் பொருள்களை வழங்க வேண்டும் என்கிறீர்கள். இந்தியாவின் ஏனைய மாநிலங்களுக்கு நிகரான அந்தஸ்தை காஷ்மீர் பெறவேண்டும் என்கிறீர்கள். அதே நேரத்தில், இந்திய அரசுக்கு உங்கள் பகுதியில் எந்தவித அதிகாரமும் இருக்கக்கூடாது, இந்திய மக்களுக்கு காஷ்மீரில் எந்த உரிமையும் இருக்கக்கூடாது என்று வற்புறுத்துகிறீர்கள். இதற்கு நான் ஒத்துக்கொண்டால், இந்தியாவுக்கு துரோகம் இழைத்தவனாக நான் கருதப்படுவேன். இந்தியாவின் சட்ட அமைச்சர் என்கிற முறையில் அதை நான் ஒருபோதும் செய்ய மாட்டேன் என்று ஷேக் அப்துல்லாவின் முகத்துக்கு நேரே சொன்னவர் பாபா சாகேப் அம்பேத்கர் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் குடியேற்றம் ஏற்பட்டு அந்த இனம் அழிந்துவிடும் என்று முதலைக் கண்ணீர் வடிப்பவர்கள், காஷ்மீரில் உள்ள முஸ்லிம்களைப் போலவே சம உரிமை பெற்ற மண்ணின் மைந்தர்களான காஷ்மீரி பண்டிட்டுகள் ஈவிரக்கம் இல்லாமல் கொல்லப்பட்டும், அடித்து விரட்டப்பட்டும் உடைமைகள் அனைத்தும் கபளீகரம் செய்யப்பட்டபோது எங்கே போயிருந்தார்கள்? சட்டப்பிரிவு 370-இன் அடிப்படையில் சம உரிமை பெற்றவர்கள்தானே காஷ்மீரி பண்டிட்டுகளும்?
இனப் படுகொலை என்பது மதம் சார்ந்ததல்ல, மனிதம் சார்ந்தது. அரசியல் சாசனமும், சட்டமும் ஒருமைப்படுத்துவதற்கும், மேம்படுத்துவதற்கும்தானே தவிர, பிரிவினைவாதத்தை அனுமதிப்பதற்காக அல்ல. இதை உணர்ந்து கொண்டால், காஷ்மீரின் தனி அந்தஸ்துக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடி அரசின் முடிவை நாட்டுப்பற்றும், ஜனநாயக உணர்வும் உள்ளவர்கள் வரவேற்பார்கள்!

நன்றி! இன்றைய தினமணி நாளிதழுக்கும் (இணைப்பு தலைப்பிலேயே கொடுக்கப்பட்டிருக்கிறது)  
முகநூலில் இதை முதலில் பகிர்ந்த திரு பத்ரி  
நாராயணன் அவர்களுக்கும்! 

***மேலே பிழைதிருத்த விஷயத்தில் இன்று  தினமணி நாளிதழில் வெளியாகியிருக்கிற இந்தத் தகவலையும் சேர்த்துப் பாருங்கள்! இந்த நிமிடம் வரை தலையங்கத்தில் இருக்கிற தவறு திருத்தப்படவில்லை 

No comments:

Post a Comment

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)