Saturday, August 17, 2019

இன்றைய செய்தி! பார்த்தது கேட்டது! படித்ததில் பிடித்தது!

இன்றைக்கு கவனத்தை ஈர்த்த செய்திகளில் காஞ்சி அத்தி வரதர் தான் முதலிடம் பெறுகிறார். ஜூலை முதல் தேதி அனந்தசரஸ் குளத்தில் இருந்து வெளியில் எழுந்தருளிய அத்தி வரதர் ஒருமண்டல கால பொது தரிசனத்துக்குப் பிறகு இன்று இரவு மீண்டும் குளத்திற்குள்ளேயே எழுந்தருளுகிறார் என்பதும்  அத்திவரதரை இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமான ஜனங்கள் சேவித்திருக்கிறார்கள்  என்பதும் சாதாரணமான செய்தியா?


முனைவர் M A  வேங்கடகிருஷ்ணன் அத்திவரதர் வைபவம் குறித்து மிக அழகாகச் சொல்கிறார். வரதன் குலத்துக்குள்ளே எழுந்தருளினால், அவனை சேவிக்க இன்னும் ஒரு 40 ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமே, தரிசனத்தை நீட்டிக்கக் கூடாதா என்ற கேள்விக்கு மிகப்பொருத்தமான பதிலையும் சொல்லியிருக்கிறார். வீடியோ 28 நிமிடம் தான், பாருங்கள்! எதிலெடுத்தாலும் நொள்ளை சொல்கிற கூட்டம் இருக்கத்தான் செய்யும், அதற்கென்ன செய்ய முடியும்? 


கிறித்தவ கல்வி நிறுவனங்களில் மாணவியர்  எதிர்காலம் 
பாதுகாப்பானதா? இந்தக் கேள்விக்கு 
உங்கள் பதில் என்ன? 

பெரியார் திடலில் விசிகவின் வெளிச்சத்தில் 
ரங்கராஜ் பாண்டே!   
இது எப்படி இருக்கு? 

சரவணனை காப்பாற்ற தி.மு.க., கடும் முயற்சி...!
முக்கிய தலைவரிடம் நேரில் கெஞ்ச முடிவு
இரண்டு தினங்களுக்கு முன் ‘ரிபப்ளிக் டி,வி.,’யில் நடந்த விவாதம் ஒன்றில் பேசிய தி.மு.க., செய்தி தொடர்பாளர் சரவணன், ‘காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியே கிடையாது’ என சொல்லி பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பினார். அதாவது ‘காஷ்மீர் பாகிஸ்தானுக்குத்தான் சொந்தம்’ என சொல்லாமல் சொல்லி விட்டார்.
இதற்கு நாடு முழுவதிலிமிருந்து தி.மு.க.,விற்கு மிகப் பெரிய எதிர்ப்பு கிளம்பியது. தவிர, சமூகவலைதளங்களிலும் தி.மு.க.,வை ‘நெட்டிசன்கள்’ கடுமையாக விமர்சித்து பதிவு செய்து வருகின்றனர். ஏற்கனவே காஷ்மீர் பிரச்னையின் போது பாராளுமன்றத்தில் தி.மு.க., எம்.பி.,க்கள் லடாக் எம்.பி.,யிடும் நல்லா வாங்கிக் கட்டிக் கொண்டனர். இருந்தும் இவர்கள் திருந்தவில்லை என்று வலைதளங்களில் விதாங்கள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தி.மு.க., செய்தி தொடர்பாளர் சரவணனின் இந்த பேச்சுக்கு ‘தேசிய பாதுகாப்பு சட்டம்’ பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான வேலைகளை சுப்பரமணிய சாமி தலைமையில் ஒரு அணி செய்து வருவதாக டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் நாடே நேற்று சுதந்திரதினத்தை கொண்டாடியது. ஆனால், தி.மு.க., சுதந்திர தினத்தை புறக்கணித்தது. தி.மு.க.,வின் இந்த செலயல் பலரரையும் அதிர்ச்சி குள்ளாக்கியது. நாட்டின் இறையாண்மையை தி.மு.க., மதிக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால், சமூகவலைதளங்களில் தி.மு.க.,வை நெட்டிசன்கள் தொடர் ந்து வறுத்தெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், தி.மு.க., செய்தி தொடர்பாளர் சரவணனின் பேச்சு இந்திய இறையாண்மைக்கு எதிராக இருப்பதாக குறிப்பிட்டு ‘ஆர்மி பிரெண்ட்ஸ்’ இயக்கம் என்.ஐ.ஏ., அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது. மேலும் பல்வேறு முன் வழக்குகளையும் சுட்டிகாட்டி வழக்கின் தன்மையை எடுத்துக் கூறியுள்ளது.
இதையடுத்து சரவணனின் இந்த பேச்சு இந்திய இறையாண்மைக்கு எதிராக உள்ளதாகவும், உள்நோக்கத்துடன் நாட்டில் பிளவுகளை உண்டாக்கம் நோக்கத்தில் பேசியிருப்பதாக என்.ஐ.ஏ., வழக்கு பதிவு செய்துள்ளது. இதனால், எந்த நேரத்திலும் சரவணன் கைது செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
சரவணனின் காஷ்மீர் குறித்த பேச்சுக்கு தி.மு.க., மூத்த தலைவர்களுக்கே பிடிக்கவில்லையாம். இதுகுறித்து ஸ்டாலினிடம் அவர்கள் பேசியுள்ளனர். தவிர இப்படிப்பட்ட பேச்சுக்கள் கட்சிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்திவிடும். எனவே சரவணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு எடுக்கும் பட்சத்தில் கட்சியை காப்பாற்றிக் கொள்ளலாம் என ஆலோசனை கூறியுள்ளனர்.
இருந்தும் சரவணன் மீது நடவடிக்கை எடுத்தால் இளைஞர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் இஸ்லாமிய சமூகத்தினரின் எதிர்ப்பையும் தி.மு.க., சந்திக்க நேரிடும். ஏற்கனவே முத்தலாக் மற்றும் என்.ஐ.ஏ., சட்ட மசோதாவை தி.மு.க., கடுமையாக எதிர்க்கவில்லை என இஸ்லாமியர்கள் வெளிப்படையாகவே பேசி வருகின்றனர். சமீபத்தில் நடந்த வேலூர் தேர்தலில் இஸ்லாமியர்கள் ஓட்டால் மட்டுமே நாம் வெற்றி பெற்றிருக்கிறோம். இப்படிப்பட்ட சூழ்நிலையில், சரவணன் மீது கட்சி நடவடிக்கை எடுத்தால் சரியாக இருக்காது என மிஸ்டர் ஸ்டாலின் சொல்லியிருக்கிறார். இருந்தும் என்.ஐ.ஏ., நினைத்தால் தி.மு.க., கட்சிக்கு தடை விதிக்கலாம் என மூத்த தலைவர்கள் சொல்ல திருவாளர் ஸ்டாலின் ஆடிப்போனாராம்.
என்ன செய்யலாம் என யோசிக்க, தங்களது கூட்டணியில் உள்ள அரசியல் புரோக்கர் மூலம் இந்த பிரச்னைக்கு முடிவு கட்டலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. ‘சண்டக்காரன் காலில் விழுவுதை விட சாட்சிக்காரன் காலில் விழுவதே மேல்’ என தங்களது வழக்கமான பார்முலாவை கடைபிடிக்க தி.முக., முடிவு செய்துள்ளதாம். அதாவது இந்த விஷயத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அந்த புரோக்கர் சந்தித்து தி.முக.,வின் நிலைப்பாட்டை எடுத்துச் சொல்ல போகிறாராம். அதோடு சுப்ரமணிய சாமியை சரிகட்ட அந்த இரண்டெழுத்து டி.வி., நிர்வாகி ஒருவர் கடும் முயற்சியில் இறங்கியுள்ளாராம். அப்படி எதுவும் நடக்கவில்லை என்றால் கடைசியாக சரவணனை கைகழுவ தி.மு.க., முடிவு செய்துள்ளதாம்.
அதே நேரம் சரவணன் பிரச்னையை எளிதில் விட்டுவிடாமல் இதன்மூலம் தி.மு.க.,வுக்கு கடுமையான பாடம் கற்றுக் கொண்டுக்க வேண்டும் என மூத்த பா.ஜ., எம்.பி., ஒருவர் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சகத்தை தொர்பு கொண்டு பேசியுள்ளாராம். அவருக்கு இரண்டு துறையிலிருந்தும் ‘கிரீன் சிக்னல்’ கிடைத்துள்ளதாம்.
தமிழகத்தில் சிங்கம் போல நடிக்கும் தி.மு.க., டில்லியில் காலில் விழும் கலாச்சாரத்தை தொடர்ந்து அரங்கேற்றி வருகிறது. ஏன் இந்த கேவல பிழைப்பு மிஸ்டர் ஸ்டாலின் அவர்களே. ஆக............

ஆக .....ஆக ...ஆகட்டும்! மீண்டும் சந்திப்போம்.

          

4 comments:

  1. //சரவணன் பிரச்னையை எளிதில் விட்டுவிடாமல் இதன்மூலம் தி.மு.க.,வுக்கு கடுமையான பாடம் கற்றுக் கொண்டுக்க வேண்டும் என மூத்த பா.ஜ., எம்.பி., ஒருவர்// - இதை பாஜக செய்யத் தவறினால், தமிழகம் 'Anti National'களால் நிரம்புவதைத் தவிர்க்க இயலாது. வாக்குக்காக தீவிரவாதத்தை, மதத்துக்காக இந்த நாயக் வளர்ப்பதைப் போல திமுக காலம் காலமாகச் செய்துகொண்டே வருகிறது. திமுக 'தேசத்ரோகிகளின்' கூடாரமாக ஆகிக்கொண்டிருக்கிறது.

    இந்த புரோக்கர், தேசத்துரோகி பட்டம் பெற்றவர்தானே

    ReplyDelete
    Replies
    1. #வைகோ வாய் இருக்க வாய்ப்பில்லை என்றால் யாரந்த ப்ரோக்கர் என்று தெரியவில்லையே!

      Delete
    2. வைகோ தான் அந்த ப்ரோக்கராக இருக்கும். அவர் தானே, 'வாய் வியாபாரி'. அங்க கால்ல விழுந்து பாராளுமன்றத்துல ரெகார்டுக்காக பேசும் ப்ரோக்கர்.

      Delete
    3. வைகோ எங்கு போய்வேண்டுமானாலும் விழட்டும்! ஆனால் காரியம் சாதிக்கிற சாமர்த்தியம் உள்ள ப்ரோக்கரா? அங்கேதானே இடிக்கிறது!

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)