Saturday, August 3, 2019

விஷயம் புரிந்து கேள்! செயல்படும் நாடாளுமன்றம்!

தொலைக்காட்சி விவாதங்களில் கொஞ்சம் கொஞ்சமாக காவேரி நியூஸ் சேனல் ஒரு முதிர்ச்சியான முத்திரையைப் பதித்து வருவதை சமீப நாட்களில் பார்த்து வருகிறேன். ஆனாலும் நேர்காணலை நடத்துபவர் எதிராளியிடம் கேள்வி கேட்டு விட்டு அவரைக் குறுக்கீடு இல்லாமல்  பதில் சொல்ல விடவேண்டுமென்கிற பண்பு இங்கே நம்மூர் ஊடகங்களுக்கு அறவே இல்லை! இந்த விவாதத்தைக் கொஞ்சம் கவனித்துக் கேளுங்கள்!


மெல்லத் தெரிந்து சொல்! இது நிகழ்ச்சியின் பெயர்! கொஞ்சம் தெரிந்து சொல் என்றோ  விஷயம் புரிந்து கேள் என்றோ பெயர் வைத்து தலைப்புக்குத்தகுந்த மாதிரி நிகழ்ச்சி நடத்துகிற நாளும் வருமோ என்கிற ஏக்கமும் வருகிறது! இந்த 15 நிமிட நிகழ்ச்சியில் நெறியாளர் என்ன பெரிதாகக் கேட்டுவிட முடியும்? அல்லது பதில்களை சொல்லிவிட  முடியும்? இந்த சந்தேகத்துடனேயே பார்த்ததில் எனக்குத் திருப்தி இல்லை. உங்களுடைய சந்தேகங்களுக்கு பதில் கிடைத்ததா என்று சொல்லுங்களேன்! என்னைக் குடையும் இன்னொரு சந்தேகம், பிஜேபி சார்பில் தொலைகாட்சி விவாதங்களில் எவரும் கலந்துகொள்ள மாட்டார்கள் என்ற ,அறிவிப்பு வந்ததே, இப்போது இல்லையா? தனி ஆவர்த்தனம் என்றால் அதற்குமட்டும் அனுமதி உண்டா?


என் அபிமானத்துக்குரியவர் லிஸ்டில் இருந்து சதீஷ் ஆசார்யா எப்போது வேண்டுமானாலும் நீக்கப்படலாம்! அவர் புரிந்து தான் கார்டூன் வரைகிறாரா என்பதில் எனக்கு சில நாட்களாக சந்தேகம் வலுத்துக் கொண்டே வருகிறது. பட்ஜெட் கூட்டத் தொடர் ஆரம்பித்து நேற்று வெள்ளிக்கு கிழமையுடன் முடிந்த 35 நாட்களில் 26 சட்டமசோதாக்கள் இரு அவைகளிலும் pass ஆனதைக் குறித்த இந்தக் கார்டூனில் என்ன தான் சொல்ல வருகிறார்? உங்களுக்காவது புரிகிறதா? கபடி விளையாட்டில் களத்தில் இறங்கிநிற்கவேண்டியவர்கள், ஓரமாக ஒதுங்கி நிற்பதாகக் காட்டுவதில் என்னெவென்று புரிந்துகொள்வது?    

In terms of legislative business transacted during the first session of a fresh Lok Sabha, the government claims the current session is on course to be one of the most productive since the first Lok Sabha in 1952. Union ministers have said passing over two dozen Bills was evidence of increased productivity of Narendra Modi government 2.0. இப்படிச் சொல்வது மோடி பக்தர்கள் இல்லை, மோடி எதிர்ப்பு நிலை எடுக்கும் ஆனந்த பஜார் பத்ரிகா (ABP) என்கிற கொல்கொத்தா பத்திரிகைக்கு குழுமத்தின் Business Standard நாளிதழ் மேலும் இப்படிப்பட்டியலிடுகிறது 

Working at break-neck speed
  • Session sittings 35 days (until Friday)
  • Three more sittings until August 7 (unless extended again)
  • Bills passed by both Houses - 26 (including Finance and Appropriation Bills; Two Bills passed by both Houses; but LS needs to again approve RS amendments to Motor Vehicles and National Medical Commission Bills)
  • No. of Bills passed by LS - 28
  • No. of Bills passed by RS - 26
  • No. of Bills introduced in RS - 5
  • No. of Bills introduced in LS - 32
  • No. of Bills referred to standing/select/joint committees this session: 0
  • Bills introduced this Session but pending (in both or either House) – 10
  • Likely to be introduced – at least 2 (SC judges and J&K reservation second amendment Bills)
கடந்த நாட்களில் மாநிலங்களவையில்  காங்கிரஸ் கட்சி தனக்கிருந்த மெஜாரிட்டியை வைத்து அரசுக்கு முட்டுக்கட்டை போடுவது ஒன்றையே செய்துவந்ததில், அரசு கொண்டுவர விரும்பிய சட்டவரைவுகள் select/standing committee க்களுக்கு அனுப்பப்பட்டுக் கிடப்பில் போடப்பட்டதை, இந்த முறை அமித் ஷா உள்துறை அமைச்சரானதில், வெற்றிகரமாக முறியடித்து காட்டியிருக்கிறார். மாநிலங்களவையில் இப்போதும் கூட பிஜேபிக்கு போதிய எண்ணிக்கை இல்லாத போதும் கூட ஒரு அருமையான Floor  Management இல் காங்கிரசை ஜெயித்துக் காட்டியிருக்கிறார்கள் என்பதில் காங்கிரசின் தேய்மானம், கையாலாகாத்தனம் வெளிப்பட்டு இருக்கிறது. காங்கிரசின் கூட்டாளிகளே சோனியாG யைக் கைகழுவிவிட்டு விலகுகிறார்கள் என்பதில் பிஜேபியைக் குற்றம் சொல்வதில்  அர்த்தம் ஏதாவது இருக்கிறதா?

வாஜ்பாய் நல்ல மனிதர்
அத்வானி மோசம்,
அத்வானி நல்ல மனிதர்
மோடி மோசம்,
அடுத்தபடியா,
மோடி நல்ல மனிதர்
யோகி மோசம்,
இப்படித்தான்
போகும் ன்னு நெனச்சா,
போற போக்குல
அமித்ஷா மோசம்
மோடி நல்லவர் ன்னு
நடுங்க வச்சிட்டியே
தல?
  
      
மீண்டும் சந்திப்போம்.


             

No comments:

Post a Comment

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)