சிதம்பரத்திடம் சிபிஐ கேட்டதாக தினமலர் இப்படி ஒரு வீடியோவில் ஸ்லைடு போட்டுச் சொல்கிறது! நிஐமாகவே இதெல்லாம் சிபிஐ கேட்டதுதானா அல்லது வெற்று ஊகங்களா என்றெல்லாம் கேட்காதீர்கள்! செட்டி நாட்டு ராஜபரம்பரை (செட்டிநாடென்று சொல்வது நிஜமா கற்பிதமா?) மிதமிஞ்சிய வாய்க்கொழுப்பால் ஒரே நாளில் தலைமறைவாக ஓடி ஒளிந்து காமெடிப் பீசாகி நின்றதுதான் மிச்சம்!
செட்டிநாட்டரசு வாரிசு ஏ சி முத்தையா சிண்டிகேட் வங்கியில் 103 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் சிபிஐ கடந்த ஜூன் மாதமே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விட்டது. எப்படிச் செய்தார்கள் என்ற விவரணையை லிங்கில் பாருங்கள்! இந்த லட்சணத்தில் ஊழல் மோசடி செய்து சம்பாதிக்கவேண்டிய அவசியம் எங்கள் குடும்பத்துக்கு இல்லையென்று மாயாண்டி குடும்பத்தார் மாதிரி சிதம்பரம் குடும்பத்தார் அறிக்கையைப் பார்த்து எத்தால் சிரிப்பது? போதாக்குறைக்கு காங்கிரசை அழிக்க சிதம்பரம் கைது நடவடிக்கையைப் பயன்படுத்துகிறார்கள் என்ற காமெடி வேறு!
காங்கிரஸ் கதை ஏற்கெனெவே கந்தல்கந்தலாகிக் கொண்டு இருப்பதில் சிதம்பரம் கைதும் ஒரு கந்தல்தான்! முக்கியமான கந்தல் சோனியாG & வாரிசுகள் மட்டுமே! நரேந்திர மோடியை எதிர்க்கிறேனென்று இந்தக்குடும்பம் எதிரிகளுக்கு இடம் கொடுத்துப் பேசிவந்தது இப்போது அவர்களைச்சுற்றிச்சுற்றி வந்து பாம்பாய்க் கொத்துகிறது.
குதிரை வெளியே ஓடிப் போன பிறகு லாயத்தின் கதவை பூட்டிய கதை தான்.
காங்கிரஸ் கதை ஏற்கெனெவே கந்தல்கந்தலாகிக் கொண்டு இருப்பதில் சிதம்பரம் கைதும் ஒரு கந்தல்தான்! முக்கியமான கந்தல் சோனியாG & வாரிசுகள் மட்டுமே! நரேந்திர மோடியை எதிர்க்கிறேனென்று இந்தக்குடும்பம் எதிரிகளுக்கு இடம் கொடுத்துப் பேசிவந்தது இப்போது அவர்களைச்சுற்றிச்சுற்றி வந்து பாம்பாய்க் கொத்துகிறது.
காஷ்மீர் குறித்த... காங்கிரஸ் கட்சி + ராகுல்காந்தியின் அறிக்கைகளை ..
பாகிஸ்தானின் பொதுமேடைகளிலும், நாடாளுமன்றத்திலும், தொலைக்காட்சிகளிலும், ரேடியோவிலும்.... உதாரணமாக காட்டிக் காட்டி இம்ரானும், அங்குள்ள கட்சிகளும் பேசிக் கொண்டிருந்த வரை ...மேலும் மேலும் அதே தொனியில் பேசிக் கொண்டிருந்த ராகுல் காந்தி..
தன்னுடைய டீவீட்டை ஆதாரமாக இணைத்து..ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் பாகிஸ்தான் புகார் அளித்த பிறகு தான்...
இந்திய மக்களிடம் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக ஏற்படும் அரசியல் விளைவு புரிய ஆரம்பித்திருக்கிறது போலும் !
அவசரஅவசரமாக ட்வீட் மூலம் மறுப்பு வெளியிடுகிறார் ராகுல் .ஏற்கனவே ...காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரு எம் பி.யை பாராளுமன்றத்தில் 'காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானிற்கும் உரிமை உண்டு' என்று பேச வைத்து. அதையும் ஒரு ஆதாரமாக பாகிஸ்தான் உலக அரங்கிற்கு எடுத்து சென்றது.
இப்போது ராகுல் .
நாடாளுமன்றத்துக்கோ காங்கிரஸ் திமுக சேக்காளிகளுக்கோ கூடச் சொல்லாவிட்டாலும் பரவாயில்லை! கார்டூனிஸ்ட் சதீஷ் ஆசார்யாவுக்கு மட்டுமாவது பிளான் என்னவென்பதைச் சொல்லி விடுங்கள்! மனிதர் இப்படிப் புரியாத கார்டூனாகப் போட்டுக் கொல்லுகிறார் என்று பிரதமர் உள்துறை அமைச்சர் இருவருக்கும் ஆன்லைன் பெட்டிஷன் ஒன்று போட்டு விடலாமா?
போகன் சங்கர் எப்போதாவதுதான் அரசியல் பேசுவார்! அதனால் இதில் எந்தக் குறியீட்டையும் தேடாதீர்கள்!
பாகிஸ்தான ராகுல் காண்டியை அப்பட்டமாக மேற்கோள் காட்டி ஐநா சபை வரை கொண்டுபோனபிறகுதான் யாரோ எச்சரிக்கைமணி அடிக்கப்போய்தான் ராகுல் காண்டி U turn அடித்திருக்கிறார்! மற்றப்படி ஜனங்களுடைய உணர்வையோ அரசியலையோ புரிந்துகொள்கிற அளவுக்கு சோனியாG & வாரிசுகளுக்கு அம்புட்டு அறிவு பத்தாது என்பது ராஜா காது கழுதைக் காது கதைதான்! அந்தக்கதை என்னவென்று இங்கே!
கதையில் வருகிற ராஜா புரிந்துகொள்கிறான்! அனால் வாரிசுகள்......? புரிந்துகொள்வதைக் கூட அடிமைகள் செய்ய வேண்டிய ஒன்றாக நினைப்பது நேரு பாரம்பரிய மேட்டிமைத் தனம்!
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment