பொழுதுபோக்க எத்தையாவது படிக்கவந்தால் இங்கே என்ன அரிச்சுவடிப்பாடமா நடக்கிறது என்று தலைப்பைப் பற்றிப் பதறவேண்டாம்! இப்படி அன்பு எங்கே என்கிற ஒரு பழைய தமிழ்ப்படத்தில் கே ஜமுனாராணி பாடிய ஒரு அருமையான பாட்டு கூட இருக்கிறதே! இன்றைய இளந்தலைமுறைக்கு அரிச்சுவடி என்றால் என்ன என்பதேகூடத் தெரியாமல் இருக்கலாம்! அவர்களுக்காக ஒரு சிறு விளக்கப்படம், இது தான் அரிச்சுவடி என்று தெரிந்துகொள்வதற்காக:
என்ன லந்தா என்று அடிக்க வருவதற்கு முன்னால், ஜமுனாராணி பாடிய பாடலைக் கொஞ்சம் பார்த்து விடலாம்!
அந்தநாளைய நடிகை பண்டரிபாய் குழந்தைகளுக்கு இப்படிப் பாடி தமிழை ஆரம்ப நிலையில் இருந்து கற்றுக் கொடுக்கிறார். அதற்கு இப்போது என்ன வந்தது என்கிறீர்களா?
காங்கிரஸ்காரனுக்கும் இன்றைக்கு அரசியல் அரிச்சுவடியை யாராவது கற்றுத்தர வேண்டியிருக்கிறது என்பதுதான் விஷயம்! சென்ற ஐந்தாண்டுகளில் ஆட்சியை இழந்தாலும், ராஜ்யசபாவில் காங்கிரசுக்கு இருந்தபலத்தை வைத்து பிஜேபி கொண்டு வர விரும்பிய சட்ட மசோதாக்களை தடுக்க முடிந்த பழைய நினைப்பிலேயே இன்னமும் இருக்கிறார்கள் என்பது மிகப்பெரிய பரிதாபம்தான் இல்லையா? RTI amendment bill ராஜ்யசபாவில் சென்ற வாரம் நிறைவேற்றப்பட்டது காங்கிரசின் பழைய நினைப்பில் மண்ணை அள்ளிப்போட்டது என்றுதான் சொல்ல வேண்டும். இத்தனைக்கும் சோனியாG இதை ஒரு கௌரவப் பிரச்சினையாக எடுத்துக் கொண்டு மிக ஆக்ரோஷமாக இந்த மசோதாவை எதிர்த்தார்! எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார் என்பது நினைவிருக்கிறதா?
காங்கிரஸ், எப்படி மாறிப்போன சூழ்நிலையைப் புரிந்து கொள்ளாமல், ராஜ்யசபாவில் இந்த மசோதாவை select committeeக்கு அனுப்பியே ஆக வேண்டுமென்று கூவி, அதுவும் நிராகரிக்கப்பட்டு, வாக்கெடுப்பும் நடந்து மசோதா ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டதில் காங்கிரஸ் முகத்தில் கரி பூசிக்கொண்டதும் எப்படி என்றவிஷயம் மேலே 3 நிமிட வீடியோவில்.
பிஜேபி ஆதரவு நிலையெடுக்காத, காசுக்கு கூவுகிறவர்தான் என்று நான் நினைக்கிற சேகர் குப்தா இதைப்பற்றி என்ன சொல்கிறார் என்பதைக் கொஞ்சம் கேளுங்கள்! வீடியோ 14 நிமிடம்தான்! RTI திருத்த .மசோதா ஒரு முன்னோட்டம்தான்! அடுத்தடுத்து பிஜேபி அரசு பல சட்ட மசோதாக்களை நாடாளு மன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றுவதில் உறுதியாக இருந்தது என்பதைக் கண்டுகொள்ள முடியவில்லை என்றால் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்ட வல்லுநர்கள் இருந்து என்ன பிரயோசனம்?
RTI மசோதாவை ராஜ்யசபாவில் வெள்ளோட்டம் பார்த்த சூட்டோடு சூடாக இஸ்லாமியப்பெண்கள் பாதுகாப்பு மசோதா என்று முத்தலாக் முறையை ஒழித்து அதைத் தண்டனைக்குரிய குற்றமாக்க வகை செய்கிற சட்டவரைவை ராஜ்யசபாவிலும் வாக்கெடுப்பு நடத்தி நிறைவேற்றினார்கள், எப்படி என்பதை ஒரு தொகுப்பாக இங்கே தந்திருக்கிறார்கள். வீடியோ 45 நிமிடம்.எப்படி காங்கிரஸ் அதை Select Committeeக்கு அனுப்பவேண்டுமென்று ஒற்றைக் காலில் நின்றும் கூட அதற்கு ஆதரவாக 84 வாக்குகளும் எதிர்த்து 100 வாக்குகளும் விழுந்தபோதே காங்கிரசுக்குத் தன்னுடைய இழுத்தடிக்கிற அந்தநாளைய நினைப்பெல்லாம் இனி வேகாது என்பது தெரிந்திருக்க வேண்டும். குரல் வாக்கெடுப்பில் எதிர்க்கட்சி வரிசை உத்தேசித்த திருத்தங்கள் தோற்கடிக்கப் பட்ட பிறகு மசோதா மீதான வாக்கெடுப்பு நடந்தது. ஆதரவாக 99 வாக்குகள் எதிர்த்து 84 வாக்குகள் என்று மசோதா ராஜ்யசபாவிலும் நிறைவேற்றப்பட்டு, இன்றைக்கு ஜனாதிபதியின் ஒப்புதலும் பெறப்பட்டு, சட்டமாகி இருப்பதில் தெரிவது என்ன? ஆனந்த் ஷர்மா புலம்பியதுபோல கொறடா உத்தரவு பிறப்பிக்கக் கூட தங்களுக்கு நேரம் இல்லை என்பது உண்மையா? ஒரு முழுமையான பரிசீலனை, விவாதம் நடத்தப் படாமலேயே சட்டமசோதாக்கள் நிறைவேறுகின்றன என்பதில் கொஞ்சமாவது உண்மை இருக்கிறதா?
இந்த இரண்டு மசோதாக்களை பிஜேபிக்கு போதிய எண்ணிக்கை இல்லாமலேயே நிறைவேற்ற முடிந்திருப்பதில் அவர்களுடைய floor management திறமை காங்கிரசை விட மிக அதிகமாக இருந்தது என்பது உண்மைதான்! ஆனால் அதுவே முழுமையானது இல்லை!
ஒருகாலத்தில் உலகின் அரசியல் செல்வாக்கு மிகுந்த நபர்கள் பட்டியலில் சோனியாG இருந்ததாக கற்பனை ஒன்றை பரப்பி அது உண்மைதானோ என உள்ளூரிலும் நம்ப வைக்க முடிந்தது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் chair person ஆக கூட்டணியைத் திறம்பட நிர்வகித்ததாக இன்னொரு கற்பனையும் ஊடகங்களால் பரப்பப் பட்டதே இன்று அந்த பிம்பத்துக்கு என்னவாயிற்று? வஞ்சகம் பேராசை இந்த இரண்டைத்தவிர வேறொரு அரசியல் அறிவும் இல்லாத சோனியாGயை இனிமேலும் நம்பமுடியாது என்று காங்கிரசின் கூட்டாளிகளே ஒருவர்பின் ஒருவராக கைகழுவி விட்டுப் போய்க்கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறதா?
இன்னமும் சோனியாG அல்லது வாரிசுகள் இருந்தால்தான் காங்கிரஸ் கட்சி என்று ஒரு அமைப்பே இருக்கும். வேறு எவராவது தலைமைக்கு வந்தால் 24 மணிநேரத்துக்குள் கட்சி உடைந்து சின்னாபின்னமாகிவிடும் என்கிறார் K நட்வர் சிங்! Oil for food Scam இல் இதே சோனியாவால் பலிகடா ஆக்கப்பட்டு ஒதுங்கியிருக்கிற ஒரு காங்கிரஸ் விசுவாசி இவர்! நட்வர் சிங் சொன்னதையே தான் சசி தரூரும், பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங்கும் சொல்கிறார்கள். (பிரியங்கா தலைமைக்கு வர வேண்டுமாம்)
ஆனால் சசி தரூர் சொன்னதில் ஒருபகுதிக்கு மட்டும் காங்கிரசின் அகில இந்திய நிர்வாகி கே சி வேணுகோபால் உடனடியாக மறுப்புத் தெரிவித்தாரே, நினைவிருக்கிறதா?
சோனியாG ப்ராண்ட் காங்கிரசுக்கு இனிமேல் விடிவுகாலமே இல்லை! இந்தக் குடும்பத்தை வைத்துக் கொண்டு கட்சி நடத்துவதென்பது சாத்தியமே இல்லை.
காங்கிரஸ் ஒழிந்துபோவது இந்த தேசத்துக்கு மிகவும் நல்லது! ஏன் என்பதாவது விளங்கிக்கொள்ள முடிகிறதா?
மீண்டும் சந்திப்போம்.
>>> காங்கிரஸ் ஒழிந்து போவது இந்த தேசத்துக்கு மிகவும் நல்லது!..
ReplyDeleteஏன் என்பதாவது விளங்கிக் கொள்ள முடிகிறதா?..<<<
ஏன் என்பதை விளங்கிக் கொள்ள முடிந்தாலும் சரி.. முடியா விட்டாலும் சரி..
நல்லது சீக்கிரம் நடக்கட்டும் என்பதே பலரது விருப்பம்..
துரை செல்வராஜூ சார்! ஜனங்கள் புரிந்து கொண்டு ஒதுக்கி வைத்தால் , அது நிலையானதாக இருக்கும். இல்லையென்றால் 1980இல் வெள்ளந்தியான சரண்சிங்கைப் பயன்படுத்தி, இந்திரா காண்டி மறுபடியும் அரியணை ஏறிய கதையாகிவிடலாம், இல்லையா?
Delete