இந்திய அரசியலில் மக்கள் செல்வாக்கு இல்லாமலேயே தன் கிரிமினல் புத்தியால் முன்னணிக்கு வந்தவர் செட்டி நாட்டு இளவல், கலீஞரின் வார்த்தைகளில் சிவகங்கை சின்னப்பையன், சீனாதானா இப்போது நாடுமுழுக்க அறியப்படும் கேலிப்பொருளாகி இருக்கிறார்! நேரலையில் சிதம்பரத்தின் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் அதே பல்லவி அதே வாதங்களைவைத்து ஜாமீனில் வெளியே எடுக்க முயற்சி செய்துகொண்டிருப்பது பற்றிய செய்திகளைக் கேட்டுக் கொண்டே சிதம்பரத்தின் கைதுவிவகாரம் என்னென்ன தாக்கத்தை ஏற் படுத்தியிருக்கிறது என்று பார்த்துக் கொண்டிருப்பதில் சில சுவாரசியமான பார்வைகள் இங்கே
சிதம்பரம் என்ன தியாகியா? அல்லது மக்கள் செல்வாக்குள்ள தலைவரா? இந்தக்கேள்விகளுடன் கருத்தைச் சொல்கிறார் ரவீந்திரன் துரைசாமி வீடியோ 10 நிமிடம்.
ப.சிதம்பரம் கைது ஆவாரா, மாட்டாரா என்பது பற்றியே எல்லோரும் பேச வேண்டும். காஷ்மீர் பற்றியோ, திமுக நடத்தும் ஆர்ப்பாட்டம் பற்றியோ யாரும் பேசி விடக் கூடாது. இதுதான் மோடி வித்தை! #PChidambaram #DMK #Kashmir
Translate Tweet
10:25 AM · Aug 21, 2019
அவரவர் கவலை அவரவருக்கு! #ஓசிச்சோறு
டில்லி ஜந்தர் மந்தரில் திமுக எம்பிக்கள் கண்டன ஆர்ப்பாட்டம். கலீஞர் செய்திகளில் தவிர வேறெந்த சேனலும் இதற்கு அத்தனை முக்கியத்துவம் கொடுத்த மாதிரி எனக்குத் தெரிந்து இல்லை. காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர்களை விடுதலை செய் என்று கோஷமிட்டவர்கள் மறந்ந்துபோய்க் கூட சிதம்பரத்தை விடுதலை செய் என்றோ அவரது கைதுக்கு கண்டனமோ தெரிவிக்கவில்லை. ஒருநிமிட வீடியோ
ஊழல் செய்ததும் கொள்ளையடித்ததும் நாட்டுக்கு அவமானம் இல்லையாம்! சிதம்பரம் வீட்டுச் சுவரேறிக்குதித்து சிபிஐ அதிகாரிகள் கைதுசெய்ததுதான் நாட்டுக்கு அவமானமாம்!இது இசுடாலின் காமெடி! வீடியோ 4 நிமிடம்.
கராத்தே தியாகராஜன் வேறுவிதமாகக் கத்தி போடுகிறாரோ? காங்கிரஸ் முதலாளிகள் ஏற்கெனெவே இந்த வில்லங்கமான சீனாதானா தங்களை எங்கே கைகாட்டிவிடுவாரோ என்று பயந்து கொண்டிருக்கையில் காங்கிரசாவது சிதம்பரத்தைக் கைகழுவுவதாவது!! வீடியோ 9 நிமிடம்
இந்த வாதப்பிரதிவாதங்களை சற்றுக் கேலியுடனேயே பார்க்க முடிந்தாலும் கலீஞரின் ராசியான மகள் கனிமொழி சிறையில் இருந்த அந்த நாட்களில் ஜெயிலா பெயிலா என்பதுதான் முக்கியமான கேள்வியாக இருந்தது; இங்கே அந்தக் கேள்வியே இல்லை! விசாரணைக்காக கஸ்டடியில் 5 நாட்கள் எடுக்க வேண்டும் என்பதுதான் ஏஜென்சிகளின் வாதம்! நானொரு சீனியர் வக்கீல்! சட்டம் என் கையில்! என்பது சிதம்பரம் தரப்பு வாதம் என்பதையும் நினைவுபடுத வேண்டி வருகிறதே!
வழக்கறிஞர்களைப் பற்றி ஒரு கருத்து உண்டு. பாதி உண்மை மட்டுமே பேசத்தெரிந்தவர்கள் என்று ஒரு வழக்கறிஞரே சொன்னதாக ஞாபகம். எதற்காக இப்போது இது? இன்னும் சற்று நேரத்தில் சிதம்பரத்துக்கு சிபிஐ கஸ்டடியா அல்லது ஜாமீனா என்பதை நீதிமன்றம் எப்படித் தீர்ப்பளிக்கப் போகிறது என்பதற்காகக் காத்துக் கொண்டிருக்கையில், கொஞ்சம் நமது தரப்பு வாதத்தையும் ரெடி பண்ணிக் கொள்ள வேண்டாமா? சாமானியர் என்றால் ஜட்ஜ் தீர்ப்பை டிக்டேட் செய்து நீதிமன்றத்தில் சொல்ல 30 நிமிடங்களே போதும். ஆனால் சட்டம் என் கையில் என்று மமதையோடு திரிந்தவர் விஷயத்தில் அவ்வளவு சீக்கிரம் வந்துவிடுமா?
சிதம்பரம் கைது விவகாரத்தினை ஆர்வமாக எழுதுகின்றவர்கள் வாழ்க
ஆனால் சி பி ஐ மத்திய உள்துறை அமைச்சக நிர்வாகக் கட்டுப்பாட்டில் வருவதாக யூகித்துக் கொண்டு இன்றைய உள்துறை அமைச்சரையும் கைதாகியிருக்கும் முன்னாள் உள்துறை அமைச்சரையும் துறை சார்ந்து கொக்கி போட்டு எழுதுவதற்கு முன்பு சிபிஐ வலைத் தளத்தையும், உள்துறை வலைத் தளத்தையும் ஒரு முறை விஜயம் செய்துவிட்டு எழுதவும்
சிபிஐ Prevention of Corruption Act, 1988 கீழ் குற்றங்களை விசாரிக்கும் போது அதனை மத்திய விஜிலென்ஸ் கமிஷன் மேற்பார்வை செய்யும். பிற சங்கதிளுக்கு சிபிஐ Department of Personnel & Training (DOPT) in the Ministry of Personnel, Pension & Grievances of the Government of India.கட்டுப்பாட்டிலும் வருகிறது
இது எனக்குப் புதுத்தகவல். மீண்டும் சந்திப்போம்.
டிஸ்கி: இப்போதைய செய்தியாக சிதம்பரம் தரப்பு வாதங்கள் நிராகரிக்கப்பட்டு 26ஆம்தேதி வரை சிபிஐ கஸ்டடியில் வைத்து விசாரிக்கலாமென்று நீதிமன்றம் உத்தரவு 6.42 PM IST .
டிஸ்கி: இப்போதைய செய்தியாக சிதம்பரம் தரப்பு வாதங்கள் நிராகரிக்கப்பட்டு 26ஆம்தேதி வரை சிபிஐ கஸ்டடியில் வைத்து விசாரிக்கலாமென்று நீதிமன்றம் உத்தரவு 6.42 PM IST .
//சிதம்பரம் வீட்டுச் சுவரேறிக்குதித்து சிபிஐ அதிகாரிகள் கைதுசெய்ததுதான் நாட்டுக்கு அவமானமாம்!// - இப்படித்தானே தயாநிதி மாறனையும் கைது செய்தார்கள். (சுவரேறிக் குதித்து).
ReplyDelete//காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர்களை விடுதலை செய் என்று கோஷமிட்டவர்கள் // - இவர்கள் ஆர்டிகில் 370ஐ பிரயோகப்படுத்தியது தவறு என்று பேச நினைத்தவர்கள், பாகிஸ்தான் இவர்களது எதிர்ப்பைப் பற்றிப் பேசியதும், எங்கே தேசத்துரோக வழக்கில் திமுகவை முடக்கிவிடுவார்கள் என்று பயந்து காஷ்மீரில் வீட்டுக் காவலில் இருப்பவர்களைப் பற்றிப் பேசுகிறார்கள். இதற்கு என்ன காரணம் என்பதை எல்லோரும் அறிவார்கள். இதுக்கான விலையை திமுக நிச்சயம் கொடுக்கும்.
ஸ்டாலினுக்கு எது அவமானம் என்று யார் வகுப்பு எடுப்பது? கத்தியைக் காட்டி கொள்ளையடிப்பதுபோல, மேல் தளத்தில் 65 சீட்டுகள் கொடுக்கிறாயா இல்லையா என்று பேச்சுவார்த்தை, கீழ்த்தளத்தில் தயாளு அம்மையாரை சிபிஐ விசாரணை செய்வது என்று அறிவாலயத்தில் நடந்தபோது ஸ்டாலினுக்குப் பெருமையாக இருந்ததாமா? இல்லை ஆ.ராசாவையும் கனிமொழியையும் 6 மாதம் திகார் ஜெயிலில் வைத்தது பெருமையாமா?
வாருங்கள் நெ.த.!
Deleteதிமுகவுக்கும் காங்கிரசுக்கும் பானாசீனாவுக்கும் இப்போதிருக்கிற உறவு politics of convenience! மற்றபடி லட்சிய உறவு, பரஸ்பர மரியாதை எல்லாம் கிடையாது என்பதைச் சொல்வதற்காகத்தான் கராத்தே தியாகராஜன் பேட்டியையும் இங்கே எடுத்துக் போட்டிருக்கிறேன். பிஜேபி இவர்களைக் கண்டுகொள்வதில்லை என்பதால் மட்டுமே காங்கிரசோடு உறவு, இல்லையானால் எப்போதோ கை கழுவிவிட்டிருப்பார்கள்! அத காஷ்மீர் கூட்டாளிகளுக்காகக்குரல் கொடுத்திருப்பது, எங்கேயோ பலத்த அடி விழுந்திருக்கிறது என்ற ஊகத்தை தூண்டுகிறது.