காங்கிரஸ் கட்சி என்பது சோப்ளாங்கிகளால் நிரப்பப்பட்ட கட்சிதான் என்பது சோனியாG & அடிமைகளால் மீண்டும் மீண்டும் நாடாளுமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுவருவதைப் பார்த்துக் கொண்டே வருகிறோம்! அந்த அவலம் இன்னமும் மாறவில்லை என்பதை ஒருபக்கம் ஒதுக்கிவைத்து விடலாம்!
ஆனால் நரேந்திர மோடி வெர்ஷன் 2.0 இதுவரை இருந்த எந்த அரசையும் விடத் திறமையானது என்பதைத் தெளிவாக மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறதே, அதையும் அப்படி ஓதுக்கி விட்டு, கவனிக்காமல் போய்விட முடியுமா?
ஆனால் நரேந்திர மோடி வெர்ஷன் 2.0 இதுவரை இருந்த எந்த அரசையும் விடத் திறமையானது என்பதைத் தெளிவாக மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறதே, அதையும் அப்படி ஓதுக்கி விட்டு, கவனிக்காமல் போய்விட முடியுமா?
டாக்டர் சுப்ரமணியன் சுவாமி இந்த 7 நிமிட வீடியோவில் என்ன சொல்கிறார் என்பதைக் கொஞ்சம் கேளுங்களேன்! ஆர்டிகிள் 370, அப்புறம் அந்த 35A இரண்டும் என்னமோ அகற்ற முடியாதது, அந்த அளவுக்கு உறுதியானது என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தது எல்லாமே வெறும் பீலா மட்டுமே! ஜனாதிபதி தன்னுடைய அதிகார வரம்புக்குட்பட்டே அவைகளைத் திரும்பப் பெறமுடியும் என்பது இன்று காலை 11 மணிக்கு மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தகவலாகச் சொன்னபோதே நிரூபிக்கப்பட்டுவிட்டது. ஆர்டிகிள் 370 என்னமோ நீக்கப்பட்டுவிட்டதாக அர்த்தமா என்றால், அது பெயரளவுக்கு காகிதத்தில் மட்டும் இருக்கும்!
இங்கே பானாசீனா வீராவேசமாகப் பேசுகிறாரென்றா நினைக்கிறீர்கள்? இங்கே லோக்கல் சேனல்களில் வேண்டுமானால் அப்படித் தலைப்புக் கொடுத்துக் கொள்ளலாம்! ஆனால் இன்றைக்கே ஜம்முகாஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாகப் பிரிப்பதான அரசின் முடிவின் மீதான வாக்கெடுப்பு நடந்துவிடும் என்ற நிலையில் செட்டியாரும் சரி அவருடைய கட்சியும் சரி மிகவும் சோர்ந்துபோய்க் கிடப்பது புரிகிறதா? காங்கிரசுக்குள்ளேயே இதை எதிர்ப்பதில் இருவித கண்ணோட்டங்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. தவிர மாநிலங்களவையில் காங்கிரஸ் கொறடா புவனேஸ்வர் கலிடா, இந்த விஷயத்தில் கட்சியின் நிலைப்பாடு வெகு ஜன அபிப்பிராயத்துக்கு முரண்படுவதாகச் சொல்லி கட்சியில் இருந்து ராஜினாமா செய்திருக்கிறார்.
இந்தவரிகளை டைப் செய்துகொண்டிருக்கும்போது உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் வைகோ, கபில் சிபல், பானாசீனா முதலானவர்கள் பேசியதற்கெல்லாம் பதில் அளித்து உரை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். வாக்கெடுப்பு இனிமேல் தான்! ஆனால் இப்போதைய நிலவரப்படி ஆதரவு எதிர்ப்பு நிலை எண்ணிக்கை என்னவாக இருக்கும் என்று மேலே ஒரு கோடி காட்டப் படுவதை பாருங்கள்! மானக்கேட்டை தவிர்க்க காங்கிரஸ் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கிக் கொள்ளும் என்றொரு ஊகமும் வலம் வந்து கொண்டிருக்கிறது.
எங்கள்Blog ஸ்ரீராம் சொன்னதை என் வார்த்தைகளில் சொல்வதானால் கொஞ்ச காலத்துக்கு காங்கிரஸ், திமுக முதலான உத்தமக் கூட்டுக்களவாணிகள் நாங்களும் எதிர்த்துக் குரைத்துப் பார்த்தோமே என்று சால்ஜாப்பு சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதுதான்!
உத்தமக் கூட்டுக்களவாணிகள் சாயம் வெளுத்துப்போய் நீண்டகாலமாகிறது.
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment