Friday, August 23, 2019

சிதம்பரம் முதல் அறிவாலயம் வரை! செய்தி உலா!

சோனியாG டைப் அரசியலில் விவஸ்தையோ விவரமோ எதுவும் கிடையாது, தாங்கள் பேசுவது தங்களுக்கு எதிராகவே திரும்புகிறதா இல்லையா என்று நிதானித்துப் பார்க்கக் கூடத் தெரியாத அதி மேதாவிகளின் கட்சி காங்கிரஸ்! நேற்று சிபிஐ நீதின்றத்தில் சிதம்பரத்துக்காக காங்கிரஸ் வக்கீல்கள் மல்லுக் கட்டிக் கொண்டிருந்த அதே வேளையில் சோனியாG  காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ராஜீவ் காண்டி புராணம் பாடிக் கொண்டிருந்தார். Sonia said that Rajiv won an unprecedented majority in 1984, “but he did not utilise that mandate to create an atmosphere of fear and to threaten or bully people, erode the independence of institutions, crush dissent and divergent views and not to jeopardise democratic traditions and lifestyle”.

இந்திரா கொலைசெய்யப்பட்டதில் எழுந்த  அனுதாப அலையில் காங்கிரஸ் கட்சி  தேர்தல் நடந்த 514 தொகுதிகளில் 414 இடங்களில் ஜெயித்தது. ஆனால் அந்த  அனுதாபத்துக்கு எதிராக ஆந்திராவில் 30 இடங்களில் NT ராமாராவின் தெலுகுதேசக் கட்சி ஜெயித்தது. பிஜேபிக்கு வெறும் இரண்டே சீட்டுகள் தான்! அதை நேரடியாகச் சொல்ல முடியாமல்  நரேந்திர மோடியைக் குத்துவதாக நினைத்துக் கொண்டு, மிகப் பெரிய  மெஜாரிடியை வைத்திருந்தும்  ராஜீவ் அச்சமூட்டுகிற விதத்தில் எதையும் செய்யவில்லை என்று பெருமிதப்பட்டுக் கொண்டிருக்கிறார். 1984 சீக்கியர் படுகொலை மீதான வழக்கு. 1984 போபால் விஷவாயு பாதிப்படைந்தவர்களுக்கு    இன்னமும் நியாயம் வழங்கப்படவில்லை என்ற விஷயம் பூமராங் மாதிரி காங்கிரசையே திருப்பித் தாக்குகிறது. அவ்வளவு பெரிய மெஜாரிடியை வைத்துக் கொண்டும் கூட ராஜீவ் காண்டியால் உருப்படியான ஆட்சியைத்தர முடியவில்லை.  தெளிவான தைரியமான முடிவுகளெதையும் எடுக்க முடியவில்லை. ஷா பானோ வழக்கில் உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை இஸ்லாமிய வாக்குவங்கிக்காக பயந்து அமல்படுத்தாமல் அவசரச்சட்டம் பிறப்பித்துக் குளிர்வித்த  பழைய கோழைத்தனங்கள் எல்லாம் முன்னுக்கு வந்து நிற்பதை மேலே 10 நிமிட வீடியோவில் ஒரு விவாதமாக. ஆனால் கட்சிக்குள்ளேயே எதிர்ப்புக்குரல்கள் விதவிதமாகக் கிளம்பிக் கொண்டிருப்பதை, முந்தையநாட்கள் போல சோனியாGயால் சமாளிக்க முடியுமா?
. As you know, I have argued for six years now that should be praised whenever he says or does the right thing, which would add credibility to our criticisms whenever he errs. I welcome others in Oppn coming around to a view for which i was excoriated at the time!
12:51 PM · Aug 23, 2019

Now, Shashi Tharoor Says 'Demonising Modi Wrong'; Backs Jairam Ramesh, Singhvi என்கிறது அவுட்லுக் இணையதளச் செய்தி. புதன்கிழமையன்று காங்கிரசின் ஜெய்ராம் ரமேஷ் ஒரு புத்தகவெளியீட்டு நிகழ்வில் எதற்கெடுத்தாலும் நரேந்திர மோடியைக் குறை சொல்லிக் கொண்டிருப்பது நல்லதல்ல என்று சொல்லியிருந்தார். நேற்றைக்கு எதிர்பாராவிதமாக அபிஷேக் மனு சிங்வியும் ஜெய்ராம் ரமேஷின் கருத்தை ஆதரித்துச் சொல்லியிருந்தார். இப்போது சசி தரூரும் அந்தக் கருத்தில் உடன்படுகிறார் என்பதில் ஏதாவது புலப்படுகிறதா? முந்தைய நாட்களைப் போல தங்கள் சித்தம் எங்கள் பாக்கியம் என்று பின்பாட்டுப்பாடுவதில் காங்கிரசாருக்கே அவ்வளவாக உடன்பாடில்லை போல இருக்கிறதே! 

நெருக்கும் கை நெருங்கி வருவது ஏன்? " இறுக்கும் கை" இளகிப் போனது ஏன்? "கை. தேர்ந்தவர்களின் கழுத்தை இறுக்கியதால் சசி தரூர் ஜெய்ராம் ரமேஷ் அபிஷேக் மனு சிங்வி மனம் மாறினார்கள் காங்கிரஸ் வழி தெறியாமல் "கையை "பிசைகிறது
5:05 PM · Aug 23, 2019


என்னகொடுமை இது சதீஷ் சார்? வரவர நீங்கள் வரைகிற ஒவ்வொரு கார்டூனுக்கும் நீங்களே ஒரு விளக்கவுரை எழுதினால் தான் சரிப்பட்டு வருமோ? கார்டூனுக்கு வந்த ஒரு பின்னூட்டம் என்னமோ நிதியமைச்சகம் இந்தப் பொருளாதார புளி வந்துதான் வழிசொல்லவேண்டுமென்று கெஞ்சுகிற மாதிரி....! இன்னுமா இந்த ஆசாமியை இந்த உலகம் நல்லவர் வல்லவர் மேதை என்றெல்லாம் நம்பிக்கொண்டு இருக்கிறது?           
Why does Pakistan like PC? Because as FM in 2005 he overruled the IB, RAW and CBI who opposed giving printing of currency paper contract to a Pvt Co Delaru in UK since the company also prints Pakistan currency paper making counterfeiting easy. No wonder ISI loves him
1:14 PM · Aug 23, 2019
காஷ்மீரில் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை உடனே விடுவிக்க வலியுறுத்தி திமுக ஏற்பாட்டில் டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அனைத்து அரசியல் தலைவர்கள், நிர்வாகிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டதில் திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், சமாஜ்வாதி கட்சி, ராஷ்டிரிய ஜனதா தளம், தேசிய மாநாட்டு கட்சி, லோக்தாந்த்ரிக் ஜனதா தளம் உள்ளிட்ட 15 கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கெடுத்தனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்த கட்சிக்கு தலா பத்து பேர் வந்து இருந்தால் கூட 150 பேராவது இருந்து இருப்பார்கள். பத்திரிகையாளர்களைவிட குறைவாக வந்த கூட்டத்தையே பார்த்து மாபெரும் வெற்றி என்பது நகைப்புக்குரியது
சொன்னால் நம்பணும்!  என்னுடைய ஆச்சரியம் விகடன் புருடாவில் அல்ல! இதையும் நம்பிப் பகிர 224 இளிச்சவாயர்கள் தமிழகத்தில் தான் இருக்கிறார்கள் என்பதில்தான்! 

மீண்டும் சந்திப்போம்.

No comments:

Post a Comment

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)