Monday, August 5, 2019

தேசமே பெரிது எனக் காட்டிய நல்லதொரு துவக்கம்!

ஜம்மு காஷ்மீர் விவகாரங்களில் நரேந்திர மோடி அரசு நல்லதொரு மாற்றத்துக்கான துவக்கத்தை இன்று நாடாளு மன்றத்தின் இரு அவைகளிலும் தொடங்கி வைத்து, சற்றுமுன் மாநிலங்களவையில்  வாக்கெடுப்பிலும் வெற்றி பெற்றிருக்கிறது. சூட்டோடு சூடாக   நமது வெளியுறவுத்துறை அமைச்சகமும் அமெரிக்கா பிரிட்டன் பிரான்ஸ் சீனா ரஷ்யா இந்த P5  நாடுகளுக்கும் ஆர்டிகிள் 370. 35A தொடர்பாக  ஒரு Briefing இல் தெளிவுபடுத்தி இருக்கிறது என்கிறது செய்தி. பாகிஸ்தானை ஒருபொருட்டாகவும் எடுத்துக் கொள்ளவில்லை தகவலும் சொல்லவில்லை என்பது கூடுதல் செய்தி . 



இது சாதாரணமான நடைமுறைதான்! ஆனால் நமக்கு இன்று நாடாளுமன்றத்தில் என்ன நடந்ததென்பது கொஞ்சம் புரிகிற மாதிரி யாராவது சொல்ல வேண்டாமா? அரசுக்கு எதிர்க்கருத்து சொல்வதையே பிழைப்பாக வைத்துக் கொண்டு இருக்கும் The Print தளத்தில் இருந்தே பார்க்கலாமா?


இந்த விவகாரத்தில் மிகவும் வேடிக்கையானது என்ன என்றால் J &K Reorganisation Bill பிஜேபிக்கு போதுமான எண்ணிக்கை இல்லாத மாநிலங்களவையில் முதலில் தாக்கல் செய்யப்பட்டு, எதிர்க்கட்சிகள் வழக்கம்போலக் கூச்சலும் குழப்பமும் செய்ய முயற்சித்தது பலிக்காமல் விவாதமும் நடந்து, மசோதாவை ஏற்கலாமா வேண்டாமா என  வாக்கெடுப்பும் நடந்ததில் அரசுக்கு ஆதரவாக 125 எதிர்த்து 61 வாக்குகள் கிடைத்து மசோதா அமோகமாக   நிறைவேற்றப்பட்டிருக்கிறது! லோக்சபாவில் நாளைக்குத்தான் இந்த மசோதா விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவிருக்கிறது. பதிவர் உண்மைத் தமிழனுக்கு அதெப்படி லோக்சபாவில் தாக்கல் செய்யாமல் முதலில் இங்கே தாக்கல் செய்தார்கள் என்ற கோபம்! முகநூல் பகிர்வில் கொஞ்சமாகப் பொங்கியிருக்கிறார்.    

இதுவொரு அரசியல் பகிர்வாய் மாற்றப்படும் என்று தெரிந்து இருந்தால் போகன் வஜனகவுஜ எழுதுவதையே விட்டு விடுவாரோ? #டவுட்டு   

உத்தமக்கூட்டுக்களவாணிகள் தனித்து விடப்பட்டார்களோ?

 

Banu Gomes
ராஜ்ய சபாவில் ..காஷ்மீர் தொடர்பான அனைத்து மசோதாக்களும் ...வெற்றிகரமாக நிறைவேறியது.
கூடுதலாக 10 % இடஒதுக்கீடு மசோதாவும் நிறைவேற்றப் பட்டிருப்பது கவனிக்க தக்கது.
இந்தியாவுடனான காஷ்மீரின் முழுமையான இணைப்பு நிறைவேறிய நாள்.
நேருவின் பெரும் பிழை ..திருத்தப்பட்ட நாள்.
ஒரு அரசியல் கட்சியாக பிஜேபி ...தங்களுடைய தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியை வெற்றிகரமாக நிறைவேற்றிய நாள்.


டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி சரியாகத்தான் சொல்லி இருக்கிறார், என்னவென்றே விவரம் இங்கே  


Now Namo Govt must withdraw the Petition filed by Nehru in the UNSC seeking UN intervention in Kashmir. The Petition was filed with Cabinet approval hence illegal
7:25 PM · Aug 5, 2019TweetCaster for iOS
சுவாமிக்கே பிழைதிருத்தமா? ஆனால் அதுவும் வேண்டித்தான் இருக்கிறது என்றால் என்ன சொல்வது?

Replying to
Dr. Swamy39 jee: Typo in your last tweet.. "The Petition was filed WITHOUT Cabinet approval, hence illegal.."
7:32 PM · Aug 5, 2019TweetDeck  

மீண்டும் சந்திப்போம்.
     

No comments:

Post a Comment

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)