Showing posts with label கொஞ்சம் சினிமா. Show all posts
Showing posts with label கொஞ்சம் சினிமா. Show all posts

Sunday, March 8, 2020

கொஞ்சம் சினிமா! கொஞ்சம் விமரிசனம்! பாவம் அரசியல்!

ஜிப்சி! படம் என்பதைவிட எழுத்தாளர் ராஜு முருகனுடைய லேட்டஸ்ட்  இடதுசாரிக் கிறுக்குத்தனம் என்றே சொல்லிவிடலாம்! கிறுக்குத்தனத்தின் உச்சம்! படத்தை ப்ரொமோட் செய்வதற்காக யூட்யூபில் உசுப்பேத்துகிற வீடியோக்களாகப் போட்டுக்கொண்டே வந்து கடைசியில் சரக்கு எதுவுமில்லை என்பதைத் தாங்களே வெளிப்படுத்திக் கொண்டதுதான் மிச்சம் போல! ப்ளூ சட்டை மாறன் இந்த  5 நிமிட வீடியோ விமரிசனத்தில் கிழித்திருக்கிறார்.

   
இந்த விமரிசனம் கொஞ்சம் அதிகமாகவே  டேமேஜ் செய்திருக்கும் போல! பல இடங்களிலிருந்தும் எதிர் வினைகள் வந்துகொண்டே இருக்கின்றன. வெறும் கோஷங்களையே முழுநீளப் படமாக எடுத்தால் என்ன ஆகுமாம்? நானும் நீண்டகாலமாகவே பார்த்து வருவதில், இந்திய இடதுசாரிகளுக்கு அரசியல் தான் சரிப்பட்டு வரவில்லை என்றால், சினிமா, நாடகம் கூடக் கைகொடுக்க மாட்டேனென்கிறதே! ஜனங்களுக்கு அண்ணாயிசம் கூடப்புரிந்துவிடும் போல! ஆனால் இடதுசாரிகள் என்னதான் சொல்ல வருகிறார்கள் என்பதைப் புரிய வைக்கவே முடியாதோ?  இடது சாரிகளைத் தொட்டுப் பேசிய ஏதாவது ஒருபடம் நினைவுக்கு வருகிறதா? கொஞ்சம் சொல்லுங்கள்! இத்தனைக்கும் கலை, இலக்கியம் எல்லாம் மக்களுக்காகவே என்று எழுத்தாளர் சங்கம், கிராமிய இசைக்குழு, என்று ஏகப்பட்ட புரட்சிகர முன்னெடுப்புக்களைத் தொடர்ந்து  செய்துவருகிற இடதுசாரிகளுக்கு, ஒரு சின்ன விஷயத்தைக் கூடக் குழப்பமில்லாமல் சொல்ல முடியவில்லையா? கடலை உருண்டையில் கூட சர்வதேசியம் பேசியவர்கள், இப்போது சரவதேசியத்தைக் கைவிட்டு லோக்கல் பாலிடிக்ஸ் ஒன்லி என்று இறங்கிவந்தும் கூட, இப்படி சறுக்கிக் கொண்டே வருகிறார்கள் என்றால் ....?

ராஜூமுருகனுடைய ஜிப்சி படத்தைப் பற்றியதே அல்ல இந்த விமரிசனம் என்பது நண்பர்களுக்குப் புரிந்தே இருக்கும் இல்லையா? காலாவதியாகிப் போன இந்திய இடதுசாரிகள், காங்கிரஸ் மாதிரிக் கரிக்கட்டையாக மறுபடி உயிர்த்தெழ முடியாத அளவுக்குப் போய் விட்டார்களே என்பது தான் என் விசனமாக! 


சினிமா மாயையை விட திராவிட மாயை ஆபத்தானது! இப்படிச் சொல்வதற்குக் கூட விடாமல் டாக்டர் கிருஷ்ணசாமியை புதியதலைமுறை சேனலின் கார்த்திகேயன் குறுக்கே விழுந்து மறிப்பது வேடிக்கை! டாக்டர் கிருஷ்ணசாமியோ அவருடைய புதிய தமிழகம் கட்சியினரோ  குறையில்லாத, விமரிசனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்லதான்! ஆனால் இவருக்குக் கொடுக்க வேண்டிய குறைந்தபட்ச கவனத்தைக் கூட தமிழக அரசியல் களத்தில்  கொடுக்கவில்லை என்பது தற்செயலானது அல்ல. எதற்கெடுத்தாலும் பாமகவுடன் ஒப்பீடு, மோதுவதில் மட்டுமே குறியாக இருக்கும் திருமாவளவன்  தன்னை தலித் சமூகத்தின் ஏகப் பிரதிநிதியாக  பொசிஷன் செய்துகொள்வதற்கு இங்குள்ள ஊடகங்களும், கழகங்களும் துணையாக இருந்தார்கள்! அதன்பின்னாலும் ஒரு அரசியல் இருந்தது.

    
முகநூலில் இந்தப்புத்தகத்தைப் பற்றிய ஒரு விரிவான அறிமுகக்குறிப்பை வாசித்தேன். இந்த வருடம் வாசிக்க வேண்டிய புத்தகங்களின் பட்டியலில் உடனே சேர்த்துக் கொள்ள வைத்த ஒரு அறிமுகம். 


நிவேதிதா லூயிஸ் தனது முதல் பெண்கள் புத்தகத்தைப் பற்றிப் பேசுகிறார் . வீடியோ 58 நிமிடம். 
சென்னை மைத்ரி புக்ஸ் வெளியீடாக 224 பக்கங்களில் ரூ.200/-

மீண்டும் சந்திப்போம். 

Thursday, March 5, 2020

ச்சும்மா ஜாலிக்கு! கொஞ்சம் சினிமா! கொஞ்சம் உரத்த யோசனை!

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்! துல்கர் சல்மான் படம்! அவருக்கு இது 25வது படமாம்! ஒரு படு அபத்தமான கதைக்களம். படம் பார்த்த மோசமான அனுபவத்தை விட, மிகக் கொடுமையாக  துல்கர் சல்மான் இந்தப்படத்தைப் பற்றிப் பேசிய இந்த 14 நிமிட வீடியோ இருந்தது! துல்கர் ரொம்ப எமோஷனலாகப் பேசினார் என்கிறது வீடியோவுக்குக் கொடுத்திருக்கிற தலைப்பு! துல்கர் சல்மானுக்கு மட்டுமல்ல, அப்பா மம்மூட்டிக்குமே கூட கதையைத் தேர்ந்தெடுத்து நடிக்கத் தெரியவில்லை. அவருடைய சமீபத்தைய படமான ஷைலக் மிகப்பெரிய சொதப்பல்! ஒருகாலத்தில் மம்மூட்டி எனக்குப் பிடித்த நடிகராக இருந்தார். இப்போதோ அவர்  கௌரவமாக ரிடையர் ஆகியிருக்கலாம் என்று தோன்றுகிற மாதிரியான படங்களில் நடித்துத்தள்ளிக் கொண்டிருக்கிறார்! 


கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் துல்கருக்கு ஜோடி ரிது வர்மா! இவரையும், விஜய் தேவரகொண்டாவையும் பெள்ளி சூப்புலு தெலுங்கு ஹிட்  படத்தில் பார்த்ததற்கு அப்புறம் சரியான படங்கள் எதுவும் அமையவில்லை. இந்தப்படமும் சேர்த்துத் தான்! இரண்டாவது கதாநாயகியாக நடித்திருக்கும் நிரஞ்சனா அகத்தியன் கதாபாத்திரம் கொஞ்சம் மனதில் நிற்கிறது என்று நினைத்ததாலோ என்னவோ முகநூலில் இவருடைய பக்கம் suggestion இல் அடிக்கடி வருகிறது! இனிமேல் சினிமா பார்த்த கொஞ்ச நாட்களுக்கு முகநூல் பக்கம் போகாமல் இருக்க வேண்டுமோ?  அவ்வளவு படுத்துகிறார்கள்!  

லாலேட்டனின் பிக் பிரதர் ட்ரெய்லர் 


   
பாமரன் பக்கங்கள்  வலைப்பதிவர்தான்! கூகிள் ப்ளஸ் போனதில் தொடர்பு சுத்தமாக விடுபட்டுப்போன பல அருமையான இணைய நண்பர்களில் ஒருவர். இப்போது முகநூலில் கலக்கிக் கொண்டிருக்கிறார்! நாலுவரியில் மோகன்லால் நடித்த பிக் பிரதர் படத்துக்கு இத்தனை கனகச்சிதமாக விமரிசனம் எழுதிவிட முடியுமா என்ன? சரியாகத்தான் எழுதியிருக்கிறார் என்றாலும் ஒரு ஆவலாதிக்குப் படம் பார்த்தாயிற்று! மம்மூக்கா, மகன் துல்கர் இருவருடைய சமீபத்தைய திரைக்காவியங்களைப் பார்த்தபிறகு, பார்த்ததாலோ என்னவோ அவைகளுக்குக் கொஞ்சம் தேவலை என்று தான் தோன்றியது! மல்லுதேசத் திரைப்படங்களுக்கு  என்ன ஆகிக் கொண்டிருக்கிறது என்றே புரியவில்லை! மல்லுத் திரையோரம் என்று மல்லுப் படங்களுக்காகவே ரசனையோடு  புத்தகம் எழுதிய பண்பாளர் ஆசீப் மீரான் ஐயாவிடம் கேட்கலாமென்றால் கூகிள் ப்ளஸ்ஸோடு விடுபட்டுப் போன தொடர்புகளில் அவரும் ஒருவர்! 

,  

ஆகக் கூட்டிக் கழித்துப் பார்க்கையில் சமீபத்தில் பார்த்த படங்களில்  அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் நடித்து வெளி வந்த  ஓ மை கடவுளே! தான் கொஞ்சம் சகித்துக் கொள்கிற மாதிரி நல்ல படமாக இருந்தது என்று ஒருமனதாக முடித்து விடலாமா? விஜய் சேதுபதி இந்தப்படத்தில் தேவையே இல்லாத எக்ஸ்டரா லக்கேஜ் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்து விட்டு, அப்படியே சொல்லியும் விடலாம்! ஒருபேச்சுக்காகக் கேட்கிறேன், இந்தப்படம் எத்தனை நாட்கள் தியேட்டரில் ஓடியதாம்!!

மீண்டும் சந்திப்போம்.                

Saturday, December 7, 2019

கொஞ்சம் பாட்டு! நெஞ்சம் நிறைய வாழ்த்து!

கறுப்புப்பணம் திரைப்படத்தில் இந்தப்பாடலைக் கேட்டு ஆடாதவர்களே கிடையாதென்றால் நம்ப முடிகிறதா? படத்தில் பாடுவது செம்மீன் ஷீலா என்பது இன்னொரு அதிசயம்!


லூர்து மேரி ராஜேஸ்வரி! பரமக்குடி பக்கம் இளையான்குடி தான்   பூர்வீகம். அம்மா ரெஜினா மேரி நிர்மலா ஜெமினி ஸ்டுடியோவில்  கோரஸ் பாடிக் கொண்டிருந்தவர். தாயுடன் கூடப் போன லூர்து மேரிக்கும் கோரஸ் பாடுகிற வாய்ப்புக்  கிடைத்ததில் ஆச்சரியமில்லைதான்! மனோகரா (1954) திரைப்படத்தில் ஜிக்கி பாடிய ஒருபாட்டில் தாயும் மகளுமாக கோரஸ் பாடினார்கள்  ஏற்கெனெவே M S ராஜேஸ்வரி என்றொரு பாடகி இருந்ததனால் L R ஈஸ்வரியானார், வெறுமனே கோரஸ் பாடிக்  கொண்டிருந்தவருக்கு 1958 இல் கே வி மஹாதேவன்தான் முதன்முதலாகத் தனிப் பாட்டுப் பாடுகிற வாய்ப்பைக் கொடுத்தது! இவரேதான் அவரு! அவரேதான் இவரு! இந்தப்பாடல் இடம் பெற்ற படம் நல்ல இடத்து சம்பந்தம்


அடுத்த சான்ஸ் 1959 இல் நாலுவேலி படத்துக்காக திருச்சி லோகநாதனுடன் சேர்ந்து இந்தப்பாடலைப் பாடக் கிடைத்தது.


ஆனால் தனியாக அடையாளம் காட்டுகிற பாடலுக்காக அவர் 1961வரை காத்திருக்க வேண்டிவந்தது.


பாசமலர் திரைப்படத்தில் பாடிய  வாராயோ தோழி வாராயோ பாடல்தான் இவருக்கு கிடைத்த முதல் ஹிட்! மெல்லிசை மன்னர்கள் இசை அமைப்பில் பாட ஆரம்பித்தவர்  அடுத்த இருபது வருடங்களுக்குக் கொடி கட்டிப் பறக்கிற பாடகியாகவும் ஆனார். 
                                                    
                                                                  
முத்துக் குளிக்க வாறீகளா? ஒரு உச்சமென்றால் எலந்த பயம் இன்னொரு உச்சம்!


அம்மனோ சாமியோ அத்தையோ மாமியோ!


எண்பதுகளின் ஆரம்பம்,  திரைப்படங்களில் பாடுகிற வாய்ப்பு குறைந்தபிறகும்  கூட மாரியம்மன் பாடல்கள் என்று பாடிக் கொண்டு ஆக்டிவாகத்தான் இருக்கிறார் மேடைகளில்  தனது கனத்த சரீரத்துடன் அம்மனோ சாமியோ பாடலை ஆட்டத்துடன் பாடுவதைக் கண்டு பயந்து போனவர்களும் ஏராளம்! 


என்ன இன்றைக்கு திடீரென்று L R ஈஸ்வரி புராணம்?

7/12/1939 இல் பிறந்த L R ஈஸ்வரிக்கு  இன்று எண்பது வயது ஆகிறது. எத்தனையோ பாடகர்கள் வந்து கொண்டே இருக்கிற இன்றையதினத்திலும் கூட அவரது இடத்துக்குப் பக்கத்தில் எவராலும் முடியவில்லை. 

இசையால் ரசிகர்களைக் கட்டிப்போட்டவருக்கு இதயம் கனிந்த  நல்வாழ்த்துக்களைச் சொல்வோம்!  

Wednesday, November 13, 2019

கொஞ்சம் சினிமா! Official Secrets! திரை விமரிசனம்.

உண்மையாகவே நடந்த சம்பவங்களை வைத்துப் படம் எடுத்தால் அது ஓடுமா என்ற கேள்விக்கு அதில் எந்த அளவு உண்மை சொல்லப்படுகிறது என்பதில்,  பார்வையாளர்கள் அதை எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதில் தான் பதில் இருக்கிறது இப்படி என்னுடைய அபிப்பிராயத்தை உறுதிசெய்த திரைப்படம் Official Secrets 



பொதுவாக அமெரிக்க ஊடகங்கள்,  திரைப்படங்கள், அரசுக்குத் தர்மசங்கடமான சங்கதிகளை வெளியிடத் தயங்குவதே இல்லை என்றாலும் பழமைவாதிகளான பிரிட்டிஷ் ஊடகங்கள் அவ்வளவு துடிப்பாக இருப்பது மிக மிக அரிது. அப்படி அரிதான ஒரு உண்மை நடப்பை வைத்துக் கொஞ்சம் கூட விறுவிறுப்புக் குறையாத படமாக எடுத்திருக்கிறார்கள். 


ஜனங்களிடம் எந்த அளவுக்கு எடுபடும் என்பது தெரியாமல் தானோ என்னவோ இந்தப்படத்தை  2019 ஜனவரியில் ஒரு அமெரிக்கத் திரைப்பட விழாவில் திரையிட்டுக் காண்பித்துவிட்டு, அப்புறம் ஆகஸ்ட் மாதக் கடைசியில் அமெரிக்காவிலும், இரண்டு மாதம் தள்ளி பிரிட்டனில் அக்டோபரிலும் வெளியிட்டிருக்கிறார்கள். ஆனாலும், திரைப்படம் விமரிசன ரீதியாகவும் வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

கதையில் நடந்ததென்ன? The true story of a British whistleblower who leaked information to the press about an illegal NSA spy operation designed to push the UN Security Council into sanctioning the 2003 invasion of Iraq. இதுதான் ஒன்லைனர்.


இந்த இரண்டரை நிமிட வீடியோவில்   2003 இல் ஈராக் பயங்கர ரசாயன அழிவு ஆயுதங்களைக் குவித்து வருவதாக அமெரிக்கா ஈராக் மீது படையெடுத்து சதாம் ஹுசேனைத் தூக்கிலிட்டது சொல்லப்படுகிறது 

General Communications Head Quarters GCHQ என்பதான பிரிட்டிஷ் உளவு அமைப்பில் பணியாற்றுகிற காதரின் ட்ரெசா கன் பார்வைக்கு ஒரு ரகசிய மெமோ வருகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளை  (பல்வேறு நாட்டவர்கள்) உளவு பார்ப்பதில் அமெரிக்க NSAவுடன் பிரிட்டனும் சேர்ந்து ஈடுபட்டிருப்பதில் அவர்களை அமெரிக்கத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு பிளாக்மெயில் செய்யவும் தயாராக வேண்டுமென்கிற  தகவல் இருக்கிறது. ஈராக் மீது போர்தொடுப்பதற்கு அமெரிக்கா பொய்யான காரணங்களை உருவாக்குவதற்கு டோனி பிளேர் பிரதமராக இருந்த அன்றைய பிரிட்டிஷ் அரசும் உறுதுணையாக இருந்தது பொறுக்காமல் காதரின் அந்த ரகசிய மெமோவை பத்திரிகைகளுக்கு லீக் செய்துவிடுகிறார்.

அமெரிக்காவின் ஈராக் மீதான படையெடுப்பை  இந்த லீக் தடுக்கவில்லை என்றாலும் அமெரிக்கா, பிரிட்டன் இருநாட்டு அரசுகள் மீதும் இந்தச் செய்திக்கசிவு ஒருமாதிரியான  களங்கத்தை ஏற்படுத்தியதென்றால் சும்மா விடுவார்களா? கசிய விட்டது யார் என்கிற விசாரணையில் காதரின் ட்ரெசா கன் சிக்குகிறார். Official Secrets Act இன் கொடூரமான பிரிவுகள் அவரைச் சுற்றி வளைக்கின்றன. 

அடுத்த சில மாதங்கள் அவருடைய சொந்த வாழ்க்கை தோண்டித் துருவப்படுகிறது. தைவானில் பிறந்தவர்  (பிரிட்டிஷ் தாய்தந்தையர்) ஒரு துருக்கி  குர்திஷ் இஸ்லாமியரைத் திருமணம் செய்து கொண்டவர் இப்படி     மன உளைச்சலை அதிகப் படுத்துகிற மாதிரியே விசாரணை போய்க் கொண்டிருப்பதில் காதரின் வழக்கறிஞர்களுடைய உதவியை நாடுகிறார். வழக்கு விசாரணைக்கு வருகிற சமயம் அரசு தரப்பு குற்றத்தை நிரூபிப்பதில் இருந்து பின்வாங்குகிறது. விசாரணை கைவிடப்பட்டு காதரின் குற்றமற்றவர் என்று விடுதலை செய்யப் படுகிறார்.
Katharine Gun was sitting at her desk at the UK intelligence agency, GCHQ, when she received the email that would change her life.

It was a Friday in the British winter, in February 2003 . The sender of the mysterious message was one Frank Koza , then a member of the United States National Security Agency (NSA).

Its content horrified who was a simple 28-year-old translator: the Americans asked GCHQ for their cooperation to spy on the delegations of the six countries that at that time were non-permanent members of the United Nations Security Council (UN), Angola, Cameroon, Chile, Mexico, Guinea and Pakistan.The secret campaign - which involved intercepting domestic and official telephones, as well as emails - was aimed at winning votes in favor of the war against Iraq யாருடைய பார்வைக்கு அனுப்புகிறோம் என்றே இல்லாமல் பொத்தாம்பொதுவாக அதுவும் ஒரு அமெரிக்கனிடமிருந்து  உத்தரவாக வந்தால், ஒரு பிரிட்டிஷ் பிரஜைக்குக்  கோபமும் வரவேண்டும் இல்லையா? காதரீனுக்கு கோபம் வருகிறது. ரகசிய மெமோ கசியவிடப் படுகிறது, Official Secrets வெளியே கசியலாமா? அப்புறம் என்னென்ன நடக்கும்?  இதையே ஒரு கோர்வையாக, திரைப் படமாகக் காட்சிப்படுத்தினால் இப்படித்தான் காட்சிகள் விரியும் இல்லையா!

இந்தக்கதையை 2016 வாக்கிலேயே அமெரிக்க நடிகர்களை வைத்துப் படமாக்க முயற்சி செய்து கைவிட்டிருக்கிறார்கள். 2018 இல் கேவின் ஹூட் என்கிற தென்னாப்பிரிக்க இயக்குனர், இதைக் கையில் எடுத்து பிரிட்டிஷ் நடிகர்களையே நடிக்க வைத்துப் படமாக்கியிருக்கிறார். 

கசிய விட்ட விஷயம் The Observer பிரிட்டிஷ் நாளிதழில் இப்படி வெளியானதாம்! உளவாளிகளின் கதை என்றால் ஜேம்ஸ் பாண்ட் பட டெம்பிளேட் மாதிரி அதிரடி திருப்பங்கள், சேசிங், சண்டைக்காட்சிகள் என்றுதான் இருக்க வேண்டுமா என்ன? Official Secrets மாதிரி மெதுவாகக் கதைக்களத்தை விரித்து, அலுப்புத் தட்டாமல் கூட இருக்க முடியும்! அந்த வகையில் பார்க்க வேண்டிய படம் என்றே நான் பரிந்துரைப்பேன்!

எங்கே பார்ப்பது என்பது தேடத் தெரிந்தவர்களுக்குக் எளிதில் கிடைக்கிற விஷயம். நான் சொல்லித் தான் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

மீண்டும் சந்திப்போம்.            

Friday, August 30, 2019

ச்சும்மா ஜாலிக்கு! கொஞ்சம் சினிமா! கொஞ்சம்போல விமரிசனம்!

ச்ச்சும்மா ஜாலிக்கு என்று ஆரம்பித்தாலும், பதிவின் முக்கியமான செய்தியே வேறு! என்னவென்று கண்டுபிடிக்க முடிகிறதா பாருங்கள்! இன்றைக்கு இரண்டு படங்கள், அதுவும் மிகப்பழைய படங்களை விமரிசனத்துக்கு எடுத்துக் கொள்ளப்போகிறோம்! விமரிசனம் என்றால் மிகச்சிறியதாக மட்டுமே! பயம் வேண்டாம்! 😂😱🙏  


ரிலீசாகி 71 வருடங்களை நிறைவு செய்யப்போகிற சபாபதி என்கிற நகைச்சுவைப் படத்தை இன்று பார்த்தாலும் கூட, வாய்விட்டுச் சிரிக்காமல் இருக்க முடியாது என்பது நான் தரும் காரண்டீ! மேலே சாம்பிளுக்குக் காட்டுகிற 39 நிமிட ஒளித் துண்டைப் பார்த்தீர்களானால் என்னைப்போல நீங்களும் கூட காரண்டீ கொடுப்பீர்கள்! 

சபாபதி! இது கதாநாயகன் TR ராமச்சந்திரன், அவரது வேலைக்காரன் காளி N ரத்தினம் இருவருக்கும் ஒரே பெயர்! கதாநாயகன் வசதியான, படிப்பில் கொஞ்சமும் அக்கறை காட்டாத, நண்பர்களோடு சீரியஸாக  லூட்டி அடிக்கிற ரகம்! வேலைக்காரன் படிப்பறிவே இல்லாத சொன்னதைச் சொன்னபடி செய்கிற தற்குறி! சொற்படி கேட்பது நல்லது தானே என்கிறீர்களா? சோடா உடைத்துக் கொண்டுவா என்று எஜமானன் சொன்னால் குண்டு சோடா பாட்டிலை சுத்தியலால் உடைத்துத் தட்டில் வைத்துக் கொண்டு வருகிற ரகம்! இப்படிக் கதாநாயகனும் வேலைக்காரனுமாக லூட்டி அடித்துக் கொண்டிருந்தால் எப்படி? கூடவே காமெடி லூட்டி அடிப்பதற்காக தமிழாசிரியர் சின்னசாமி முதலியாராக வரும்  K சாரங்கபாணி முதல் தோசை ராமன் என்கிற சின்னக் கேரக்டர் (நடித்தவர் பெயர் தெரியவில்லை) வரை ஒரு சின்னப் பட்டாளமே காமெடி செய்து கலக்குகிறது. 

படிப்பில் மந்தமான அம்மா செல்லம் கொடுத்துக் கெடுத்த மந்தபுத்தியுள்ள கதாநாயகனுக்கு கல்யாணம் செய்து வைக்கிறார்கள். பெண் சிவகாமு (R பத்மா)   நன்றாகப் படிக்கிறவள். கதாநாயகன் திருமணமான பின்னும் கூட அதே மாதிரிப் பொறுப்பில்லாதவனாகத் தான் இருக்கிறான். கதா     நாயகி வீட்டு வேலைக்காரி குண்டுமுத்து (CT ராஜகாந்தம்) வேலைக்காரன் சபாபதியோடு காதலாகிறாள். இந்த இருபெண்களும் எப்படித் தங்கள் கணவன்மார்களை common sense உள்ளவர்களாக மாற்றுகிறார்கள் என்பதுதான் கதை. கதாநாயகன் வெற்றிகரமாக பள்ளிப்படிப்பை பாஸ் .செய்து முடித்து விடுகிறான். வெறும் நாற்பதாயிரம் ரூபாய் பட்ஜெட்டுக்குள் மொத்தப்படமும் முடிந்து AV மெய்யப்ப செட்டியாருக்குக் காசை அள்ளிக்  கொடுத்த படம் இது. படத்தில் PA பெரியநாயகி பாட வயலின் மிருதங்கம் இவற்றையும் பெண்களே வாசிக்கிற மினிகச்சேரி படத்தின் இன்னொரு ஸ்பெஷல் பம்மல் சம்மந்த முதலியார் 1908 இல் எழுதிய முதல் கதை என்பது கூடுதல் விசேஷம். யூட்யூபிலேயே தேடினால் முழுப்படமும் நல்ல பிரிண்டில் கிடைக்கும். 


சபாபதி படம் கொடுத்த வெற்றி, தெம்பில் AV M செட்டியார் அதேபோல இன்னொரு காமெடிப்படத்தைத் தயாரிக்க விரும்பி எடுத்த படம்  என் மனைவி 1942 இல் வெளியான படம் K சாரங்கபாணி மனைவி மீது சந்தேகம் கொள்வதில் எழுகிற சம்பவங்களைக் காமெடியில் கோர்த்து எடுத்த படம். ஒரு மராத்தி கதையை பட இயக்குனரே திரைக்கதை எழுதி எடுத்த படம்  12 பாடல்கள் என்று வஞ்சனையே இல்லாமல் பாடல்களோடு வந்த படம்.

  
சங்கடமான சமையலை விட்டு சங்கீதம் பாடப்போறேன் என்ற இந்தப்படப்பாடல் மிகவுமே பிரபலமானதாக இருந்ததாம்.


அறுபது வயது முதியவரான இந்தப் பழம்பெரும் கிழம் சாரங்கபாணி எந்தச் சிங்காரியை ஒய்யாரியை மயக்க இப்படித் தன்னை அலங்கரிக்கிறது என்று தான் தெரியவில்லை! என்ற குறிப்போடு நாம் இருவர் படத்திலிருந்து இந்த அரைநிமிட வீடியோவை வலையேற்றிய Kandasamy SEKKARAKUDI SUBBIAH PILLAI அதிசயிக்கிறார் பாருங்கள்! அதுதான் இந்தப்பதிவில் பேச வந்த முக்கியமான சங்கதி!

கும்பகோணத்துக்காரரரான கே சாரங்கபாணி 1904 இல் பிறந்தவர். இசை வேளாளர். நாடகத்துறையிலிருந்து சினிமாவுக்கு வந்தவர்.கலைவாணர் NS கிருஷ்ணனைப் போல பன்முகத்திறமை கொண்டவர். 1935 இல் நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை தயாரித்த பக்த ராம்தாஸ் படத்தில் தான் திரைப்பட அறிமுகம். பெரும்பாலும் நகைச்சுவை பாத்திரங்களிலேயே நடித்திருந்தாலும், சில படங்களில் கதாநாயகனாகவும், வில்லனாகவும் கூட  நடித்திருக்கிறார். எண்பது வயது வரை வாழ்ந்த கே சாரங்கபாணி நடிகர் தியாகுவின் தாத்தா என்பது தெரியுமோ? 


தில்லானா மோகனாம்பாள் படத்தின் இந்த கிளிப் சாரங்க பாணி பாவத்தோடு தவில் வாசிப்பதில் இருந்துதான் ஆரம்பம்.

Randor Guy என்ற புனைபெயரில் சினிமா விஷயங்களை மிக சுவாரசியமாக எழுதுகிற எழுத்தாளர் கே  சாரங்கபாணி பற்றியும்  சில  தகவலைச் சொல்கிறார். 

Sarangapani played 10 roles in a short film known in those days as ‘farces,’ which was screened along with the main movie. In some cases, the farces were more interesting than the main film! Sarangapani even played female roles in the ‘Milagaipodi’ farce! (Milagaipodi means red chilli powder!) His very first appearance in the farce was a hit, as he was already a noted theatre comedian.   

ஒரு நல்ல கலைஞனை நினைவு படுத்திக் கொள்வதற்காக.

மீண்டும் சந்திப்போம். 
  

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)