Wednesday, February 19, 2020

#அரசியல்களம் கொஞ்சம் #செய்தி கொஞ்சம் #விமரிசனம்

முந்தைய பதிவில் பிரசாந்த் கிஷோர் என்கிற குழம்பிய அரசியல் குட்டையில் ஆதாயம் தேடுகிற நபரைப் பற்றி கொஞ்சம் பேசியிருந்தேன். அர்னாப் கோஸ்வாமி நேற்றைய விவாதமொன்றில் பிரசாந்த் கிஷோர் பீகாரில் புரட்சிசெய்யக் கிளம்பியிருப்பதைக் குறித்துப் பேசியிருக்கிறார். வீடியோ 17 நிமிடம்

   
பீகாரில் நிதீஷ் குமார் கொஞ்சம் தெளிவான அரசியல் செய்யத் தெரிந்தவர்! பிஜேபியுடன் கூட்டு சேருவதும் விலகியிருப்பதும் இப்படி இரண்டுவிதமாகவும் இருந்து பார்த்தவர். பிரசாந்த் கிஷோர் என்ன செய்துவிட முடியும் என்பதையும் தெளிவாக அனுமானிக்க முடியாதா? பிஜேபி JDU கூட்டணிக்கு எதிராக மறுபடி மஹாகட் பந்தன் என்ற மாயையை மறுபடியும் கையில் எடுத்தால் இருகட்சிகளாலும் சமாளிக்க முடியாதா? இப்படி எத்தனை எத்தனை கேள்விகளை இப்படியும் அப்படியுமாக எழுப்பினாலும் விடை என்னவோ பிடிபடாமல் நழுவுகிற மாதிரித்தான் இப்போதைய நிலவரம் இருக்கிறது.  பிரசாந்த் கிஷோர் செயல்படும் விதம் வெளிப்படையாக எவருக்கும் புரிவதில்லை என்பதால் வெற்று ஊகங்களை மட்டுமே பார்க்க முடிகிறது.


அதென்னவோ மான்டெக் சிங் அலுவாலியா மாதிரி காங்கிரஸ் அரசில் 10 ஆண்டுகளாகத் திட்டக்கமிஷன் துணைத்தலைவராக இருந்தவர் புத்தகம் எழுதினாலும். ராகேஷ் மரியா மாதிரி முன்னாள் மும்பை போலீஸ் கமிஷனர் புத்தகம் எழுதினாலும், காங்கிரஸ்கட்சி மீது செந்தட்டி தடவுகிறமாதிரி ஆகிப்போவதே தொடர்ந்து வரும் பரிதாபம்! காங்கிரஸ் இனிமேல் ஆட்சிக்கு வரவே வராது என்றாகிப்போன நிலையில் ராகேஷ் மரியா மாதிரி போலீஸ் அதிகாரிகள் Let me say it now என்று புத்தகம் எழுதி முன்னாள்#?# பானாசீனாவின் காவி பயங்கரவாதம்  என்பதான அபத்தக் குற்றச்சாட்டு எவ்வளவு கற்பனையானது, ஜோடிக்கப்பட்டது என்று உடைத்துச் சொல்கிற அளவுக்குப் போயிருக்கிறது.

ராகேஷ் மரியா 2008 நவம்பர் 26 அன்று மும்பை மீது   இஸ்லாமிய பயங்கரவாதிகள் நடத்திய கொலை வெறித் தாக்குதல்களுக்கு ஹிந்துக்களே காரணம் என்ற மாதிரி ஜோடனைகளுடன் வந்தனர் என்பதை மட்டும் தான் சொல்கிறார். டாக்டர் சுப்ரமணியன் சுவாமி சொல்கிறபடி ஒரு தீவீர விசாரணைக்கு உத்தரவிடப்படுமானால், உள்நாட்டில் எவரெவர் பாகிஸ்தானிய தீவீரவாதிகளுக்கு உடந்தையாக இருந்தார்கள் என்பதும் வெளியே வரலாம்.    

ஷாஹீன் பாக் போராட்டத்தை ‘மக்களின் உரிமை’ என்று உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இது பற்றிய வழக்கில் பின்வருமாறு குறிப்பிட்டு உள்ளது: ‘ஜனநாயகம் பல்வேறு வகைகளில் வேலை செய்கிறது. நீங்கள் போராட வேண்டுமா, தாராளமாக செய்யுங்கள். CAA பற்றிய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு காத்திருக்க உங்களுக்கு ஏற்புதல் இல்லையா? நீங்களே பொதுமக்களிடம் CAAவுக்கு எதிரான நிலைப்பாட்டை உருவாக்க விரும்புகிறீர்களா, செய்யுங்கள். இன்னும் ஆயிரம் போராட்ட களங்களை உருவாக்குங்கள்.’என்று சொல்லி இருக்கிறது.
என்ன, நீதிமன்றத்துக்கு இருந்த ஒரே பிரச்சினை, போக்குவரத்து பாதிக்கப்படுவது. ‘எங்களுக்கு இருக்கும் சிறிய பிரச்சினை அது மட்டும்தான். போக்குவரத்துக்கு பாதிப்பு இன்றி போராட்டத்தை தொடருங்கள். ஒவ்வொரு உரிமையுடனும் கடமையும் சேர்ந்தே வருகிறது.’ என்று குறிப்பிட்டு இருக்கிறது.
போராடும் மக்களுடன் பேசி இதற்கு ஆவண செய்ய மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டேவை நியமித்து இருக்கிறது. ஹெக்டே பொறுப்பான ஒரு வழக்கறிஞர் அவர் நீதிமன்றத்துக்கு இருக்கும் இந்தக்குறையை திறமையாக சரி செய்வார் என்று எதிர்பார்க்கிறேன். 

ஸ்ரீதர் சுப்ரமணியத்துடைய நம்பிக்கையை டில்லியின் #வண்ணாரப்பேட்டை  (ஷாஹீன் பாக்) போராளிகள் எப்படிக் காப்பாற்றினார்களாம்?

   
உச்சநீதிமன்றம் அனுப்பிவைத்த வழக்கறிஞர்களிடம் என்ன கேட்கவேண்டுமென்று பாடம் எடுத்து அனுப்பி வைத்ததில், வழக்கறிஞர்கள் சஞ்சய் ஹெக்டே, சாதனா ராமச்சந்திரன் இருவரும் இன்று போய் நாளையும் வாரோம் என்று சொல்லிவிட்டுக் கிளம்பியதாக செய்திகள் சொல்கின்றன.

சாந்தியும் சமாதானமும் விரும்புகிறவர்களுக்கு மட்டும் தான் கிடைக்கும்! 

மீண்டும் சந்திப்போம். 

    

2 comments:

  1. அரசியலை அவரவர் ஆதாயத்துக்குத்தான் பயன்படுத்திக்கொள்ள எத்தனிக்கிறார்கள். ஆகவே குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான போராட்டம் வெற்றி பெறுமா என்பது கேள்விக்குரியதே.

    தமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை .
    இதேநேரம் நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக ஆறு வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன், அடுத்த மாதம் முதல் தமிழ்மணம் போல தனிப்பதிவுகளாக அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. @சிகரம் பாரதி

      தமிழ்மணம் ஜெயித்தவிதமும் பின்னர் கைமாறி, அப்புறமும் சறுக்கியது எதனால் என்பதைப் புரிந்துகொண்டு செயல்படமுடியுமானால் தமிழ்மணத்துக்கு மாற்று என்பதை சாதிக்கவும் முடியும். இப்போது வலை ஓலை செய்வதை விட சிறப்பாகவே புக்மார்க்கிங்கில் எங்கள் பிளாக் சைடுபாரில் நீண்டநாட்களாகவே செய்து வருவதைக் கவனித்திருக்கிறீர்களா? திருப்பூர் ஜோதி ஜி அவருடைய பதிவில் உங்களுக்குச் சொன்ன பதிலில் கூட ஒரு bookmarking site ஆக நடத்துவது பற்றி ஒரு குறிப்பு இருந்ததே!

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)