தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்னாலேயே மோடிக்கு முட்டுக்கட்டை போட முனைப்பாக அங்குமிங்கும் அல்லாடிக் கொண்டு இருப்பவர் தெலுகு தேச க் கட்சியின் சந்திரபாபு நாயுடு ஒருவர்தான்! மம்தா பானெர்ஜியைச் சந்தித்ததில் கூடப் பெரிதாக எதுவும் நடந்துவிடவில்லை. இருவரும் சந்தித்தபிறகும் கூட செய்தியாளர்களுக்கு சந்திப்பில் என்ன நடந்தது என்ற விவரம் சொல்லப்படவில்லை. முடிவுகள் உறுதியாகத் தெரியும் வரை பல்லைக்கடித்துக் கொண்டு அமைதியாக இருக்க மம்தா பானெர்ஜி விரும்புகிறார்.
சந்திரபாபு நாயுடுவின் அரசியல் எதிரியும் YSRCP தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி, அதேநேரத்தில் சரத் பவார் (காங்கிரஸ் சார்பாக) அழைத்ததையும் ஏற்காமல், முடிவுகள் வெளிவரட்டும் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று அமைதியாக இருப்பதையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. Federal Front என்று முயற்சித்த தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவும் முடிவுகள் வரட்டும் என்று அமைதியாகிவிட்டார்.
காங்கிரஸ் மற்றும் சந்திரபாபு நாயுடு வகையறாக்கள் தோல்வியை ஒப்புக்கொள்ளும் மனோநிலையில் இல்லை. EVMகளின் மீது பழியைப் போடு! தேர்தல் ஆணையத்தின் மீது பழியைப் போடு என்று அலைந்து கொண்டிருக்கிறார்கள்! இதுவும் எவ்வளவு அபத்தமான, எடுபடாத குற்றச்சாட்டு என்பதை நண்பர் ராஜசங்கர் முகநூலில் ரீஷேர் செய்த பகிர்வொன்றைப் பார்த்தேன்.
தென்னகத்து பர்க்கா தத் தன்யா ராஜேந்திரன் மின்னணுவாக்கு எந்திரங்கள் பற்றி தன் 'பிழையான' ட்வீட்டுகளை டிலீட் செய்து கொள்கிறாராம்... ஏனென்றால் இப்போதுதான் தெரியுமாம் அவருக்கு, "ஒவ்வொரு மின்னணு வாக்கு எந்திரத்திலும் பிரத்தியேக எண் (unique number) உண்டு. (அந்த தொகுதியில் போட்டியிட்ட) ஒவ்வொரு வேட்பாளரிடமும் பயன்படுத்தப்பட்ட எந்திரங்களின் பிரத்தியே எண் உண்டு (எனவே, வாக்கு எந்திரங்களை எவரும் தன்னிஷ்டத்துக்கு தூக்கி சென்று விட முடியாது)", என்று!
இது தெரியாமல் சன் டிவி மாறன் சொன்னபடி மின்னணு வாக்கு எந்திரம் பற்றி போலிச்செய்தி வெளியிட சொன்னால் அவன் சொன்னபடி ட்வீட் செய்து உளறிக் கொட்ட வேண்டியது.... இதுகளெல்லாம் நிருபர்கள்!
எவரோ ஒருவர் சொன்னார், "பணத்துக்கு உடம்பை விற்பவர்களை விட கேவலமானவர்கள் இம்மாதிரி நிருபர்கள்" என்று. உண்மைதான்.
தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டிலிருக்கும் மின்னணு வாக்கு எந்திரங்களை நகர்த்த ஒவ்வொரு வேட்பாளரும் அனுமதி தரவேண்டும் என்பதும், அந்த எந்திரங்களை மத்திய காவல் படை காக்கிறது என்பதும் கூடுதல் செய்தி.
தேர்தல் ஆணையமும் இந்த தேவையில்லாத புரளிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விளக்கங்கள் கொடுத்துள்ளது. (கீழே).
10:44 AM - 21 May 2019 - Deleting tweet about EVMs for multiple reasons. Someone who knows how the system works says 'Each and every machine has a unique number. The list of machines with their numbers is in the hands of every candidate'. So if there are really any doubts, let the candidate complain. - Dhanya Rajendran
10:43 AM - 21 May 2019 - EC’s response on allegations of #EVMHacking
Ghazipur: There was issue regarding "Having watch on polled EVM strong room by the candidates" which was resolved by conveying the ECI instructions
10:44 AM - 21 May 2019 - 2.Chandauli: frivolous alligation by some people,EVMs were in proper security and protocol
3.Domariaganj:EVMs were in proper security and protocol. Agitation was unnecessary. They were convinced by DM and SP. The matter is resolved.
10:45 AM - 21 May 2019 - 4.Jhansi: EVMs are stored in proper security and protocol in the presence of political parties candidates. No issue.
In fact in all the cases,Polled EVMS and VVPATs were sealed properly in front of the political parties candidates in videography. CC TV cameras are installed
10:45 AM - 21 May 2019 - CPAF security is there. Candidates are allowed to have watch on strong room at a time and at a point one representatives of each candidates 24 ×7. The allegations are baseless.
https://twitter.com/ manakgupta/status/ 1130703737289187329

https://twitter.com/
எதிர்க்கட்சிகளுக்கு அரசியல் செய்யப் புரளிகளைக் கிளப்பிவிடுவதைத் தவிர வேறொன்றும் தெரியாது என்றால் இவைகள் யாவையும் கழித்துக் கட்டப்பட வேண்டியவையே!
மீண்டும் சந்திப்போம்.
எக்சிட் போல் பற்றி இன்னும் ஒருநாள் கதைக்கலாம்! அப்புறம் வேறு பொருள் தேடவேண்டும்!!!
ReplyDeleteஎக்சிட் கணிப்புகளில் இங்கே எவரெவர் முகமூடியெல்லாம் கிழிந்தது என்றல்லவா பார்த்துக் கொண்டிருக்கிறோம் ஸ்ரீராம்!
Deleteஎன்ன நடக்கலாம் என்கிற என்னுடைய கணிப்பு:
ReplyDeleteஎக்ஸிட் போல் பொதுவாக டிரெண்டை underestimate அல்லது overestimate செய்யும். அதனால் உண்மை ரிசல்ட் ட்ரெண்டை அதிகப்படுத்தியோ அல்லது குறைத்தோ இருக்கும்.
2014 இல் underestimate ஆக இருந்தது. இந்தமுறை ஓவர் எஸ்டிமேட் என்று நினைக்கிறன்.
ஏனென்றால் ஆளும்கட்சி 2014 இல் கொடுத்த வாக்குறுதிகளில் மக்கள் பெரும்பாலும் ஏமாற்றமே அடைந்தனர். அதிலும் , கிராமப்புறம் , விவசாயிகள் , சிறு வியாபாரிகள் அமைதியை விரும்புபவர்கள் வெளிப்படையாகவே அதிருப்தியில் இருந்தனர். இவர்கள் ஒட்டு ஆளும்கட்சிக்கு விழ வாய்ப்பே இல்லை.
மீடியாவில் என்ன மார்க்கெட்டிங் வந்தாலும் அதை உண்மை என்று நினைக்கிற கூட்டம் ஒன்று உருவாகி உள்ளது. இது வரலாற்றை அசல் ஆவணங்களில் தெரிந்து கொள்ள முயற்சி செய்யாமல் whatsapp மூலமும் வெறுப்பு பிரச்சாரம் மூலமும் மட்டுமே படித்திருக்கும். பெரும்பாலும் மத்தியதர படித்த வர்க்கம். மொத்த ஓட்டில் இது ஒரு 25% இருக்கும். மத மற்றும் சாதி அபிமான ஓட்டுக்கள் ஒரு 10% இருக்கும். ஆக 35% ஆளும்கட்சிக்கு கிடைக்கலாம்.
எனவே எக்ஸிட் போல் ஓவர் எஸ்டிமேட் செய்துள்ளது என்றே நினைக்கிறன். 10% முதல் 20% வரை overestimate செய்திருக்கலாம்.
எக்ஸிட் போல் சராசரி 300 இடங்கள். அதனை 10% டு 20% கழித்து பார்த்தால் 240 லிருந்து 270 க்குள் கிடைக்கலாம்.
வாருங்கள் ரஹிம்! கொஞ்சம் யோசித்துப்பின்னூட்டம் எழுதியிருக்கிறீர்கள். இங்கே இந்திய வாக்காளர்கள் வாக்குறுதிகளை ரசிக்கிறார்கள், ஆனால் நம்புவதில்லை என்பது என்னுடைய கள அனுபவம். மீடியா ஹைப் இந்தமுறையும் மோடிக்கு எதிராகவே இருந்தது. ஜனங்கள் மீடியாக்கள் சொல்கிற படி வாக்களிப்பதில்லை என்பதும் தெரிந்ததுதான். கொஞ்சம் புள்ளிவிவரக் கோட்பாடுகளைப் பயன்படுத்திப் பார்த்தவன் என்ற முறையில் இங்கே எந்த ஒரு ஊடகமும் சரியான சாம்பிள் சைஸ், சரியான கேள்விகள், சரிபார்த்துக் கொள்ள துணைக் கேள்விகள் என்று முன்தயாரிப்புடன் கணிப்பை நடத்துவதில்லை முறையாக அனலைஸ் செய்வதில்லை.என்பது வேண்டுமென்றே ஒருபக்கச்சார்புடன் செய்யப்படுகிற விஷயம்.
Delete