1998 தவிர அமேதி பெரோஸ் காண்டி சஞ்சய் காண்டி ராஜீவ் காண்டி அப்புறம் கடந்த 15 வருடங்களாக இந்த டூப்ளிகேட் காண்டிகளின் கோட்டையாகவே கருதப் பட்ட இழிநிலை இந்தத் தேர்தலில் துடைத்தெறியப் பட்டிருக்கிறது. தன்னுடைய இடைவிடாத முயற்சி, உழைப்பினால் கடந்த ஐந்தே ஆண்டுகளில் இதைச் சாதித்திருக்கும் திருமதி ஸ்ம்ருதி ஈரானி அவர்களுக்கு எனது வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
ஊழல் வருமானத்தை அனுபவிப்பதில் முந்திக்கொண்ட சோனியா G குடும்பம், ஊழல்கள் அம்பலமாகிறபோது பழிசுமக்க பலியாடுகளையும் கட்சியில், கூட்டணியில் வளர்த்துவருவது ஒன்றும் ரகசியமல்ல.
நட்வர்சிங் தன்னுடைய சுயசரிதையை எழுதுகிறார், பல வில்லங்கமான விவரங்கள் வெளியே வரலாம் என்ற சூழ்நிலையில் 2014 ஜூலையில் சோனியாவும் பிரியங்காவும் நட்வர்சிங்கை வீட்டுக்கேவந்து சந்தித்து சமாதானம் பேசிய கதை இன்னொரு வலைப் பக்கங்களில் பேசப்பட்டிருக்கிறது. 2005 இல் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த நட்வர் சிங் ஈராக்கிலிருந்து உணவுக்கு எண்ணெய் திட்டத்தின் கீழ் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யப்பட்டதில் நடந்த முறைகேடுகளில் காங்கிரஸ் கட்சி (சோனியா குடும்பம்) நேரடியான ஆதாயம் அடைந்ததாக ஐ நா சபை விசாரணைக்கமிஷன் ஆதாரங்களை வெளியிட்ட தருணத்தில் நட்வர் சிங் பலிகடாவாக்கப்பட்டு ராஜினாமா செய்யக் கட்டாயப்படுத்தப்பட்டது UPA I இல் நடந்த அசிங்கம். 2G ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கூட கூட்டணி தர்மத்தில் கூட்டுக்கொள்ளை அடித்தவர்கள் விவகாரம் வெளியே வந்ததும் பலிகடாவை கூட்டணிக்கட்சியில்தான் பிடித்தார்கள் என்பதும் சமகால நிகழ்வுதான்!
தங்களை ஆளப்பிறந்தவர்கள் என்ற மமதையிலேயே இத்தனை காலம் ஓட்டியவர்களை, ஓரம் கட்டுவதென்ற முடிவை எடுத்திருக்கிற அமேதி தொகுதி மக்களுக்கும் நம்முடைய பாராட்டுகளைத் தெரிவிக்க வேண்டும். Congress president Rahul Gandhi conceded defeat from Amethi parliamentary constituency - a bastion of the Nehru-Gandhi family. He congratulated BJP's Smriti Irani. "She has won and I congratulate her," the Congress president said while addressing a press conference at the party headquarters.
இவ்வளவு தூரம் சொல்லிவிட்டு தமிழக முடிவுகளைப் பற்றி பேசாமல் இருந்தால் நியாயமாக இருக்குமா?
தமிழ்நாட்டில் திமுக அசுர வெற்றி பெற்றிருக்கிறது. கருணாநிதியின் வாரிசான ஸ்டாலினை தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். இத்தனை பெரிய வெற்றியை நான் எதிர்பார்க்கவில்லை. 10 இடங்களையாவது அதிமுக கூட்டணி வெல்லும் என்று நினைத்தேன். அமமுக, நாம் தமிழர், மநகூ பெற்ற வாக்குகளையும் அதிமுக வாக்குகளையும் கூட்டினாலும் கூட பல இடங்களில் திமுகவே முந்துகிறது.
ஒரே குரூர சந்தோஷம் என்னவென்றால், சென்றமுறை அதிமுக 37 இடங்கள் வென்றும் ஒரு பிரயோஜனமும் இல்லை எனத் திமுகவினர் சொன்னதுபோல, இந்த முறை அவர்களுக்கே நடந்திருக்கிறது. கூடுதலாக சட்டசபை இடைத் தேர்தலில் அதிமுகவும் ஓரளவு வென்றிருப்பதால் ஆட்சிமாற்றம் ஏற்பட உடனடி வாய்ப்பில்லை என்றாகிவிட்டது. இத்தனை வென்றும் திமுகவுக்கு உடனடியாக பெரிய ஆதாயமில்லை.
ஸ்டாலின் தமிழ்நாட்டளவில் அங்கீகரிக்கப் பட்டிருக்கிறார் என்பது திமுகவுக்கு நல்ல விஷயம் என்றால், அதிமுக என்பது இபிஎஸ் ஓபிஎஸ் என்பதுதான் என அங்கீகரிக்கப்பட்டிருப்பது அதிமுகவுக்கு நல்லதாகிறது.
தொடர்ந்து மோதியைப் பற்றியும் ஹிந்துக்களைப் பற்றியும் தமிழ்நாட்டில் செய்யப்பட்ட பிரசாரம் வெகுவாக எடுபட்டிருக்கிறது. இது பாஜக அரசியலைப் பொருத்தவரை, மோசமான ஒன்று. அதேசமயம் அது நாம் தமிழர், மநகூ, அமமுகவுக்கும் போகவில்லை என்பது நல்ல விஷயம்.
தமிழ்நாட்டில் வைப்ரண்ட் பாஜக தலைமை இல்லாதவரை இந்நிலையே நீடிக்கும். மிக மோசமான பிரசாரமே தமிழ்நாட்டில் பாஜகவின் தோல்விக்குக் காரணம். இதை உணராதவரை இவர்களுக்கு மோட்சமில்லை. இவர்கள் எப்போது உணர்வார்கள் என்பதும் தெரியவில்லை.
தமிழக பாஜக தன்னை அடியோடு மாற்றிக் கொள்ளாத வரை எத்தனை நரேந்திர மோடி அமித்ஷா வந்தாலும் காலூன்றுவதும் ஜெயிப்பதும் சாத்தியமே இல்லை.
மீண்டும் சந்திப்போம்.
தமிழக தேர்தலில் திமுகவின் இந்த அளவு பெரிய வெற்றியை எதிர்பார்க்கவில்லை. கார்த்தி சிதம்பரம், ஜகத் ரக்ஷகன், டி ஆர் பாலு, ஆ ராஜா போன்ற பெருச்சாளிகளின் வெற்றியையும் எதிர்பார்க்கவில்லை.
ReplyDeleteஇருந்தாலும், இது தான் தேர்தல் முறையின் விதிகள். அதன் படி வெற்றி பெற்றவர்களை ஏற்றுக்கொள்வது தான் நேர்மை. அதனால், அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
பார்க்கலாம். மாரிதாஸ் போன்றோர் அடித்துக்கொண்டே இருந்தால் அம்மி நகராதா என்ன?
வாருங்கள் பந்து! திமுகவுக்கு இத்தனைபெரிய வெற்றி கிடைத்தும் என்ன பிரயோசனம் சொல்லுங்கள்!
Deleteதமிழக பாஜகவினர் மோடியின் செல்வாக்கிலேயே ஜெயித்துவிடலாம் என்றிருந்தார்களோ என்னவோ? காங்கிரசிடமிருந்து எந்தப்பாடத்தையும் கற்றுக்கொள்ளவில்லை போல! அதைத்தான் ஹரன் பிரசன்னா சாடியிருக்கிறார் என்றே நினைக்கிறேன்.
வஞ்சனையில்லாமல் ஈபிஎஸ் கொளுத்தும் வெயிலில் மோடியின் பெயர் சொல்லி அவர் பிரதமராய் வந்தால் தான் நாட்டுக்கு நல்லது என்று ஓட்டு கேட்டார், சார்! தமிழிசை கூட திமுகவும் எங்களுடன் பேசிக் கொண்டு தான் இருக்கிறார்கள்!: ஸ்டாலினால் மறுக்க முடியுமா?' என்று கேட்டது அபஸ்வரமாய் ஒலித்தது.
ReplyDeleteதிமுகவை இவர்கள் நினைத்தும் பார்க்கலாமா?.. அது அதிமுகவுக்கு செய்யும் துரோகம் இல்லையா?-- என்று தோன்றியது. 'எங்கள் திருமணம் கலைஞர் தலைமையில் தான் நடந்தது' என்று பழைய நினைவுகளைச் சொல்லி நடுநடுவே பழைய பாசம் வேறே பொங்கும்! இத்தனையும் நடந்து முடிந்தும் கூட தமிழக மக்கள் தவறு செய்து விட்டார்களோ என்று உருகும் போது....
எதை எந்த இடத்தில் எப்படிப் பேச வேண்டும் என்று தெரியாதவர்கள் பழம் தின்று கொட்டை போட்ட திமுகவிடம் மாட்டிக் கொண்டால் இப்படித் தான் மதிப்பிழந்து தவிப்பார்கள்..
போட்ட முடிச்சு போட்டது தான்; இனி அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் இடையே தான் பந்தம் பாசம்
எல்லாம் என்று இருக்கட்டும்!
அரசியலில் எதுவும் நடக்கும் என்ற நிலையெல்லாம் நினைத்துக் கூட பார்க்க முடியாதது!
அதிமுகவின் தமிழக அரசு தமிழ் நாட்டு நலனுக்காக (எட்டு வழிச் சாலை மாதிரி) கோரிக்கைகளை முடித்து வைக்க சட்டசபையில் தீர்மானங்களை கொண்டு வர, அவற்றை நிறைவேற்றி வைக்க மோடி துடிக்க, திமுக அவற்றை எதிர்த்து நாடாளுமன்றத்தில் கோஷமிட---
என்ன நடக்கிறது என்று ஊர் பார்க்கட்டும்.. இப்படி செயல் வடிவில் ஏதாவது நடந்தால் தான் பாஜக தமிழகத்தில் குப்பை கொட்ட முடியும்!
மேடைப்பேச்சில் தமிழிசை குமரி அனந்தனின் மட்டமான ஜெராக்ஸ் என்பதோடு ஒரு கட்சியின் மாநிலத்து தலைமைக்குத் தகுதியானவர்தானா என்ற சந்தேகம் எனக்கு நீண்டநாட்களாகவே உண்டு ஜீவி சார்!
Deleteஇங்கே தமிழக சட்டசபையில் சட்டையைக் கிழித்துக் கொண்டு வெளிநடப்பு அரசியல் செய்ததுபோல திமுக நாடாளுமன்றத்தில் செய்யமுடியாது. அகில இந்திய அளவில் நகைப்புக்கிடமாவது ஒன்று தான் மிஞ்சும் என்பது அவர்களுக்குமே தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.
என்ன நடக்கிறதென்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கலாமே!
காவிரி நதி நீர் தீர்வு ஒன்று போதும். நடுவண் அரசும் மாநில அரசும் திட்டமிட்டு டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு பயன் தருகிற மாதிரி நதி நீர் பங்கீட்டை முறைபடுத்தி விட்டால் போதும்.. மாநில அரசின் பெருமைக்கு அப்புறம் ஏறு முகம் தான்.
ReplyDeleteதிராவிட கட்சிகளின் வழி வழி வழக்கப்படி கல்லக்குடிகொண்டான் மாதிரி மாநில முதல்வர் காவிரி கொண்டான் என்று கூட பெயர் சூட்டிக் கொள்ளலாம்.
நடுவண் அரசோடு கைகோர்த்து செயல்படுதல் என்பது அரிய வாய்ப்பு.. ஆளும் அதிமுகவுக்கு அது கிடைத்திருப்பது அசாதரணமான வெற்றிகளை ஈட்டித் தரும்.