இன்று காலை புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சியில் CPIM கட்சி சார்பில் அருணன் என்கிற கதிரேசனும் பிஜேபியின் சார்பில் K T ராகவனும் பங்குகொண்ட விவாதத்தைப் பார்த்தபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது பரிதாபப்படத்தான் தோன்றியது. அருணனை விட மிகப்பெரிய உளறுவாயாக கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியே இருக்கும் போது வேறு எப்படிச் சொல்வது?
அருணனுடைய இளிப்பு, சீதாராம் யெச்சூரியுடைய பேச்சு எல்லாம் 2016 இல் தந்திடிவி விவாதத்தில் நடந்த வரலாற்றுப் புகழ் படைத்த இந்த நான்கு நிமிட வீடியோவுக்குள் அடக்கம்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைமையைப் பார்த்துப் பரிதாபப்படாமல் வேறென்ன செய்ய?
Sitaram Yechury, CPI(M): Ramayana & Mahabharata are also filled with instances of violence & battles. Being a pracharak, you narrate the epics but still claim Hindus can't be violent? What is the logic behind saying there is a religion which engages in violence & we Hindus don't
6:30 AM · May 3, 2019 · Twitter Web Client
அருணனுடைய இளிப்பு, சீதாராம் யெச்சூரியுடைய பேச்சு எல்லாம் 2016 இல் தந்திடிவி விவாதத்தில் நடந்த வரலாற்றுப் புகழ் படைத்த இந்த நான்கு நிமிட வீடியோவுக்குள் அடக்கம்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைமையைப் பார்த்துப் பரிதாபப்படாமல் வேறென்ன செய்ய?
சீமான் கூடப் பூசிமெழுகிய ஒரு விவகாரத்தைக் கொஞ்சம் வெளிப்படையாகப்பேசிய விசிகவின் ஆளூர் ஷா நவாஸ் உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியவர் என்பதை இந்தப்பக்கங்களில் பதிவுசெய்ய விரும்புகிறேன். ஷா நவாஸ் கடுங்கோட்பாட்டாளர்கள் என்று சொல்வது கொஞ்சம் மேம்போக்காகச் சொல்வது போல இருந்தாலும், வஹாபியிசம் பரப்புரை செய்கிற இஸ்லாமியத் தூய்மைவாதத்தைத் தான் சொல்கிறார் என்பதை இந்தப்பக்கங்களுக்கு வரும் நண்பர்கள் புரிந்துகொள்வார்கள் என்றே நம்புகிறேன். இந்த மாதிரி உள்ளிருந்தே வரும் குரல்கள் எழுகிற வேகத்திலேயே அமுங்கிப்போய் விடுகிற பரிதாப நிலை இனியும் தொடராமல் இருக்க இஸ்லாமிய சகோதரர்கள் தான் முன்னெடுக்க வேண்டும்.
ஆங்கிலப்படங்களைப் பார்க்கிற வழக்கம் உள்ளவர்களுக்கு மிகவும் பரிச்சயப்பட்ட பெயர் ராபர்ட் டிநீரோ. டொனால்ட் ட்ரம்பபின் கடுமையான எதிர்ப்பாளரும் கூட! இந்த 9 நிமிட வீடியோ செக்மென்ட்டில் என்ன சொல்கிறார் என்று பாருங்கள்! .
கம்யூனிஸ்ட் கட்சிக்கு பாவம்...வேறு வழியில்லை. அவங்களோட ஆதரவு தளம் மிக மிகக் குறைந்துகொண்டே வருகிறது... மேற்கு வங்கத்துல, திருனாமுல், பாஜக, காங்கிரஸ் அதுக்கு அப்புறம் கம்யூனிஸ்ட் என்று கட்சிகளின் முக்கியத்துவம் மாறிவிட்டது. கேரளால, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் என்று இருவரும் இருக்கிறார்கள். எத்தைத் தின்றால் திருனமுல் காங்கிரஸின் ஆதரவுத் தளத்தை சுருக்கலாம் என்று இப்போ யோசிப்பதால், எதையாவது பேசுகிறார்கள்.... பாவம் யெச்சூரி...
ReplyDeleteமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை நினைக்க நினைக்க வருத்தம்தான் பீறிடுகிறது நெல்லை! எப்படிப்பட்ட தோழர்கள் எத்தனை தியாகங்கள்? அத்தனையும் இப்படி வியர்த்தமாகப் போவதற்குத்தானா? மே தினத்தன்று முகநூலில் தொழிற்சங்கங்களைக் கழுவிக்கழுவி ஊற்றிக் கொண்டிருந்த பகிர்வுகளை பார்த்துவிட்டு upset ஆனது இன்று வரைகுறையவில்லை.
Delete