ராகுல் காண்டியின் ராஜினாமா நாடகம் இன்னமும் தொடர்கிறது என்கிறார்கள். காரியகமிட்டி கூட்டத்தில் பானாசீனா,கமல்நாத், அசோக் கெலாட் மூவர்மீதும் பப்பு மட்டுமே குற்றம் சொல்லவில்லை. பப்பியும் சேர்ந்து கொண்டு இங்கே இருப்பவர்கள் எல்லாம் என்ன செய்தீர்கள்? என் அண்ணனைத் தனியாக விட்டு விட்டீர்கள் என்று சாடியதாகவும் செய்திகள் கசிகின்றன. அதற்குப் பின்னாலும் ராகுல் காண்டி தன் ராஜினாமா முடிவில் இன்னமும் ட்ராமாவை நீட்டித்துக் கொண்டேபோவதாக இன்றைய Comedy Monday செய்திகள்! சமரசமுயற்சி கைகூடவில்லை என்கிறது இந்து தமிழ்திசை
பாதுஷாக் கனவுகள் இருப்பவர்கள் எல்லோருமே பாதுஷா ஆகிவிடுவதில்லை என்ற கசப்பான பாடத்தை காங்கிரஸ் கட்சியின் இன்றைய ஜாகீர்தாரர்கள் பாடம் புகட்டியிருக்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா?
காரியகமிட்டி கூட்டத்தில் நடந்தது என்ன என்று ஒவ்வொரு தகவலாக வெளி வருகின்றன. கூட்டத்தில் பேசிய பிரியங்கா, ‛‛கடுமையாக தேர்தல் பிரசாரம் செய்த ராகுலின் உழைப்பை கட்சி தலைவர்கள் யாரும் பாராட்டவில்லை. நான் மட்டுமே பாராட்டினேன். அவருக்கு வேறு யாரும் ஒத்துழைப்பு தரவில்லை. ராகுலின் தலைமை பற்றி இப்போது கேள்வி எழுப்பும் தலைவர்கள், அப்போது எங்கு போனீர்கள்' என்று கேட்டார் என்கிறது இன்னொரு செய்தி.
கர்நாடக அரசியல் நிலவரத்தை அருமையாக விளக்கும் சதீஷ் ஆசார்யாவின் இரண்டு கார்டூன்கள்!
தேவே கவுடாக்களையும் அதிர வைத்த பிஜேபியின் வெற்றி! அடுத்தது என்னவாம்? ம்யூஸிகல் சேர் தானா?
இதெல்லாம் போகட்டும்! தமிழகம் இந்தத் தேர்தல் முடிவுகளைத் தாண்டி அடுத்தகட்டத்துக்கு நகர ஆரம்பித்து விட்டதா?
நம்மூர் ஊடகங்கள், சேனல்களுடைய யோக்கியதை என்னவென்று தெரிந்தும் இப்படிக்கு கேட்கலாமா? பழங்கதை பேசித்திரிப்பது தமிழேண்டா குணமல்லவா!
மீண்டும் சந்திப்போம்.
பிரியங்கா காந்திக்கு ஏதோ ஒரு டிஸார்டர் உண்டாம். அதாவது கோபத்தில் பொருட்களைத் தூக்கிப் போடுவாராம், கட்டுப்படுத்த முடியாத கோபத்தில் கை நீட்டுவாராம். நல்லவேளை பேச்சோடு தப்பித்தோம் என்று காரியக்கமிட்டியில் நினைத்திருப்பார்களோ?
ReplyDeleteநினைச்சுப் பார்க்கவே பயங்கரம்...
Deleteநல்லவேளை... தப்பிச்சோம்...
ஆனா பாருங்க... ராகுலுக்கு சாந்தமான குணம் (போல் தெரிகிறது). ஆனால் அவர் எலெக்ஷன் பேச்சுதான் கொஞ்சம் 'அசிங்க' ரகம்.
Deleteகிருஷ்ணமூர்த்தி சார்.... ஸ்டாலின் ராசிதானோ ராகுலை கவிழ்த்துவிட்டது? அதாவது குழந்தை பிறப்பதற்கு முன்னமே பேர் வைத்து ஊர்வலம் சென்றது?
வாங்க துரைராஜு சார்! தப்பிச்சுட்டோம்ன்றது ஒருவகையில் சரிதான்! ஆனால் காங்கிரஸ் இன்னமும் உயிரோடு தானே இருக்கிறது''என்கிறவகையில் நிஜமாகவே தப்பித்துவிட்டோமா?
Deleteபிரியங்கா மட்டும்தானா நெல்லை? காங்கிரஸ் கட்சியே ஒருவித டிஸ்ஆர்டர் உள்ளவர்களால் நிரப்பப்பட்ட கட்சிதான்! பதவிப்பித்து! ஏதோ ஒரு பதவியில் ஒட்டிக்கொண்டிருக்கவிட்டால், ஊழல் செய்யாவிட்டால் காங்கிரஸ்காரனால் உயிரோடிருக்க முடியாது!
குலாம் நபி ஆசாத் அல்லது ப.சி அல்லது கர்நாடகாவைச் சேர்ந்தவர் - யார் காங்கிரஸ் கட்சித் தலைவராக வரக்கூடிய தகுதி பெற்றவர்? இன்றைய நிலையில் 'ஜாமீன்' ஒரு முக்கியத் தகுதியா?
ReplyDeleteஊழல், பணம் என்ற அளவீடுகளில் பார்த்தால் கர்நாடகத்தில் DK சிவகுமார் தமிழ்நாட்டில் பசி முன்னால் வருவார்கள். ஆனால் பானாசீனா சொந்தக்காசைக் கட்சிக்காகச் செலவு செய்வாரா?
DeleteKGG முகநூலில் ப்ரியா வாரியரை காங்கிரஸ் தலைவர் பொறுப்புக்கு சிபாரிசு செய்கிறார் நெல்லை! என்னான்னு கேளுங்களேன்! :-))))
Deleteகாங்கிரசுக்கு இப்போதைய தேவை, மன்மோகன் போன்ற ஒரு மண் பொம்மை. அதை முன் நிறுத்தி பின்னாலே ஒரு coterie சில்லறை சேர்க்கத் திட்டமிடும். அந்த விவரம் தெரிந்து இருப்பதால்தான் அமரிந்தர் சிங் போன்றவர்கள் தலைமை ஏற்கத் தயங்குகிறார்கள்.
ReplyDeleteலீடர் என்ற வார்த்தைக்கே முன்னிருந்து வழிநடத்துவது என்பதுதான் அர்த்தம் என்பதைக் காங்கிரசில் எவருமே புரிந்துகொண்டமாதிரித் தெரியவில்லையே கௌதமன் சார்! அமரீந்தர் சிங்குக்கு பஞ்சாப் தாண்டி செல்வாக்கு இல்லை. தவிர, நவ்ஜோத் சிங் சிது குடைச்சலையும் தாண்டி பானாசீனா, கமல்நாத் மாதிரியான பழம்பெருச்சாளிகளைச் சமாளிப்பதே பெரும்பாடாகிவிடும்
Delete