நரேந்திர மோடியை நக்கல் செய்வது ஒருபுறம் இருந்தாலும் கார்டூனிஸ்ட் சதீஷ் ஆசார்யா என் மிகுந்த அபிமானத்துக்கு உரியவராக இருப்பது இதனால் தான்!
1984 சீக்கியர் படுகொலையோடு போபால் விஷவாயு சம்பவமும் தான் ராஜீவ் காண்டி ஆள ஆரம்பித்ததன் அடையாளம் என்றால் காங்கிரஸ்காரனுக்கு எப்படியிருக்கும்? அம்புப்படுக்கையில் படுக்க காங்கிரசில் எவரும் பீஷ்மர் இல்லையே?! காங்கிரஸ் கட்சி உளறுவாயர்களின் கட்சிதான் என்று டிக்கிசிங் மணிசங்கர் அய்யர் என்று ஆரம்பித்து, இன்று பப்பு, பப்பியோடு சாம் பிட்ரோடாவில் வந்து நிற்கிறது. ராகுலைத் தூக்கிப் பிடித்த சந்திரபாபு நாயுடு கூட மம்தா பானெர்ஜி பக்கம் சாய்ந்துவிட்டார் என்று செய்திகள் வருகின்றன.
சந்திரபாபு நாயுடுவின் இருப்பையே கேள்விக்குள்ளாக்குகிற விதத்தில் முன்னாள் நண்பரும் பின்னாள் அரசியல் எதிரியுமான YS ராஜசேகர ரெட்டியின் மகன் YS ஜெகன் மோகன் ரெட்டியின் வளர்ச்சி பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. அகட விகடங்களை எல்லாம் செய்து பார்த்த பிறகும் கூட, நாயுடு இந்தத் தேர்தலில் தேறுவது கடினம் தான் போல! காங்கிரசுடன் கூட கூட்டு சேரத்தயார் பழசையெல்லாம் மன்னித்துவிட்டேன் என்று ஜெகன்மோகன் சமிக்ஞை காட்டியிருப்பதில், காங்கிரசுக்கு ஒரே ஒரு சங்கடம்தான்! தெலங்கானா முதல்வர் KCR உடன் ஜெகன்மோகன் நெருக்கமாக இருப்பது உறுத்துகிறதாம்!
ஆனந்த விகடன் முதலான பழைய ஊடகங்கள் மட்டும் தான் கப்சாக்களாக அள்ளி விட வேண்டுமோ? டிஜிடல் திண்ணை என்று மின்னம்பலம் தளத்திலிருந்தும் இது மாதிரி 200+ வீடியோக்கள்! என்ன சொல்ல? நிச்சயமாக ரெண்டு முருகன் மீது அனுதாபம் வரவில்லை, அவ்வளவுதான்!
எவ்வளவோ தாங்கிக்கொண்டோம், . இதைமட்டும் தாண்டிப் போக மாட்டோமா? காசுக்கு கூவுகிற ஊடகக்காரர்கள் ஒன்று கூடி இங்கே உத்தர பிரதேசத்தில் பிரியங்கா வாத்ரா impact என்ன என்று ஆராய்கிறார்களாம்! மே 23 அன்று இந்தக் கும்பலுக்கு விசேஷமாகப் பொங்கல் வைக்கலாமா அல்லது இப்போதே தகவல்களை சேகரித்து பொங்கல் வைத்து விடலாமா?
காங்கிரஸ் கட்சி உளறுவாயர்களின் கட்சிதான் என்று டிக்கிசிங் மணிசங்கர் அய்யர் என்று ஆரம்பித்து, இன்று பப்பு, பப்பியோடு சாம் பிட்ரோடாவில் வந்து நிற்கிறது என்று ஆரம்பத்திலேயே முடித்தாயிற்று! திரும்பத் திரும்ப அதையே சொல்லிக் கொண்டே இருக்கவேண்டுமா?
மணி சங்கர் ஐயர் எங்கே இருக்கிறார்? ஒரு செய்தியும் இல்லையே...... வாட்சப் தகவல்கள் வேறு செய்தியைச் சொல்கின்றன
ReplyDeleteபாண்டேவைக் கேளுங்கள் நிகழ்ச்சியில் ஒரு நேயர் கூட உங்களை போல மணிசங்கர் அய்யரைப் பற்றி ஆவலோடு விசாரித்தார் நெல்லை! பாண்டே சொன்னது இது: இங்கேதான் எங்கேயோ இருக்கிறார் பத்திரமாக இருக்கிறார்!
Deleteஊடகங்களிடம் முன்புபோல உளறாமல் பத்திரமாக இருக்கிறாரோ? :))
ப்ரணாய் ராய் சொல்வதில் அர்த்தம் இருப்பதாகத்தான் நான் நினைக்கிறேன். அவருடைய ரெபுடேஷன் இருக்கிறது. மே 23 பார்க்கலாம்.
ReplyDeleteப்ராணாய் ராய் உள்ளிட்டு இந்தவிவாதத்தில் பங்குகொண்டவர்களுடைய ஒரே தகுதி காங்கிரசிடம் விலைபோனவர்கள் என்பது மட்டும் தானே?!
Delete