மே 24ல் இந்த மாதிரி கட்டுரைகளுக்கெல்லாம் (டைம்ஸ் ஆஃப் இந்தியா) அர்த்தம் தெரிந்துவிடும் என்று அந்தப்பக்கங்களுக்கு வந்து சொல்கிறார் நெல்லைத்தமிழன். இதையெல்லாம் முன்கூட்டியே ஊகித்து அடடே! மதி கார்டூனாக வரைந்தே என்ன செய்யலாமென்று கோடி காட்டி விட்டார்! பார்க்கலாமா?
தூக்கம் வராத ஊடகங்களும் அரசியல்வாதிகளும் சேர்ந்து புதிது புதிதாக கணிப்புகளையும் செய்தித் திணிப்புகளையும் செய்து வருகிறபோது என்ன மாத்திரைபோட்டு என்ன செய்ய? சொல்லுங்களேன்! இன்றைக்கு கேள்விநேரமாக வேறு பரபரப்பான செய்திகள் இல்லாமல் மீண்டும் 7 பேர் விடுதலை சர்ச்சையைக் கையிலெடுத்துக் கொண்டு வைகுண்டராஜன் சேனல் கூவ ஆரம்பித்திருப்பதைப் பார்க்கையில் சிரிப்பாகவும் பரிதாபமாகவும் இருக்கிறது.
எத்தனை சுவாரசியமான விஷயங்கள் கிளறுவதற்கு இருக்கிறது? இவர்களானால் இப்படிச் செக்குமாடு மாதிரிச் சுற்றிச்சுற்றியே ஓய்ந்துபோகிறார்களே என்ற பரிதாபம் தான்! ராஜீவ் காண்டி இத்தாலிய மனைவி, மனைவியின் உறவினர்களோடு லட்சத்தீவுகளில் உல்லாசப் பயணம் போனதை ஏற்கெனெவே சுட்டி கொடுத்துச் சொல்லி இருந்தேன், ஏன் தமிழ்நாட்டு ஊடகங்கள் இப்படி வெட்கம் இல்லாமல் காங்கிரஸ், கழகங்களுக்கு முட்டுக் கொடுத்து வருகிறார்கள் என்ற சங்கதி எல்லோருக்கும் தெரிந்தது தான்! அதற்காக, இவ்வளவு too much ஆகவா?!
செய்தி: தினகரன் நேற்றைய இதழ்
சன் குழும வெளியீடு
தான் திருடன் பிறரை நம்பான் என்பது மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியனரைப் பொறுத்தவரை எவ்வளவு உண்மை என்பது இந்தச் செய்தியைப் பார்த்ததும் புரிகிறதா? மதுரை நாடாளுமன்றத் தொகுதி மார்க்சிஸ்ட் வேட்பாளர் உப்புச் சப்பில்லாத விஷயத்துக்காக ஆர்ப்பாட்டம் நடத்தி, உயர் நீதிமன்றத்துக்குப் போய் வழக்குப் போட்டு மதுரை கலெக்டர் உட்பட ரெவின்யூ அதிகாரிகளை இடமாற்றம் செய்த அதீத ஆட்டத்தைப் பார்த்து எனக்கே ரொம்ப ஆச்சரியம். தபால் ஓட்டுகளைக் குறிவைப்பது, கைப்பற்றுவது எப்படி என்று கேரள சகாக்களிடமிருந்து அல்லவா கற்றுக் கொள்ள வேண்டும் போல இருக்கிறது? இந்த லட்சணத்தில் எழுத்தாளர் தான் ஜெயித்துவிடப்போவதாகக் கனவு காண்பதைக் கேள்விப் பட்டதில் #அடச்சீ என்று தோன்றாமல் எப்படி இருக்குமாம்?
கேரள போலீஸ் வாக்கு சுவாரஸ்யம். ராஜிவ் காந்தி நண்பர்களுடன் எல்லாம் உல்லாசப்பயணம் போகவில்லை என்று ராணுவத்திலிருந்து ஒருவர் மறுத்ததாக செய்தி படித்த நினைவு. மேலும் எல்லா பிரதமர்களும் இப்படிச் செல்வது அனுமதிக்கப்பட்டிருக்கிறது, அப்படிச் செல்வார்கள் என்றும் அவர் சொன்னதாகவும் படித்த அரைகுறை நினைவு.
ReplyDeleteஸ்ரீராம்! பிரதமர், ஜனாதிபதிகளுக்கு சில சலுகைகள் உண்டுதான்! அவர்களுடைய மனைவி மக்களுடன் சேர்ந்து அனுபவிக்கத் தடையுமில்லைதான்! ஆனால் இத்தாலிய மாமியார், மற்றும் உறவினர்களுடன்? அதேபோல அமிதாப் பச்சன் தம்பதிகள் ராகுலின் நண்பர்கள் என்று இந்தியாவின் விமானந்தாங்கி கப்பலில் என்பது சரியா? குவாத்ரோச்சி அந்த இத்தாலிய உறவினர்களுள் ஒருவரா என்று அடுத்தடுத்த பாதுகாப்பு தொடர்பான கேள்விகள் எழுகிறதே!
Delete