ஊரோடு ஒத்துவாழ்! ஊரைப் பகைக்கின் வேரொடு கெடும்! என்பதெல்லாம் காலாவதியாகிப்போன வழக்கு! எதிர் நீச்சல் என்று சொல்வதற்கும் முதலில் சொன்னதற்கும் எத்தனை முரண்பாடு என்பதை எப்போதாவது யோசித்துப் பார்த்தது உண்டா? முதலில் பிஜேபியின் நாராயணன் திருப்பதி இங்கே என்ன சொல்கிறார் என்பதைக் கொஞ்சம் பார்த்துவிடலாம்!
முக.ஸ்டாலின் - வைகோ கூட்டணி.. மிக மோசமான வியாபாரம் என்று இந்த வீடியோவின் சாரமான தலைப்பாக தலையங்கம் என்கிற யூட்யூப் சேனல் சொல்கிறது. உண்மை தான் என்று எல்லோருக்கும் தெரியும்! ஆனால் என்னென்ன விஷயங்களை முதலீடாக வைத்து அரசியலில் வியாபாரம் செய்கிறார்கள் என்று கேள்விகேட்டால் என்ன சொல்வீர்கள்?
சுபவீ செட்டியாருக்குத் தன்னுடைய பேச்சு வியாபாரத்தின் முதலாக இருப்பது திராவிடம், தமிழ் என்று கலந்துகட்டி அடிப்பது தான் என்பது மிகத்தெளிவாகவே தெரியும். ஆனால் அவர் பேசுவதைக் கேட்கிற எத்தனைபேருக்கு அது தெரியும்?
அங்கே தான் துண்டுச்சீட்டை வைத்துக் கொண்டு இசுடாலின் பேசுகிற அரசியலாகட்டும், அம்பேத்கர், தலித் என்று திருமா செய்கிற அரசியலாகட்டும், சுபவீ மாதிரி பேசுவதை மட்டுமே முழுநேரத் தொழிலாகட்டும், இவர்கள் எல்லோரும் என்ன மாதிரி அரசியல், வியாபாரம் செய்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள மாரிதாஸ் மாதிரியான இளைஞர்கள் தேவைப் படுகிறார்கள்! ஊரோடு ஒத்துவாழ் என்கிற வழக்கை நாம் எவ்வளவு தவறாகப் புரிந்துகொண்டு மந்தைத்தனமாக இருப்பது என்றே சாய்ந்தால் சாயுற பக்கமே சாயுற செம்மறி ஆடுகளாகவே ஆக்கப்பட்டிருக்கிறோம் என்பதும் கூடப் புரியும்!
இந்த 37 நிமிட வீடியோவை அவசியம் பார்க்க வேண்டுமென்று பரிந்துரை செய்கிறேன். தி பயனீர் நாளிதழில் நிருபராகப் பணி புரிந்து வருகிற J கோபிகிருஷ்ணன், அவிழ்த்துவிட்ட கோவில் காளையாக வலம் வந்துகொண்டிருந்த சால்வை அழகர் சீனாதானாவுக்கு மூக்கணாங்கயிறு மாட்ட முயற்சித்த ஒருசிலரில் (முதல் பெயராக டாக்டர் சுப்ரமணியன் சுவாமி) ஒருவர்! சிலகாலத்துக்கு முன் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு ஒரு கடிதம் எழுதினார். பானாசீனா மற்றும் அவரது மனைவி நளினி இருவரும் உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்கள் என்ற அந்தஸ்தை வைத்துக் கொண்டு நிறைய முறைகேடுகளில் ஈடுபடுகிறார்கள், அதை விசாரித்து சீனியர் அட்வகேட் அந்தஸ்தை ரத்து செய்யவேண்டும் என்று கோரியிருந்ததில், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பார் கவுன்சில் ஒரு 4 நபர் குழுவை அமைத்து இந்தவிஷயத்தை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி சொல்லியிருக்கிறார். INX Media வழக்கு குறித்தும் (நேற்றைக்கு சிபிஐ நீதிமன்றத்தில் சீனாதானாவின் பரிதாபமான முறையீடுகளை கொஞ்சம் சிரித்துக் கொண்டே சொல்கிறார்) அப்புறம் சீனாதானா எதிர்கொள்ள வேண்டிய வழக்குகளைப் பற்றிக் கொஞ்சம் சுவாரசியமாகச் சொல்கிறார். ஊரார் வாய்மூடி அமைதியாக இருப்பது போல, தானும் இருப்பானேன் என்று ஒருசிலர் முனைப்பாகச் செயல்படுவதுதான் மாற்றத்துக்கு முன்னோடி என்பதை இந்தப் பக்கங்களில் Change Management என்ற தலைப்பில் ஒரு பதினோரு பதிவுகளில் ஒரு புத்தகத்தின் மீதான என்னுடைய சிந்தனைகளாகச் சொல்லி இருந்தேன் என்பது விளம்பரம் தான்! ஆனால் தெரிந்து கொள்ளவேண்டிய விஷயமாக இருக்கிற விளம்பரம்!
நடிகர் விஜய் தனது பிகில் படைப்பு பாடல்கள் வெளியீட்டில் அரசியல் வாடை தொனிக்கிற மாதிரிப் பேசியதோ, அதை எதிர்த்தோ ஆதரித்தோ சிலர் பேசியதோ விஷயமே இல்லை! மக்கள் நீதி மையம் என்றொரு கட்சி நடத்துவதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறாரே கமல் காசர் விஜய் பேச்சை ஆதரித்துப் பேசியிருப்பதுதான் மேட்டரே!
யாரை எங்கே வைப்பது என்று தமிழகத்தில் ஐம்பது அறுபது ஆண்டுகளாகவே யாருக்கும் புரியவே இல்லை என்பதுதான் கோளாறுகளின் ஊற்றுக்கண்ணே! கண்ணதாசன் தன்னுடைய சொந்த அனுபவத்தில் நொந்து போய் எழுதிய இந்தப்பாட்டே கொஞ்சம் யோசிக்க வைக்கும்!
மீண்டும் சந்திப்போம்.