Showing posts with label உதிரிகள் வேண்டாமே. Show all posts
Showing posts with label உதிரிகள் வேண்டாமே. Show all posts

Wednesday, January 1, 2020

ஒன்றல்ல! பத்து நல்ல விஷயங்களுடன் ஒரு ஆரம்பம்!

ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற்றுவிட்டாலும் ஆங்கிலேயர்களிடமிருந்து தொற்றிக் கொண்ட பல விஷயங்களை நம்மால் விட முடிந்ததா என்ன? பிறக்கும்  புதுவருடத்தில் நம்பிக்கையூட்டுகிறதாக ஒரு பத்து விஷயங்களை காங்கிரஸ் சார்புள்ள சேகர் குப்தா பட்டியலிட்டுச் சொல்கிறார். பொருளாதாரம் படுத்தே விட்டது, வங்கிகள் வராக்கடன் சுமையிலிருந்து மீளவே முடியாது, வேலையில்லாத் திண்டாட்டம் பெருகிக் கொண்டே போகிறது என்றே காங்கிரசும் இடதுசாரிகளும் கோயபல்சை மிஞ்சுகிற மாதிரி தொடர்ந்து ஊதிக் கொண்டே இருந்தாலும், ஒரு ஊடகக் காரராக சேகர் குப்தாவாலும் கூட, நேர்மறையான விஷயங்களை மறைக்க முடியவில்லை என்பதை இந்த 19 நிமிட வீடியோவில் பார்க்கமுடிவது ஒரு நல்ல விஷயம்!
  

நேற்றைய பதிவில் நெல்லை கண்ணன் உளறல் குறித்து சுடசுட  ஒரு விவாதத்துக்கு ஏற்பாடு செய்திருந்த மதன் ரவிச்சந்திரன் போஸ்டர் ஒன்றைப் பகிர்ந்திருந்தேன். பார்த்தீர்களா?

  
நேற்றைக்கு ஒளிபரப்பான இந்த விவாதத்தை யூட்யூப் தளத்தில் தற்போது வரை 32,408 பேர் பார்த்திருக்கிறார்கள் என்பது எனக்கு ஆச்சரியத்தைத் தரவில்லை. கிஷோர் கே சுவாமி ஒருவரைத்தவிர, வேறு எந்தப் பங்கேற்பாளரும் ஜனங்களுக்கு அறிமுகமான பிரபலங்கள் இல்லை என்பதைக் கவனித்தீர்களானால் முழுக்க முழுக்க இத்தனை பார்வையாளர்கள்  மதன் ரவிச்சந்திரன் என்கிற வளர்ந்து வரும் ஊடகக்காரர் ஒருவருக்காக மட்டுமே பார்த்திருக்கிறார்கள் என்பதையும் புரிந்து கொள்ள முடியும்.

   
நெல்லை கண்ணன் வட்டார வழக்கில் இயல்பாகப் பேசியது குற்றமே இல்லை என்கிற மாதிரி இன்னொரு வலைப்பதிவுக்கு ஒரு பதில் வந்திருந்தது. நெல்லை கண்ணன் பேசியதன் வீடியோவைக் கவனித்துக் கேட்டிருந்தால் அவன் இவன் என்ற ஏகவசனம், சகட்டு மேனிக்கு தமிழக முதல்வர், துணை முதல்வர் இருவரைப் பற்றியும் சின்னத்தனமான விமரிசனம், ஜெயலலிதா அவரை 5 கோடி கொடுத்து விலைக்கு வாங்க முயன்றதில் தோற்றது, பிஜேபியின் KT ராகவனை ஜாதியைத்தொட்டுக் கேவலமாகப் பேசியது என்று ஏராளமான விஷயங்கள் இருந்ததைக் கேட்டிருக்க முடியும். ஒரேவரியில் சொல்வதானால் நல்ல தமிழ்ப்பேச்சாளராக பெயர்பெற்றிருந்த நெல்லை கண்ணன் வெற்றிகொண்டான் தீப்பொறி ஆறுமுகம் ரேஞ்சுக்கு இறங்கிவிட்டார்.  அப்படி இறங்கியதில் ஏகத்துக்கும் சறுக்கி விபரீதமாகப் புரிந்துகொள்ளப் படுகிற அளவுக்கும் போய்விட்டார்! எல்லாம் காசு செய்கிற வேலை!

மதன் ரவிச்சந்திரன் இந்த ஒருமணிநேர விவாதத்தை நல்லமுறையில் நடத்தியிருக்கிறார் என்பது இத்தனை பார்வையாளர்கள் யூட்யூப் தளத்தில் வந்து பார்த்திருக்கிறார்கள் என்பதாக வெளிப்பட்டிருக்கிறது.

தமிழக அரசியல்களம் கொஞ்சம் சுத்தமான காற்றை சுவாசிக்க வேண்டுமானால் திராவிடங்களின் பிடியில் இருந்து முழுமையாக விடுபட்டே ஆகவேண்டும். அதன் முதல் கட்டமாக விசிக, பாமக, இடதுசாரிகள் திருகல் முகன் காந்தி, வேல்முருகன், சுபவீ செட்டியார் போன்ற பலபத்து உதிரிகளைக் கழித்துக் கட்டியே ஆக வேண்டும் என்பதை நீண்டநாட்களாகவே இங்கே எழுதிக் கொண்டிருக்கிறேன்.

இந்தப்புது ஆண்டு அதற்கான முன்னோட்டக் களமாக   அமைய வேண்டும் என்பதைத் தவிர இந்த மண்ணை நேசிக்கிறவர்களுக்கு வேறென்ன ஆசை இருந்துவிட முடியும்?

மீண்டும் சந்திப்போம்.            
      

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)