சமீபகாலங்களில் என்னை மிகவும் வியப்படைய வைத்த பகிர்வுகள், காணொளிகள் என்று பார்க்கும் போது தொழில்முறை ஊடகக்காரராகவோ, முழுநேர அரசியல்வாதியாகவோ இல்லாத திரு M மாரிதாஸ் முதலிடம் பெறுகிறார். ஒரு இயக்கமாகச் செய்திருக்க வேண்டிய வேலையை ஒரு சிறுகுழுவுடன் சேர்ந்து செய்து காட்டியிருக்கிறார் என்பது சிறப்பு.ஒரு ஆசிரியராக இருப்பது அவருடைய கூடுதல் பலம்.
வெறும் காமெடியனாக இருந்த நாட்களில் எஸ் வி சேகர் ஊடக வெளிச்சத்துக்காக அலைந்த மாதிரித் தெரியவில்லை. ஆனால் அரசியலில் நுழைந்த பிறகு ஊடகவெளிச்சம் வேண்டியிருக்கிறதே!
இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் தனியாகவே ஒரு யூட்யூப் சேனல் ஆரம்பித்தால் போதுமே! SVES50 TVஎன்று ஒன்றைத்தனியாகவே ஆரம்பித்துவிட்டார் போல!
K T ராகவன்! பிஜேபியின் மாநிலச் செயலாளர்களில் ஒருவர்! தொலைக்காட்சி விவாதங்களில் ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக அதே நேரம் வலுவாகத் தன் தரப்பு வாதங்களை எடுத்து வைக்கிறவர். தமிழகத்தில் கண்ணியமான ஒரு அரசியல்வாதி. நீட் தேர்வைக் குறித்து இசுடாலினுக்கு ஒரு பகிரங்கமான சவால் விடுகிறார். தமிழிசைக்கு அடுத்து பிஜேபியின் மாநிலத்து தலைமைக்கு வரக்கூடுமென்று முகநூல் வட்டாரங்களில் ஒரு தகவல் உலாவருகிறது.
திரு ராகவன் பிஜேபியின் மாநிலத் தலைமைப் பொறுப்புக்கு வருவாரேயானால் அது வரவேற்கப்பட வேண்டிய நல்ல செய்திதான்!
அரசியல் தெரிந்துகொள்ள, அரசியல் பழக உதவியாக இருக்கக் கூடிய மூன்று காணொளிகள் இவை என்றே நினைக்கிறேன்.
மீண்டும் சந்திப்போம்.
அடுத்தவீடு ஆந்திரா! YSRCPயின் நாடகத்தனமான அரசியல்! வாசித்தீர்களா? என்ன நினைக்கிறீர்கள்?
//திரு ராகவன் பிஜேபியின் மாநிலத் தலைமைப் பொறுப்புக்கு வருவாரேயானால் அது வரவேற்கப்பட வேண்டிய நல்ல செய்திதான்!//
ReplyDeleteராகவனின் பிரிவினவாதம், பயங்கரவாதத்திற்கு எதிரான நல்ல கருத்துகளை கேட்டிருக்கிறேன்.