1964 இல் ராஜ்கபூர், ராஜேந்திர குமார், வைஜயந்தி மாலா நடித்து வெளிவந்த படம் சங்கம் வழக்கமான முக்கோணக் காதல் கதைதான்! ஆனால் கொஞ்சம் வித்தியாசமான க்ளைமாக்ஸ், வசனம் என்பதோடு ஷங்கர் ஜெய்கிஷன் இசையமைப்பில் அத்தனை பாடல்களும் ஹிட்டான படம்.
பள்ளிமாணவனாக இருந்த நாட்களில் இந்தப்படத்தின் பாடல்களைக் விரும்பிக் கேட்டதோடு மொழி தெரியாதபோதே மதுரை சென்ட்ரல் தியேட்டரில் படத்தையும் பார்த்ததாக நினைவு! தியேட்டர் வேறாகக் கூட இருக்கலாம்.
சுந்தர் (ராஜ் கபூர் ) கோபால் (ராஜேந்திர குமார் ) இருவரும் நண்பர்கள். சினிமா இலக்கணப்படி சுந்தர் கொஞ்சம் வசதிக் குறைச்சலானவன் கோபால் பணம்படைத்தவன். இருவருமே ஒரே பெண்ணைக் காதலிக்கிறார்கள் ராதா(வைஜயந்தி மாலா) என்கிற அந்தப்பெண்ணுக்கோ கோபால் மீது காதல்! கோபாலின் பொருட்டு ராதா சுந்தரின் காதல் அப்ரோச்சை சகித்துக் கொள்கிறாள்! என்ன வழக்கமான முக்கோணம் தானே என்று தள்ளிவிடமுடியாதபடி கோபால் தன்னுடைய காதலை விட சுந்தருடைய நண்பனாக இருப்பதையே முக்கியமானதாக நினைக்கிறான்.
ராதா மனதைக்கவருவதற்காக சுந்தர் விமானப்படையில் பைலட்டாகச் சேருகிறான்.யுத்தத்தில் ஹீரோவாக, மரணம் அடைந்துவிட்டதாகக் கருதப்படுகிற நிலையில் ராதா கோபால் நெருக்கம் அதிகமாகிறது.
இறந்துபோய்விட்டதாக நினைத்துக்கொள்ளப்பட்ட சுந்தர் விமானப்படை சீருடை மெடல்களோடு திரும்ப வந்து நிற்கையில் முக்கோணம் மறுபடியும் முன்னே வந்து நிற்கிறது. கோபால் நண்பனுக்காக ராதாவை தியாக சிகரமாக விட்டுக் கொடுக்கிறான்.
கதை முடிந்தது என்றுதானே நினைக்கிறீர்கள்? மூன்றரை மணி நேரப்படத்தில் முக்கோண முடிச்சு அவ்வளவு எளிதாக அவிழ்ந்து விடுமா என்ன?!
அப்படி கதை முடிச்சு அவிழ்க்கப்படுவதில் தான் இன்றைக்கு 2019 இலும் கூடப் பார்க்க முடிகிற சிறந்த படமாக சங்கம் இருக்கிறது.
ராதா தன்னுடைய உணர்வுகளுக்கு கொஞ்சமும் மதிப்புக் கொடுக்காமல், ஏதோ ஒரு பொருளைக் கைமாற்றுவதை போல கோபால் தன்னை சுந்தரிடம் தள்ளிவிடுவதை ஏற்க மறுக்கிறாள். நண்பர்கள் இருவரையும் விடத் தெளிவாக முடிவெடுத்து சுந்தரின் மனைவியாகவே ஆகிவிடுகிறாள்.
ஐரோப்பாவுக்கு ஹனிமூன் போகிற இடத்தில் சுந்தர் கொஞ்சம் கவர்ச்சிகரமான நடனம் பார்க்க ஆசைப்படுவதைத் தடுக்கிற ராதா, தானே அறையில் கவர்ச்சியாக ஆடி சுந்தரை வியக்க வைக்கிறாள். அந்த நாகரீகப்பெண்கள் வெர்சஸ் குடும்பக் குத்துவிளக்கு என்கிற சுந்தரை நன்றாகவே நையாண்டி செய்கிறாள். கதை இப்படியே நல்லாவே போயிட்டிருந்தா எப்படி சாமி கதையில் ட்விஸ்ட் வரும்?
ட்விஸ்ட்டும் வருது! கல்யாணத்துக்கு முன்னால் ராதாவும் கோபாலும் நெருக்கமாக இருந்தது சுந்தருக்குத் தெரிய வருகிறது. இப்போது மனைவி /காதலியைத் தியாகம் செய்ய வேண்டிய முறை சுந்தருக்கு! ஆக இந்தக் கதையில் ஆண்கள் இருவருக்குமே பெண் என்ன நினைக்கிறாள் என்பதைப் பற்றிக் கொஞ்சமும் கவலையில்லை! தியாக சிகரங்களாகத் துடிக்கும் இருவருக்கிடையில் சிக்கிக் கொண்ட பெண் என்ன செய்வாள்?
தமிழ்ப்படமாக இருந்தால் பக்கம் பக்கமாக வசனம் பேசியே நம் கழுத்தில் தீட்டியிருப்பார்கள். இங்கே கொஞ்சம் அளவாக!
கங்கையும் யமுனையும் சங்கமிக்க வேண்டுமானால் மூன்றாவது நதியான சரஸ்வதி கண்ணுக்குத் தெரியாமல் அடிநீரோட்டமாக மறைந்து விடவேண்டுமென்று சொல்லிவிட்டு கோபால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு இறந்துபோகிறான்.
ஆக ராதா சுந்தர் இருவரும் சங்கமிக்கிறார்கள் என்று End Card போட்டுப் படத்தை முடிக்கிறார்கள். மூன்றரை மணிநேரம் என்று கொஞ்சம் கூட அலுப்புத்தட்டாமல் படம் போகிறது!
அது போதாதா?
சங்கம் கதை தெரிந்துகொண்டேன். ஓரிரு பாடல்களை ரசித்திருக்கிறேன். நண்பன் சுட்டுக்கொண்டு இறந்ததும் விற்கள் சந்தோஷமாக "அப்பாடா.. பிரச்னை தீர்ந்தது..." என்று வாழ்வைத் தொடர்கிறார்களாக்கும்!
ReplyDeleteஅப்படிச் சொல்ல முடியாது ஸ்ரீராம்! கதாநாயகிதான் தெளிவாக முடிவெடுத்து சுந்தரைக் கல்யாணம் செய்து கொண்டு வாழவும் ஆரம்பித்து விடுகிறாளே! இப்போது புதிய தியாகசிகரமாக மாற விரும்பும் கணவன், முன்னாடி ஆசைப்பட்டவன் இரண்டு பேருக்கு மத்தியில் மறுபடியும் குறுக்கே வராமல் பின்னவன் தன்னை மாய்த்துக் கொள்கிறான்! இதற்கு கங்கா யமுனா சரஸ்வதி என்று திரிவேணி சங்க(ம்)மமாக பன்ச் டயலாக் சொல்லி முடிக்கிறார்கள் பாருங்கள், அங்கே இருக்கிறது க்ளாஸிக் டச்! :-))))
DeleteI saw the film in 1966 at Karaikudi. Then in 1970 at pudukkottai. Now also I like that picture. Beautiful locations, songs, good actors, different camera angles, good screen play. AS you mentioned, the change of mind of heroine was clearly shown in first night scene. Still I remember kumudam review. Almost in same lines Sridhar directed one film. nenchirukkum varai. it was a failure.
ReplyDeleteநெஞ்சிருக்கும் வரை கதைக்கும் சங்கம் படத்துக்கும் முக்கோணக்காதல் என்பதைத்தவிர வேறு சம்பந்தமே இல்லையே திரு. கோபால்சாமி!
Deletejust my opinion. Raj Kapoor's part is given to Sivaji. Just ulta. Here lovers got married. Doubting wife. Friend commits suicide. By this way I compared.
ReplyDelete